Pages

Tuesday, 23 June 2009

மெல்லத் தமிழ்...........................




மெல்ல தமிழ் இனி சாகும்,
பாரதியின் வரிகள்,
அவரவர் வசதிக்கேற்ப,
மேடைகளிலும் ஏடுகளிலும்,
சாகடிக்கப்படுகிறது.

மெல்ல தமிழ் இனி சாகும்,
பாரதியின் வரிகள்,
பொய்யாகும் நேரம்,
மேடைகளிலும் ஏடுகளிலும்,
புதிய வேகத்துடன் சாகடிக்கப்படுகிறது.

மேடைப் பேச்சாளினி, பெயரோ,
எழிலரசி, உச்சரிப்பில்,
எலிலர்ஸி.
"தமில் வலர்பொம்" தலைப்பில்
கவிதைப் படிக்கிறாள்.
“இனியத் தமில் மக்கலே,
தமில் வலர்பொம்,
தமிலில் பேசுவோம்,
தமில் எங்கல் மூச்சு.
வீல்வது நாமாகினும், இனி
வால்வது தமிலாகட்டும்.
வால்கத் தமில்”.

யார் சொன்னது, மெல்ல தமிழ் இனி சாகும்,
என்று.



நட்பு


எனக்குள்ளிருக்கும் உன் நினைவு,
உனக்குள்ளிருக்கும் என் நினைவு,
சடுதியில் நின்ற நம் உறவு,
வாழ்வில் மறையும் இந்நிகழ்வு.


மேலே உள்ள இரண்டிற்கும் தொடர்பு இருக்கிறது, ஊகிக்க முடிந்தவர்கள் ஊகித்துக் கொள்க.

ஆனா மறக்காம வோட்டபோடுங்க சாமி................

6 comments:

  1. ஹூம்.. அடிச்சு ஆடுங்க!!

    ஓட்டும் போட்டாச்சு!!

    ReplyDelete
  2. ஆதரவிற்கு நன்றி கலையரசன்.

    ReplyDelete
  3. இன்றைய தமிழின் நிலை இதுதான் சரியாகச்சொன்னீர்கள் ....

    ReplyDelete
  4. இன்றைய தமிழின் நிலை இதுதான் சரியாகச்சொன்னீர்கள் ....

    ReplyDelete
  5. தமிழ் இனி மெல்ல சாகும் என்றந்தப் பேதை உரைத்தான் என்று தான் பாரதி கூறினாரே தவிர, நீங்கள் குறிப்பிட்டது போல அல்ல. "பாரதியின் வரிகள்
    பொய்" என்று கும்மாச்சி சொல்லி இருக்காரு இந்தக் கவிதையில் என்றால் அது சரியா?

    ReplyDelete
  6. sariyaga soneergal, தமிழ் பையன்

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.