அந்த விடுதியின் அழைப்புமணியை அவன் அழுத்தினான்.
விடுதியின் உரிமையாளினிக் கதவைத்திறந்தவுடன், அவன் "ரோசி" என்றான். அதற்கு அவள் இங்கு ரோசிக்கு ரொம்ப கிராக்கி, மேலும் அவள் மிகவும் அழகானவள், ஆதலால் அவளின் ரேட் கொஞ்சம் அதிகமே என்றாள்.
அவன், பரவாயில்லை, எவ்வளவு என்றான். அதற்கு உரிமையாளினி, ஒரு லட்சம் ருபாய் என்றாள். உடனே அவன் அவளிடம் ஒரு ஆயிரம் ரூபாய்க் கட்டைக் கொடுத்தான். அனைத்தும் சலவை நோட்டுகள்.
பின்பு ரோசி வந்து அவனை அழைத்துக்கொண்டு, மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்றாள். பின்பு என்ன அவன் குஜாலாக இருந்து விட்டு, இரண்டு மணிநேரம் கழித்து விடுதியை விட்டுச் சென்றான்.
அடுத்த நாளும் அவன் அந்த விடுதிக்கு சென்று ரோசியைக் கேட்ட பொழுது உரிமையாளினி, ஒரு முறை ரோசியிடம் வந்தவர்கள் அவ்வளவு பணம் கொடுத்து திரும்ப வருவதில்லை, நீ வித்யாசமான ஆள்தான் என்றாள். இருந்தாலும் டிஸ்கவுண்ட் எல்லாம் கிடையாது என்றாள்.
அவன் அவள் கேட்ட ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்து, ரோசியிடம் இரண்டு மணி நேரம் தனி அறையில் இருந்து விட்டுச் சென்றான்.
மூன்றாவது நாளும் அவன் அங்கு வந்து ரோசியைக் கேட்டான். உரிமையாளினி இது எங்களுக்கு புதியதாக உள்ளது, பெரும் செல்வந்தர்களே, ரோசியை இரண்டாவது முறைக் கேட்டதில்லை, நீ மூன்றாவது நாளும் கேட்கிறாயே, மறுபடியும் சொல்கிறேன், குறைக்க மாடோம், அதே ஒரு லட்ச ருபாய் தான் என்றாள். மேலும் நீ என்ன முட்டாளா என்றாள்.
அவன் அன்றும் அவள் கேட்ட ஒரு லட்ச ரூபாய்க் கொடுத்து, ரோசியிடம் குஜாலாக இருந்தான். அவன் விடுதியை விட்டு வெளியே வரும்போது ரோசி அவனிடம் நீ வித்யாசமான மனிதனாக இருக்கிறாயே, உனக்கு எந்த ஊர் என்றாள்.
அவன் இருப்பிடத்தை சொன்னான். ரோசி அந்த ஊரில் தான் என்னுடைய அப்பாவும், அக்காளும் இருக்கிறார்கள் என்றாள்.
அதற்கு அவன், நான் உன்னுடைய அக்காவின் வக்கீல். உன் அப்பா இறந்து விட்டார். உனக்கு சேர வேண்டிய மூன்று லட்ச ருபாய் சொத்தைக் கொடுக்க வந்தேன் என்றான்.
நீதி: தலைப்பைப் பாருங்கள்.
பிடிச்சா ஓட்ட இங்கே போடுங்க
9 comments:
ரொம்ப நாளா தலைவர காநோம் ப்லோக் வேற புதுசுமாதறி தெரியுது... பழைய பதிவுகலவேற காணோம் ?
தலைப்பு பார்த்து வந்த என் நிஜார் போச்சே!
pinraapla. read my blog too
பித்தன் நான் சிறிது வேலை நிமித்தமாய் இந்திய சென்று திரும்பி வந்தேன். இந்த நேரத்தில் என் ப்லோக் களவாடப்பட்டுவிட்டது. என்னுடைய பழைய பதிவுகளை புதிய ப்லோக்ல் இணைக்க உள்ளேன். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி.
மறக்காம தமிளிஷ்லே ஓட்டப் போடுங்க.
கலையரசன் பின்னூட்டத்திற்கு நன்றி.
மறக்காம தமிளிஷ்லே ஓட்டப் போடுங்க.
விசா உங்களின் நடிகையின் கதையின், சொல்வீச்சும், நடையும் அற்புதமாக உள்ளது. நிறைய எழுதுங்கள்.
இந்த கொடுமைக்கு தான் நான் நிஜாரே போடறதில்லை. எப்பவும் நான் தயார் தான்.
காணாமல் போய் மீண்டு வந்த நண்பருக்கு நல்வரவு.. ஒரு வார்த்தை சொல்றது கிடையாதா? பழைய ப்ளாக் காணாம போச்சுன்னு..நான் எங்கடா ஆளைக் காணோம்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்.. மறுபடியும் குமால்டிக்கா கடைய நடத்த ஆரம்பிச்சுட்டீங்க.. வாழ்த்துக்கள்..
கார்த்திகைப் பாண்டியன் உங்கள் வரவுக்கு நன்றி, என்னுடைய ப்லோகை எலி கடிதத்தில் உங்களை இழந்து விடுவேனோ என்று நினைத்தேன்.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.