Monday, 3 August 2009

நண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.



கல்லூரி கோடை விடுமுறையில், தெருவில் உள்ள நண்பர்கள் பகலில் விளையாட்டு, மாலையில் தெருக்கொடியிலும், கோவில்களிலும், வரைமுறை இல்லா கடலை, பின்பு இரவில் நைட் ஷோ மொட்டை மாடியில் உறக்கம் என்று இருந்தக் காலம்.

ஒரு நாள் இரவு எங்களூர் டூரிங் டாகீசில் பிட்டுப் படம் போடபோவதாக எங்களுக்கு செய்தி கிடைத்தது. ஆதலால் நண்பர்கள் எல்லோரும், அன்று கடலை நேரத்தை குறைத்துக் கொண்டு, இரவில் சினிமாப் பார்க்கப்போவதற்கு எப்படி ஏற்பாடு செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். படம் முடிந்தவுடன் எங்கள் வீடு மொட்டை மாடியில் எல்லோரும் உறங்குவதற்கு ஏற்பாடு செய்துகொண்டோம்.

அவனவன் இரவு தூங்குவதற்கு தலையனை, பாய் எல்லாம் கொண்டுவந்து மாடிப்படியின் கீழே போட்டு வைத்து கிளம்பத் தயாரானோம். எங்கள் கூட்டத்தில் இருந்த ஒருவன் வீட்டில் அனுமதி வாங்குவது என்பது, இயலாத காரியம். அவன் வீட்டில் சாமிப்படம் என்றால் தான் அனுமதி கொடுப்பார்கள்.

அந்தத் திரையரங்கில் "ஜெய் ஆஞ்சநேயா" என்றப் படம் திரையிடப் படுவதாக போஸ்டர் ஒட்டியிருந்தது. ஆதலால் அன்று அனுமதி வாங்குவது பெரிய விஷயாகமாக தோன்றவில்லை. எங்கள் குழுவிலிருந்த ஒருவன் போஸ்டர் எல்லாம் அப்படித்தான் ஓட்டுவார்கள் அது பகல் காட்சிக்கும், மாலைக்காட்சிக்கு மட்டும்தான், இரவில் சும்மா இந்தப் படம் போடுவதுபோல் இரண்டு மூன்று ரீல் ஓடவிட்டு பின்பு பிட்டுப் படம் வரும் என்று ஏதோ பிட்டுப் படக்காட்சி விஷயத்தில் டாக்டர் பட்டம் வாங்கியது போல் சொன்னான்.

அன்று இரவு எல்லோரும் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு டூரிங் டாக்கீஸ் சென்று டிக்கெட் வரிசையில் நின்றோம். மாலைக்காட்சி முடிந்து அப்போழுதுத்தான் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்கள். பெண்கள் வரிசையில் ஒருவரும் இல்லை. ஆதலால் இரவு பிட்டுப் படம் கட்டாயம் இருக்கும் என்று நண்பன் சொன்னான். நாங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு நல்ல சீட்டாகப் பிடித்து அமர்ந்துக் கொண்டோம். படம் ஆரம்பிக்க சில நேரம் முன்பு ஒரு மூன்று நான்கு பெண்கள் அங்கங்கே அமர்ந்திருப்பதைக் கண்டோம். எங்களுக்கு இரண்டு வரிசை முன்பு நம்ப பக்திப் படத்துக்கே அனுமதிக்கப்படும் நண்பனின் அத்தையும் மாமாவும் அமர்ந்திருந்தார்கள். நண்பன் உதற ஆரம்பித்து விட்டான்.அவனை நாங்கள் தேற்றி “கவலைப் படாதே, நீ பக்திப் படம் தான் வந்திருக்கிறாய், மேலும் அவர்கள் திரும்பிப் பார்த்தால் நீ தலையை குனிந்துக் கொள்” என்றோம்.

