நான் விடுமுறைக்கு ஊர் சென்று திரும்பியதும் என் ப்லோகைத் திறந்தால் காணவில்லை. முதலில் அதிர்ச்சி அடைந்தேன். காரணம் புலப்படவில்லை.
எலிதான் என் வலைத்தளத்தை பிரித்து பிரித்து மேய்ந்து விட்டதோ.?
இல்லை மகிந்தவும், ங்க்கோத்தபாய ராஜபக்ஷேவும், பொன்சேகாவுடன் சேர்ந்து தமிழினத்தை அழிக்கும் பொழுது, என் வலைத்தளத்தையும் குண்டு போட்டு அழித்து விட்டார்களோ.?
இல்லை தமிழினத் தலைவர் குடும்பத்துடன் கூடி டில்லியில் கும்மி அடித்த பொழுது என் வலைக்கு வேட்டு வைத்தார்களோ. ?
இல்லை அம்மாவும், ஐயாவும், சைகொவும் தேர்தல் தோல்வியில் என் வலைக்கு ஆசிட் ஊத்திட்டாகளோ.?
ஒன்றும் புரிய வில்லை. முதலில் கூகிள் ஆண்டவரிடம் முறையிட்டேன். அவர் meta tag, html, என்று ஏதேதோ சொல்லி ஒரு வாரம் அலைக்கழித்து, பழுப்பு நிறத்தில் எலி கொதறிப்போட்ட வலை போல் உள்ளது. என் வலை சுத்தமாக காணவில்லை.
பிறகு சகப் பதிவரின் ஒரு பதிவைப் படித்த போதுதான் தெரிந்தது, இது "nTamil" கைவண்ணம் என்று. வாழ்க "nTamil"
முயற்சியில் மனம் தளராத விக்ரமன் போல், புதிய வலையை துவங்கினேன். கட்டம் கட்டமாக கட்டி அமைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. பிறகு ஒரு பதிவுப்போட்டு தமிளிஷ் லே வந்துள்ளது.
அனால் நான் இழந்தது என்னுடைய பின் தொடர்பவர்களை. "உப்பு மடச்சந்தி ஹேமா, அகநாழிகை, ஆதவா, நைஜீரியா ராகவன் இன்னும் எண்ணற்ற பலர்.மேலும் என்னுடைய பதிவுகளையும், அதைவிட அருமையானப் பின்னூட்டங்களையும்.
என்னுடைய பதிவுகளை நான் கோப்பி செய்தி வைத்திருக்கிறேன். அவற்றை மீள் பதிவாக இடுவதில் தயக்கமிருக்கிறது. படித்ததையே படிப்பதற்கு மற்றவர்களுக்கு என்ன வேலை வெட்டியா இல்லை. இவனிடம் சரக்கு இல்லை என்று நினைத்து விடுவார்களோ போன்ற பல எண்ணங்கள். ஆனால் போடாமல் இருக்கவும் முடியவில்லை.
கை அரித்துக் கொண்டிருக்கிறது. எங்கு தொடங்குவது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
6 comments:
திரு கும்மச்சி அவர்களே இது அரசியல் சக்திகளின் அடக்குமுறைகளில் ஒன்று என்று நான் நினைக்குறேன், மத்தியில் ஆட்ச்சியமைக்கவிருந்தவர்களுக்கு நீங்கள் பெரும் சவாலாக இருப்பீர்கள் என்று கருதியே எலியை விட்டு உங்கள் வலைகளை உருத்தெரியாமல் அழித்து இருக்க கூடும்..
சனநாயகம் செத்துவிட்டது, கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது
இதை நான் வன்மையாக கண்டித்து ஐந்துமணி நேரம் உண்ணாவிருதம் இருக்க போகின்றேன்....
-பித்தன்
*****
பழைய பதிவுகள திரும்பி இடுங்கள்... இது உங்கள் இடம், உங்கள் பதிவு ... கலக்குங்கள்,,, அருமையான எழுத்துநடை வாழ்த்துக்கள் :)
word verificationa eduthuvidungal
அனுபவம்தான் பாடம். நல்ல வேலை பழைய இடுகைகளை சேர்த்து வைத்து இருந்தீர்களே. திரும்பவும் போடுங்க, படிக்க நாங்க இருக்கின்றோம்.
Please remove the word verification. தமிழில் தட்டச்சு செய்துவிட்டு, ஆங்கிலத்தில் மாறி, இது ரொம்ப லொள்ளு. கமெண்ட் மாடரேஷன் வச்சு இருக்கீங்க. அதுவே போதுமானது.
இராகவன், பித்தன் உங்கள் இருவரின் ஆதரவுக்கும், அறிவுரைக்கும் நன்றி. word verification நீக்கப் பட்டுவிட்டது.
// கும்மாச்சி said...
இராகவன், பித்தன் உங்கள் இருவரின் ஆதரவுக்கும், அறிவுரைக்கும் நன்றி. word verification நீக்கப் பட்டுவிட்டது. //
நன்றி. word verification - ஐ எடுத்தத்திற்கு
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.