
இன்று காலையில் ஒரு பதிவர் "க்ரிஷ்ணவானீ" என்று நினைக்கிறேன் ஒரு நடிகையைப் பற்றிய செய்தி கொடுத்துவிட்டு திரையில் கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் உள்ள ஆறு வித்யாசங்களை கேட்டிருந்தார்கள்,
என்னுடையக் கருத்தில் உள்ளதை பட்டியலிடுகிறேன்.
1) ஒரு திரைப்படத்தில் நடிகை ஆடை அவிழ்ப்பதைக் காண்பித்தால் அது கவர்ச்சி, அவிழத்தபின் காண்பித்தால் ஆபாசம்.
2)ஒரு கதாநாயகன் திரையில் கதாநாயகி குளிப்பதை மறைந்திருந்து பார்த்தால் அது கவர்ச்சியில் வந்துவிடும். கதாநாயகியின் சகோதரியோ, அம்மாவோ குளிப்பதைப் பார்த்தால் அது ஆபாசம், முதுகு தேய்த்துவிட்டால், அருவருப்பாகிவிடும். (இல்லிங்கோ நான் வருங்கால முதல்வரைச் சொல்லலீங்கோ)
3)கதாநாயகி மத்தியப் பிரதேசத்தையும், மார்பின் பிளவும் காண்பித்தால் கவர்ச்சி, அதே கதாநாயகி மத்தியப்ரதேசத்தில் ஒட்டுத்துணி கட்டி மற்ற ப்ரதேசத்தில் காற்று வாங்க விட்டால் அது ஆபாசம்.
4)நடனக்கட்சியில் ஒரு முழம் துணியை இடுப்பில் செருகிக்கொண்டு, மத்தியப் பிரதேசத்தையும் அல்குலையும் பக்கவாட்டில் அசைத்தால் கவர்ச்சி, முன்னும் பின்னும் அசைத்தால் ஆபாசம்.
5)கதாநாயகன் கதாநாயகியின் தொப்புளில், முத்தம், பம்பரம், மண், தக்காளி, ஆம்லட் முதலியவற்றை இடலாம், இதெல்லாம் கவர்ச்சிக்குள் அடங்கிவிடும், மவனே கொத்து பரோட்டா போடறது ட்டூ....மச்... ஆபாசமாயிடும்.

அடுத்த வித்யாசம் ரொம்ப முக்கியமுங்கோ....;
கதாநாயகன். கொப்பும் கொலையுமா இருக்கிற கதாநாயகியைப் பார்த்து நாக்கை வெளியே நீட்டி உதட்டைச் சுழித்து "ஏய் நீ எனக்கு வேணும்" என்றால் கவர்ச்சி. ஆனால் வில்லன் மப்பும் மந்தாரமாக இருக்கும் பொழுது அதே கொப்பும் கொலையுமா இருக்கிற கதாநாயகியைப் பார்த்து "ஏய் நீ எனக்கு வேணும்" என்றால் அது ஆபாசம்.
இன்னும் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றன, ஆறு வித்யாசமே கேட்டதால் ஆறு தான் கொடுத்துள்ளேன்.
சரிங்க படிசுட்டிங்க இல்ல, வோட்ட சும்ம்மா கவர்ச்சியா குத்துங்கோய்............
ஆஹா எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கைய்யா.........
ReplyDeletenice definiton and explanation. but this is the fact. i endorse yr definition.
ReplyDeleteI understood. I am clear now. thanks for tuition.
ReplyDeleteகவலையே படாதீங்க தல ஹிட்ஸ் சில ஆயிரம் தாண்டிவிடும்
ReplyDeleteமிக நல்ல அலசல்...
ReplyDeleteகீப் இட் அப்...
ஓட்டுப் போட்டாச்சுங்க......
ஹா ஹா...
ReplyDeleteமிகவும் ரசித்தது...
(இல்லிங்கோ நான் வருங்கால முதல்வரைச் சொல்லலீங்கோ)