நாங்கள் அப்பொழுதுதான் அந்தத் தெருவிற்கு புதியதாக குடி பெயர்ந்தோம். தெருவில் மொத்தம் இருபது வீடுகளே இருந்தன. சில வீடுகளுக்கு நடுவில் காலி மனைகளும் இருந்தன. எங்கள் வீட்டிற்கு எதிர்புறத்தில் ஒரு இரண்டு வீடுகளுக்கு நடுவே இருந்த காலி மனைதான் எங்கள் விளையாட்டு மைதானம். எல்லோருமே அந்த தெருவில் புதியதாக கட்டிய வீடுகளில் குடி புகுந்தவர்கள், என்பதால் தெருவில் உள்ளப் பையன்கள் எல்லாம் விரைவிலேயே நண்பர்கள் ஆகி, ஒரு கிரிகெட் டீம் ஆரம்பித்தோம்.
எங்கள் மைதானத்தின் அருகில் உள்ள வீட்டில்தான் ராணியும், அவள் அக்காள் மாயாவும், அவர்கள் அம்மாவுடன் இருந்தார்கள். ராணி சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்தவள். அவள் அம்மா ஏர்போர்ட் கஸ்டம்சில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவள் அம்மாவை ஒரு இளவயதினன் தினமும் மோட்டார் பைக்கில் கொண்டுவிடுவான். சனி, ஞாயிறுகளில் அந்த மோட்டார் பைக் அவர்கள் வீட்டு வாசலிலேயே எப்பவும் இருக்கும். அவனுக்கும் ராணியின் அம்மாவிற்கும் தொடர்பு இருப்பதாக தெருவில் ஒரு பேச்சு உண்டு.
ராணி நானும் ஒரே வயதினர்கள். எங்கள் தெருவில் உள்ளப் பையன்களில் என்னைத்தவிர யாருடனும் ராணி பேசமாட்டாள். எங்களில் பழக்கம் ஒன்றாகப் படிப்பதில் ஏற்பட்டது. பள்ளி இறுதிப் பரீட்சைக்கு அவள் என்னிடம் கணக்கு மாதிரி வினாத்தாள்கள் வாங்க வந்ததிலிருந்து எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. பெரும்பாலான நேரங்களில் அவளும் அவள் அக்காளும் தனியாக இருப்பதனால் யாவரும் அவர்கள் வீட்டுக்குப் போவதில்லை. ராணிக்கு ஏதாவதுத் தேவை என்றால் என்வீட்டுக்கு வருவாள். என் அம்மாவுடனோ அக்காளுடனோ ஒன்றிரண்டு வார்த்தை தான் பேசுவாள். ஆதலால் என் அக்காள் அவளைக் அவனுடன்தான் பேசுவாயோ என்றுக் கிண்டல் செய்வாள்.
ராணியின் அக்கா மாயா காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச நாட்களாக அவளைக் காணவில்லை. நான் ராணியிடம் கேட்டபொழுது ஊருக்குப் போயிருப்பதாகச் சொன்னாள். அனால் எங்களுக்கு காதில் விழுந்த செய்தி வேறு. மாயா யாரிடமோ கெட்டு இப்பொழுது கர்ப்பமாக இருப்பதாகவும், ஆதலால் கோவையில் அவள் சித்தி வீட்டில் தங்கி கருக்கலைப்பு செய்வதாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள். என் வயதில் அதெல்லாம் ராணியிடம் உண்மையா என்று கேட்கப் பயமாக இருந்தது.
பிறகு நானும் ராணியும் கல்லூரியில் வெவ்வேறு சப்ஜெக்ட் எடுத்து ஒரு தற்காலிகப் பிரிவு எங்களுள் இருந்தது. இந்த இடைவெளியில் மாயாவுக்கு கல்யாணமாகிப் போய்விட்டாள். இப்பொழுதெல்லாம் ராணியின் வீட்டில் அந்த பைக் இரவில் இளைப்பாற ஆரம்பித்தது. அவர்கள் வீட்டு மாடிப்படியின் கீழ் வரிசையாக அடுக்கி வைத்திருந்த மதுப் பாட்டில்களை நான் ஒரு முறைப் பார்த்திருக்கேன்.
