என்னிடம் பணிபுரியும் "உள்ளூர் மண்ணின் மைந்தருக்கு" கல்யாணம். அழைப்பிதழ் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இது நான் முதல் முதல் போகும் அரபு நாட்டுக் கல்யாணம். ஊருக்கு நடுவே பொறம்போக்கு நிலத்தில் டென்ட் போட்டு, குளிர்சாதன வசதியுடன், ஒரு ஆயிரம் பேர் புழங்க வசதியுள்ள இடம். நான்கு பக்கமும் இருக்கைகள் போட்டிருந்தார்கள். ஆனால் மொத்தம் நூறு பேர்தான் இருந்தார்கள்.
நான் போகிறேன் என்று சொன்னவுடன், என்னுடன் ஒரு ஆறுபேர் சேர்ந்துகொண்டார்கள். எல்லோரும் கலக்ஷன் போட்டு, ஒரு கைக்கடிகாரமும்,பேனா செட்டும் வாங்கிவிட்டோம். ஆறுபேரும் என் வீட்டுக்கு வந்து பிறகு என் வண்டியில் போவதாக முடிவாகிவிட்டது. ஒருவன் "தீர்த்தவாரி" ஆரம்பித்து பிறகு போகலாம் என்றான். நான் அதெல்லாம் மரியாதையாக இருக்காது, கிளம்புங்க போகலாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றேன்.
கல்யாண மண்டபம் (டென்ட்) அடைந்தவுடன், நேராக நம்ம மாப்பிள்ளைப் பையன் உள்ளூர் உடையின் மேலே ஒரு கருப்பு அங்கி அணிந்து கொண்டு அதே போல உடையில் அவனுடன் இருவர் நடுநாயகமாக நின்று கொண்டிருந்தனர். நண்பர் குழு பரிசை என்னிடம் கொடுத்து, கொடுக்க சொன்னார்கள், நான் அவனிடம் கொடுத்து வாழ்த்து சொல்லும் பொழுது, அருகில் இருந்த கருப்பு அங்கி நான் அவனுடைய அப்பா எனக்கும் எதாவது கொடுங்கள் என்று சொன்னார். (அந்த இடத்தில் பரிசு கொடுத்த ஒரே சிகாமணிகள் நாங்கள் தான், அவர்களுக்கு இந்த பழக்கம் கிடையாது போலிருக்கிறது).
இப்பொழுது தொழுகை நேரம் வரவே, அனைவரும் தொழுதார்கள். பிறகு இசையும் நடனமும் தொடங்கிற்று. இது நம்ம ஊரு "யாரு வூட்ல பார்ட்டி எங்க வூட்ல பார்ட்டி" டைப் கிடையாது. இது கூறிய வாளை வைத்துக் கொண்டு, தப்படித்துக் கொண்டே பாடுவார்கள். எல்லாப் பாட்டும் ஒரே ராகத்தில் தான் இருக்கும்.
சாப்பாடு போட டைம் ஆகும் போல இருந்தது.
நிற்க, கல்யாண இடத்தில் எதாவது பிகர் வரும் என்றால், மருந்துக்கு ஒன்னு கூட கிடையாது. சுத்தமான நம்மக் கூட்டம்தான்.
நண்பன் சொன்னான், இதே போல பெண் வீட்டில் பார்ட்டி நடக்குமாம், அங்கே வீடியோ கூட பெண்கள்தான் எடுப்பார்களாம். அங்கு ஆண் வாசனையே இருக்ககூடதாம்.
இந்த இரண்டு பார்ட்டியும் முடிந்தவுடன் மாபிள்ளை மட்டும் பெண்வீட்டு பார்ட்டியில் என்ட்ரி கொடுப்பாராம்.
ஆஹா நம்ம ஊருலே கல்யாணம்னா பட்டுபுடவை சரசரக்க,, நகை கடையே ஏறக்குறைய அணிந்துகொண்டு, கடைக்கண் பார்வை பார்க்கும் கன்னிகைகள் கல்யாண மண்டபத்தை அலங்கரிப்பார்கள்.
செல்லச் சிணுங்கல்களும், மொக்கை ஜோக்குகளும், அவையில் நிறையும் அற்புதம். ஒருக் கல்யாணத்தில் மற்றுமொரு கல்யாணம் முடிய அச்சாரம். இதெல்லாம் இங்குக் கிடையாது போலிருக்கிறது.
போங்கடா, நீங்களும் உங்கக் கல்யாணமும் என்று, அங்கிருந்து கிளம்பி, பெர்கேர்கிங்கில் சப்ப மூக்கி “பிளிபைநியிடம்” சல்லிசாக "பெர்கர்" வாங்கி சரக்கடித்து மட்டையானோம்.
8 comments:
:) SUPER PIC!! - SHOW IT TO P.Deva..
நல்லதொரு இடுகை வாழ்த்துக்கள்...
// பெர்கேர்கிங்கில் சப்ப மூக்கி “பிளிபைநியிடம்” சல்லிசாக "பெர்கர்" வாங்கி சரக்கடித்து மட்டையானோம்.
அண்ணாத்த அவர்களிடம் நல்லா
//கடல போடலாம் தானே //
இதெல்லாம் ஒர்தர் சொல்லியா தரனும் .
நண்பர் கும்மாச்சி இங்கு நானும் ஒரு அரபி வீடு திருமணத்திற்கு சென்ற அனுபவம் உண்டு,உங்களுக்கும் அதே அனுபவமா?
நல்ல அழகிய அரபு பெண்களை நீங்கள் மால்களில் மட்டுமே பார்க்கலாம்.
இங்கு சர்வ சாதாரணம்.
நல்ல பேரழகிகள்.
ஆண் பெண் இருபாலரும் உடம்பை பேணி காப்பவர்கள்
ஒரு முறை துபாய் மால் வாங்க
ஒட்டு போட்டாச்சுங்க
நம்ம பதிவை கொஞ்சம் கண்டுகோங்க தலை.
Worst post I have ever read. If you want to see girls then go to malls, etc where they will be. Since you bought a gift and could see no girls you are writing this post in anger. And none will believe if you say, maappillai's father asked for a gift. If they can arrange for such a very big tent and party, why will he ask for a gift with you....
:-)))))))))
ஹா..ஹா..
ha! ha!!
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.