படம் போட ஆரம்பித்து விட்டார்கள். படம் ஆரம்பித்து ஒரு நான்கு ரீல் போன பின்பும் அது பக்திப் படம் மாதிரியே தெரியவில்லை. முதலில் கான்பித்தப் ஆஞ்சநேயர் படம் தவிர பக்தி வருகிறா மாதிரி ஒன்றுமே வரவில்லை. ஒருவன் அதில் குடித்து கும்மாளமடித்துக் கொண்டு எல்லாக் கெட்டக் காரியங்களும் செய்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒருவன் இதெல்லாம் தப்பு என்றும் ஆஞ்சநேயப் பக்தனாகிவிடு என்று பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அட்வைஸ் செய்துக் கொண்டிருந்தான். அடிக்கடி ஜெய் ஆஞ்சநேய என்று ஹம்மிங் வேறு வந்துக் கொண்டிருந்தது. பின்பு ஒருத்தி இடுப்பில் கோமணமும், மேலே கச்சை போல ஒரு சமாசாரம் அணிந்துக் கொண்டு ஏறக் குறைய மொத்த திரையையும் அடைத்துக் கொண்டு ஆடினாள். பின்புலத்தில் அதே அரைகுறை ஆடையுடன் ஒரு இருபது பெண்கள் இடுப்பை முன்னும் பின்னும் ஆட்டிகொண்டிருந்தார்கள்.



இந்த நடனம் முடிந்து இடை வேளை வந்தது. நாங்கள் நண்பனின் அத்தை கண்ணில் படக்கூடாது என்று அரங்கின் உள்ளேயே அமர்ந்திருந்தோம். எங்கள் இடை வேளை தம்முக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள் அவர்கள். இடை வேளை முடிந்து படம் தொடர ஆரம்பித்தது. முன்பாதியில் கெட்டக் காரியம் செய்துக் கொண்டிருந்தவனுக்கு அப்பொழுதான் ஆஞ்சநேயர் ஆப்பு வைக்க ஆரம்பித்திருந்தார். நாங்கள் சற்று எதிர் பாராமல், திரையில் இப்பொழுது ஒரு மலையாள அழகி, ஒரு வெள்ளை புடவையுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாள், சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவளுடைய அந்தரங்கங்கள் திரையில் தெரிந்துக் கொண்டிருந்தன. அப்பொழுதுதான் நாங்கள் இடைவேளையில் வெளியே சென்ற பெண்கள், அத்தை மாமா உள்பட யாவரும் அரங்கத்திற்கு திரும்பவில்லை என்பதைக் கவனித்தோம். நண்பன் இப்பொழுது தைரியமாகிவிட்டான்.

மேலும் பக்திப் படம் அப்படியே நிறுத்தப்பட்டு, பிட்டை தொடங்கி விட்டார்கள், மலையாளத்தில் ஆரம்பித்து, தாய்லாந்து வழியாக, வெள்ளைக்காரி அழகிகள் என்று ஒரு ரவுண்டு வந்துவிட்டார்கள். எல்லாக் கதையிலும் கெட்டக் காரியம் ஆரம்பிக்கும் முன்பு திரை வேற்று நாடு அழகிக்கு தாவி விடும். ஒரு வழியாக சரித்திரப் புகழ் பெற்ற எங்களுடைய அந்த பிட்டுப் பட ஷோ முடிந்து வீட்டுக்கு வந்து மொட்டை மாடியில் தூங்கினோம்.
அடுத்த நாள் நாங்கள் எல்லோரும் தெரு முக்கில் கடலை போட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நண்பனின் மாமா அவனிடம் வந்து,
"நேற்று எந்தப் படத்துக்கு போயிருந்தாய்" என்று கேட்டார்,
அதற்கு அவன் "ஜெய் ஆஞ்சநேயா மாமா" என்றான்.

"அது பக்திப் படம் மாதிரியே இல்லையடா, நானும் உன் அத்தையும் இடை வேளையிலேயே வந்து விட்டோம்" என்றார்.

