Pages

Wednesday, 8 July 2009

ஹைக்கூ (இரண்டாம் பாகம்)


துபாய்

கையில் கொல்லர் கரண்டி,
கண்கள் விண்ணைத்தாண்டி,
விடுமுறை விடியல்.

வெள்ளம்

ஆற்றில் நடுவே, தத்தளிக்கும் சிறுமி,
கரையில் ஆனந்தக் குளியல்,
தாய்.

நூறாவது நாள்

நூறாவது நேர்காணல்,
கோப்பில் அழைப்பிதழ்,
தலைவர் பட நூறாவதுநாள்.
.
தந்தையர் தினம்

தந்தையர்தின வாழ்த்து,
கிழவன் கோலாகலக் கொண்டாட்டத்தில்,
முதியோர் இல்லம்.

6 comments:

  1. நன்றாக உள்ளது அண்ணா

    ReplyDelete
  2. பின்னூட்டத்திற்கு நன்றி

    ReplyDelete
  3. நல்ல கவிதைகள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. நல்லா இருக்கு

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.