நான் என் கல்லூரிப் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த நேரம் மாயவும் திரும்ப அந்த வீட்டுக்கு வந்து விட்டாள். அவளது கணவன் உண்மை தெரிந்து அவளை விவாகரத்து பண்ணி விட்டதாக ஊரில் பேசிக்கொண்டார்கள். ஒரு சிலநாட்களில் இரவில் அந்த மோட்டார் பைக் காரனுடன் மாயா அமர்ந்து அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு போவதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
ஒரு நாள் நான் இரவு பனி முடித்து பதினொரு மணிக்கு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த பொழுது அந்த மோட்டார் பைக் இளைஞனுடன் இம்முறை ராணி உரசிக்கொண்டு தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். ராணியின் நடையில் ஒரு தள்ளாட்டம் தெரிந்தது. ராணி என் பார்வையை தவிர்த்தாள். அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. ராணி அவ்வாறு செல்வது எனக்குத் துளிக் கூடப் பிடிக்கவில்லை. ராணி தவறானப் பாதையில் செல்வதாக எனக்கு பட்டது.
அப்பொழுது எங்கள் கம்பனியில் ஒரு செகரட்ரி காலியாக இருந்தது. அதை ராணிக்கு வாங்கிக் கொடுத்தால் அவள் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்படும் என்று எனக்கு தோன்றியது. ஆதலால் நான் அவளைக் காண அவள் வீட்டிற்கு சென்றேன். அவள் என்னைப் பார்க்க தயங்கி அவள் அக்காளிடம் உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டாள். இருந்தாலும் நான் அவள் அக்காளிடம் சொல்லி அவளை வேலைக்கு மனு போடச் செய்து, என் மேனஜரிடம் பேசி அந்த வேலையை வாங்கிக் கொடுத்து விட்டேன். நிஜமாகவே அவள் வாழ்வில் அந்த நிகழ்ச்சி ஒரு திருப்பு முனைதான்.
பிறகு ராணி கல்யாணமாகி இப்பொழுது ஜெர்மனியில் குழந்தைக் குட்டிகளுடன் செட்டில் ஆகி விட்டாள். சமீபத்தில் அவளை விடுமுறைக்கு சென்றிருந்தப் பொழுது பார்த்தேன். என் வீட்டிற்கு வந்து என்னுடன் அமர்ந்து பேசினாள்.
அப்பொழுதுதான் அவள் வாழ்வில் நடந்த திருப்பம் அன்று இரவு அவளை நான் நோக்கிய ஒரு நொடியில் நிகழ்ந்த உண்மையை என்னிடம் சொன்னாள். அன்று இரவு நான் நினைத்துப் போலவே அவள் குடித்திருந்தாள். அந்த மோட்டார் பைக் இளைனனுடன் அன்று இரவைக் கழித்திருந்தால், கெடுத்திருப்பான் என்றும் அவள் வாழ்வும் மாயாவைபோல் சீரழிந்திருக்கும். அவனிடம் அன்று இரவு உடம்பு சரியில்லை, பிறகுப் பார்க்கலாம் என்று சொல்லி தனது அறைக்குச் சென்று தாளிட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் அம்மாவின் தனிமையையும், மாயாவின் நிலைமையையும் அவன் உபயோகப் படுத்திக் கொண்டு அவர்கள் வாழ்வை சீரழித்து விட்டான். இப்பொழுது அவன் குறி ராணி மீது. போதாதற்கு குடி வேறு.
அவள் கடைசியாக என்னிடம் சொன்ன வார்த்தை என்னைப் பெருமை அடையச் செய்தது.
"பிரபு நீ எனக்கு நல்ல நண்பன், நான் உன்னை நினைக்காத நாளில்லை, நாம் எத்தனை ஆயிரம் மைல் தள்ளி இருந்தாலும், நீ என்றும் என்னிடம் இருக்கிறாய், ஆம் என் பையனின் பெயரும் பிரபு தான்" என்றாள்.
12 comments:
மனதை தொட்ட கதை.
நானும் உங்க நண்பன் தானுங்கோ...
நன்றி நண்பா....
ராகவன் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
லேட்டா வந்தாலும் லேட்ட)டே)ஸ்டாத்தான் இருக்கு.
நாளுக்கு நாள் மெருகேருகிறது உங்கள் எழுத்து. பாராட்டுகள்.ஒட்டு போட்டாச்சு.
meera vasudevan photo also super
நல்ல கதை நண்பரே..!
அப்புறம் ராணி உங்க ஆபீஸ்ல வேலை செஞ்சாங்களா.. இல்லையா?
ஆமா அந்த குட்டி பையன் பிரபு யாருக்கு பொறந்தவன்னு கேட்டீங்களா? சும்மா டமாஷுக்கு தாங்கோ சீரியசா எடுத்துக்காதீங்கோ.....சரி கதை நன்றாக இருந்தது. நாளுக்கு நாள் இம்ப்ரூமென்ட்.
Nice one
அருமை ... நீங்க யாரு படத்தோட நாயகன் தானோ.........
:-)))))
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.