மோகனுக்கு அன்று வேலை முன்னதாகவே முடிந்து விட்டது. உடனே ஊருக்கு திரும்பவும் முடியாது. மறுநாள் மாலைதான் விமானத்தில் டிக்கெட் போட்டிருந்தாள், ரோசி அவனுடைய காரியதர்சினி. ஹெட் ஆபிசுக்கு தொடர்புகொண்டு அவளை டிக்கெட்டை அன்று மாலையே மாற்ற முடியுமா என்று கேட்டான். அன்று எல்லா விமானமும் "ஓவர் புக்டாம்". மணி இரண்டுதான் ஆகியிருந்தது. மறுநாள் மாலை வரை என்ன செய்வது என்று தெரியவில்லை. ஓட்டல் அறையில் எவ்வளவு நேரம் தான் டிவி பார்த்துக்கொண்டிருப்பது. ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டு எப்படியோ நான்கு மணிவரை பொழுதைக் கழித்துவிட்டான்.
பிறகு வெளியே புறப்பட ஆயத்தமானான். எங்கே போவது என்று தெரியவில்லை. ஓட்டலை விட்டு வெளியே வந்து காலாற நடந்தான். ஒருகடையில் நுழைந்து மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கினான். மறுபடியும் அறைக்கு வந்து அவற்றை பெட்டியில் வைத்துப் பூட்டினான். மணி ஆறாகியிருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த ஓட்டலின் "ரூப் கார்டனுக்கு" சென்று கடைசியில் ஓரமாக இருந்த மேஜையில் அமர்ந்து கொண்டான். வைட்டரிடம் ஒரு பீர் ஆர்டர் செய்துகொண்டு, மெதுவாக சப்ப ஆரம்பித்தான்.
அப்பொழுதுதான் அந்த இடத்தில் மெதுவாக மேசைகள் நிரம்ப ஆரம்பித்தன. கையில் இருந்த " Ipod" ஐ ஆன் செய்து சும்மா தட்டிகொண்டிருந்தான். அப்போது "எக்ஸ்க்யுஸ் மீ" என்ற குரல் கேட்டு குரல் கொடுத்தவளை பார்த்தான். ஒரு நவ நாகரீக நங்கை இன்னும் மூன்று நங்கைகளுடன் நின்றுகொண்டிருந்தாள். "Do you mind if we sit here" என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் கேட்டாள். அவர்களை அமர்ந்துகொள்ளச் சொன்னான். கேட்டவள் மோகனின் அருகிலும் மற்றவர்கள் எதிர்புறமும், பக்கவாட்டிலும் அமர்ந்து கொண்டனர்.
அருகில் அமர்ந்தவள் மெதுவாக மோகனிடம் பேச ஆரம்பித்தாள். எதிரில் இருப்பவர்களையும் அறிமுகப் படுத்தினாள். பிறகு மோகனிடம் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று ஆங்கிலத்தில் கேட்டாள். மோகன் வேண்டாம் என்றாலும் அவனுக்காக இன்னும் ஒரு பீர் ஆர்டர் செய்து, மற்ற எல்லோருக்கும் "gin with lime cordial" ஆர்டர் செய்தாள். பின்பு நால்வரும் சரளமாக மோகனுடன் பேச ஆரம்பித்தனர். அருகில் அமர்ந்தவள் அகஸ்மாத்தாக படுவது போல் மோகனின் தொடை மேல் கை வைத்தாள். மோகனின் ரத்த நாளங்கள் முறுக்கிக் கொண்டன.
பின்பு டின்னெர் ஆர்டர் செய்தனர். ட்ரிங்க்ஸ் பில் வந்த பொழுது ஒருவள் பிடுங்கி குடுப்பது போல் பாவனை செய்ய, மோகனின் தன்மானம் இடம் கொடுக்காமல் பில் கொடுத்தான். (கம்பெனி கணக்கில் சேர்த்துக் கொள்ளளலாம்) . அருகில் அமர்ந்தவள் மோகனை தடவிக் கொண்டே மிக அருகாமையில் வந்து " Do you wanna jump" என்றாள். மோகனின் நரம்புகள் ஓவர்டைம் செய்ய ஆரம்பித்தன. நீங்கள் இந்த ஓட்டலில் தானே தங்கி இருக்கிறீர்கள், வாங்க ரூமுக்கு போய் வரலாம் என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.
மோகனின் தயக்கத்தை சபலம் வெல்ல ஆரம்பித்தது. அவளை கூட்டிக் கொண்டு ரூமுக்கு சென்றான். அறை கதவை மூடியவுடன், அவள் தன் உடைகளை தளர்த்தி மோகனை இறுக அனைத்துக் கொண்டாள். உடன் அவள் செல் போன் அலற ஆரம்பித்தது. அவள் அதை எடுத்து எதோ சொல்லிவிட்டு வாங்க நாம பிறகு வரலாம், "restaurant" போய் விடுவோம் என்றாள். அவர்கள் போகும் வழியில் “நீங்க போங்க நான் டாய்லெட் சென்று வருகிறேன்” என்று கழண்டு கொண்டாள். மோகன் திரும்ப "restaurant" வந்த பொழுது, மற்ற நங்கைகளை காணவில்லை. அவன் டேபிள் காலியாக இருந்தது. அப்பொழுது தான் அவனுக்கு அவ்விடத்தில் தன்னுடைய "ipod" அங்கே விட்டு சென்றதையும், அது காணாமல் போனதும் புரிய ஆரம்பித்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அவனிடம் வந்து “என்ன சார் எல்லாம் போயிடுச்சா. நீங்க ரொம்ப லக்கி. இந்த குரூப் இது இங்க வழக்கமா பண்ற வியாபாரம் தான். உங்க கதையிலே எங்கேயோ தப்பு நடந்திருக்கு, நீங்க ரூமுக்கு போனவுடன் ஒரு சப் இன்ஸ்பெக்டர் வந்து கதவை தட்டுவான். நீங்க திறந்தவுடன் உங்களை அர்ரஸ்ட் செய்வதாக சொல்லி செமையாக கறந்துவிடுவான். பின்பு அவளையும் அர்ரஸ்ட் செய்வது போல் சொல்லி கூட்டி செல்வான். இந்த வித்தையை இவர்கள் கூட்டாகத்தான் செய்கிறார்கள்”.
மோகனுக்கு தன் அதிர்ஷ்டம் கைகொடுத்ததை நம்பி மகிழ்ச்சியானாலும், தன் "Ipod" பணமும் போனதில் மிக்க வருத்தம், மேலும் தான் ஏமாற்றப்பட்டதில் ஒரு குற்ற உணர்ச்சி.
அடுத்தமுறை இந்த மாதிரி நடந்தால் தான் கொண்டு வந்தப் பொருள்களை நியாபகமாக ரூமுக்கு எடுத்து செல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
7 comments:
சொந்தக்கதை சோகக்கதை.. நெஞ்சுக்குள் நிக்குறதே..
So sad ;-)
கார்த்திகைப் பாண்டியன், என்ன சொந்தக்கதைன்னு என்னை வம்புல மாட்டறீங்க. பின்னூட்டத்திற்கு நன்றி.
கும்முனு ஆரம்பிச்சு..கடைசில மோகனுக்கு ஆப்பு வச்சிட்டீங்க !!
nice story.
Aha..
//
அடுத்தமுறை இந்த மாதிரி நடந்தால் தான் கொண்டு வந்தப் பொருள்களை நியாபகமாக ரூமுக்கு எடுத்து செல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
nice
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.