நான் சும்மா இல்லாமல் "சார் அப்புறம் ஒரே பக்திதான் சார், அந்தக் கெட்டவன், திருந்தி ஆஞ்சநேயப் பக்தனாகி, ஊருக்கு நல்லது செய்கிறான் அது தான் சார் கதை, அய்யயோ பாதியிலேயே வந்து விட்டீர்களே சார். நாளைக்கு வேணுமென்றால், மாலைக் காட்சி பாருங்கள் சார். இரவுக் காட்சியில் இடை வேளைக்குப் பின் படம் சரியாய் தெரிய மாட்டேங்குது சார்" என்றேன்.

"சரிப்பா நாளைக்கு அந்த மீதிப் படத்தை கட்டாயம் பார்கிறேன்" என்றார்.

Follow kummachi on Twitter

Post Comment

16 comments:

பித்தன் said...

//"சரிப்பா நாளைக்கு அந்த மீதிப் படத்தை கட்டாயம் பார்கிறேன்" //

ஹேமா said...

"ஜெய் ஆஞ்சநேயா"

கும்மாச்சி said...

ஹேமா நன்றி. உங்களுடைய சமீபத்திய மம்மி சொல்லு டாடி கேளு பதிவைப் படித்தேன் நன்றாக இருந்தது.

துபாய் ராஜா said...

நல்ல 'ஆன்டி' கிளைமாக்ஸ். :))

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

:)

வால்பையன் said...

தலைப்பு நல்லாயில்ல!

geethappriyan said...

மேலும் பக்திப் படம் அப்படியே நிறுத்தப்பட்டு, பிட்டை தொடங்கி விட்டார்கள், மலையாளத்தில் ஆரம்பித்து, தாய்லாந்து வழியாக, வெள்ளைக்காரி அழகிகள் என்று ஒரு ரவுண்டு வந்துவிட்டார்கள். //
நான் சும்மா இல்லாமல் "சார் அப்புறம் ஒரே பக்திதான் சார், அந்தக் கெட்டவன், திருந்தி ஆஞ்சநேயப் பக்தனாகி, ஊருக்கு நல்லது செய்கிறான் அது தான் சார் கதை,//
என்னமா படம் காடியிருக்கீங்க குரு
கலக்குங்க.
ஒட்டு போட்டாச்சு.
யாரு அது மேல உள்ள போட்டோவில?

geethappriyan said...

நீங்கள் திரட்டியில் பதிவுகளை வெளியிடுங்கள்
மிகவும் எளிதாயிருக்கு

VISA said...

தலைப்பு தான் கொஞ்சம் கலீஜு. மத்தபடி கதை சூப்பர்.

vasu balaji said...

/முன்பாதியில் கெட்டக் காரியம் செய்துக் கொண்டிருந்தவனுக்கு அப்பொழுதான் ஆஞ்சநேயர் ஆப்பு வைக்க ஆரம்பித்திருந்தார்./

ஆஞ்சநேயர் ஆப்பு வச்சாரோ இல்லையோ. ஆஞ்சநேயருக்கு நீங்க வச்சிட்டீங்க. பிட்டு படத்துக்கு ஆஞ்சநேயர் தானா அகப்பட்டாரு. :))

கார்த்திகைப் பாண்டியன் said...

செம நக்கல்யா நீங்க..;-)))

ஜெட்லி... said...

//சார் அப்புறம் ஒரே பக்திதான் சார், அந்தக் கெட்டவன், திருந்தி ஆஞ்சநேயப் பக்தனாகி, ஊருக்கு நல்லது செய்கிறான் அது தான் சார் கதை, //
இது கொஞ்சம் ஓவர்ஆ இல்ல....
நடத்துங்க...

☀நான் ஆதவன்☀ said...

தலைப்பு?

கலையரசன் said...

உண்மையாயயயாவா?

”தளிர் சுரேஷ்” said...

அட அட சூப்பர் கதை!

Unknown said...

mama ongada nermay pudichchirukku

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.