Pages

Tuesday, 21 July 2009

அம்மாவிடம் மருத்துவர் ஐயாவுக்குப் பிடித்தப் பத்து................. கிளம்பிட்டானுங்கையா..........


1)என்னதான் திட்டித்தீர்த்தாலும் மறுபடியும் ஒருவித வெற்று சிரிப்போடு கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுதல்.

2)ஒவ்வொருமுறை காலில் விழும் பொழுதும், சிரிக்கும் ஆணவச் சிரிப்பு.

3)கூட்டணி பேரத்தில் கலைஞர் எவ்வளவு சீட் கொடுப்பாருன்னு முன்பே அறிந்ததுபோல அதைவிட கூட கொடுப்பதாக நினைத்து, குறைத்துக் கொடுக்கும் தந்திரம்.

4)எவ்வளவு சீட் கொடுத்தாலும், கூடவே கொடுக்கும் பெட்டிகள்.

5)தோத்துப் போனாலும், தொடர்ந்து குறை சொல்லாமல் இருப்பது.

6)கொடுத்ததை திரும்ப கேட்காமல் இருப்பது.

7)ராஜ்ய சபை சீட் கேட்டபொழுதும் அது மகனுக்குத்தானே என்று கேட்டு தர்ம சங்கடப் படுத்தாமல் இருந்தது.

8)அடுத்த கூட்டணிக்கு அச்சாரமாக இன்னும் திட்டி அறிக்கை விடாமல் இருப்பது.

9)இன்னும் தோழி காலில் விழ சொல்லாமல் இருப்பது.

10)சீட்டுக் கணக்கு பார்த்து உணவு வகைகள் பரிமாறுவது. ( தண்ணி, சோறு, சாம்பார், வத்தல், எண்ணெய், மோரு என்று ஆறு வகைதான் போட்டது)

9 comments:

  1. குசும்ப்”ஐயா”

    ReplyDelete
  2. //இன்னும் தோழி காலில் விழ சொல்லாமல் இருப்பது.//

    இதற்கு டாக்டர் மட்டுமல்ல!
    மொத்த கழகமும் நன்றி சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  3. கலக்கிவிட்டீர்கள் கும்மாச்சி உங்களுக்கு நல்ல எழுத்து ஆளுமை.
    வாழ்த்துக்கள்.ஒட்டு போட்டாச்சு.

    ReplyDelete
  4. அடுத்த கூட்டணிக்கு அச்சாரமாக இன்னும் திட்டி அறிக்கை விடாமல் இருப்பது.
    அது!!!

    ReplyDelete
  5. ரொம்ப உத்துப் பார்ப்பீரோ.........

    ReplyDelete
  6. Ramadoss Dog Turru. PMK patient. Ha ha ha.

    ReplyDelete
  7. இந்த முறை தேர்தல் புறக்கணிப்பாமே

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.