Pages

Wednesday, 1 July 2009

கவுஜ -கண்மனிக்கு கடிதம்


கூத்தியா கொடுத்த குலக்கொழுந்தே,
நாம கூடி அடிச்ச கும்மியிலே
கூறு கெட்டு போனதடி,
நம் தமிழின நாடகம்.

அச்சம் கொள்ளாதே,
உடன் பிறப்புகள் உன்மத்தம் கொண்டு,
உதிரம் கொட்டி, உண்டி குலுக்குவார்கள்,
நாம ஊடு கட்டி அடிக்கலாம் கொள்ளை....
அவாளெல்லாம் ஆவேசம் கொண்டு,
பத்திரிகையிலே பாடும் பல்லவியை,
நாம் துச்சமென மிதிப்போம்.

அஞ்சா குஞ்சன் உண்டு நம் படையில்,
தொளபதி தொண்டவராயனும் உண்டு,
குடி உயர கோமகனும் உண்டு,
மேலுறார், பாற்காட்டார், வேராசிரியர்,
மற்றும் சுட்டெரிக்கும் சூரியனை,
டாஸ்மாக்கில் தண்ணியடித்து,
பிரியாணி தின்று, தூக்கி நிறுத்தும்,
தொண்டர் படையுண்டு.

கூத்தியா கொடுத்த குலகொழுந்தே,
அஞ்சாதே கோமளமே,
பதவிச்சுமை காத்திருக்க,
குடும்பத்திலே குழப்பம் வேண்டாம்,

வீழ்வது தமிழினமாயிருப்பிலும்,
வாழ்வது நம் குடியாயிருக்கும்.

6 comments:

  1. கவிதை ஓ.கே ரகம் தான் ஆனா பிகரு சூப்பர்

    ReplyDelete
  2. சூபரப்பு!

    ReplyDelete
  3. செமித்தியா இருக்கு...
    நஜமா கவிததான்!

    ReplyDelete
  4. உள் குத்துதான், நன்றி கார்த்திகைபாண்டியன், கலையரசன்.

    ReplyDelete
  5. அண்ணே யாரு இந்த பிப்பா??

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.