Friday, 7 August 2009

கடன் கொடுத்தார் நெஞ்சம் போல்....................


கணேஷ் என் பால்ய சிநேகிதன். அவன் எனக்கு பரிச்சியமாகி பின்பு நண்பனானது ஒரு கதை.
நாங்கள் இருந்த அந்தத் தெருவில், உள்ள நாற்பது வீடுகளும் எங்களுக்கு அத்துப்படி. தெருவில் எங்களுடைய கிரிக்கெட் டீம் உண்டு. எங்களுடைய விளையாட்டுக்கள் சீசனுக்கு சீசன் மாறும். மழைக்காலங்களில் பம்பரம், கோலிகுண்டு, குச்சிப்லே என்று நாங்கள் விளையாடாத விளையாட்டுக்களே இல்லை என்று சொல்லலாம். பள்ளி கல்லூரி விடுமுறை நாட்களில் "பேட்மிண்டனும்" சேர்த்துகொள்ளும். தெருவில் வீடுகட்ட இன்னும் ஆரம்பிக்காத ஏதோ ஒரு புண்ணியவானின் இரண்டு கிரவுன்ட் நிலத்தில் நெடிய நெட் கட்டி பூபந்து பேட்மின்டன் ஆடுவோம்.

ஒரு கோடை விடுமுறையில் ஒரு புதியவன் (கணேஷ்) வந்து சேர்ந்தான். முதலில் அவன் எங்கள் விளையாட்டுக்களை வேடிக்கைப் பார்க்க வந்தான். பின்னர் சிறிது சிறிதாக மொட்டைக் குமாருடன் பேச ஆரம்பித்து, டீமில் சேர விண்ணப்பித்தான். விண்ணப்பம் அணித்தலைவனான என்னிடம் வந்தது. நமக்கு என்றைக்குமே கொஞ்சம் பந்தா அதிகம். புதியவன் நல்ல ஆஜானு பாகு. நான் அவன் முன் சத்யராஜ் முன் நிற்கும் குள்ள மணிபோல இருந்தேன். இருந்தாலும் அவனை இன்று போய் நாளை வா என்று அனுப்பிவிட்டேன்.
பிறகு அவனை அடுத்த நாள் வந்த பொழுது நேர்காணல் எல்லாம் வைத்து, பின்னர் மாதச் சந்தா ஒழுங்காகக் கொடுப்பாயா என்றெல்லாம் கேட்டு டீமில் சேர்த்துக்கொண்டேன். ஆள் நல்லத் திறமை சாலி. எந்த விளையாட்டிலும் ஒரு லாவகம் இருந்தது. போகப் போக எனக்கு நல்ல நண்பன் ஆகிவிட்டான்.

எங்கள் டீமில் யாரும் எங்கள் தெருப் பெண்களிடம் கடலைப் போடமாட்டோம். அதற்கு நிறையக் காரணங்கள் உண்டு, ஒரு பிகரும் நன்றாக இருக்காது, மேலும் சுமாரான பிகரெல்லாம் ரொம்ப ஸீன் உடும். ஆதலால் எங்கள் எல்லோருக்கும் பக்கத்து தெருப் பெண்கள் தான் எங்கள் "கடலை" தேவதைகள். தண்ணி லாரி வந்தால் பக்கத்துக்கு தெரு தண்ணி தொட்டிக்கு சென்று, லாரிகாரனுக்கு உதவி செய்வது போல் கடலை போடுவோம். சுமாரான பிகருக்கு ஒருகுடம் என்றால், நல்ல பிகருக்கு கமுக்கமா நாலு குடம் பிடிக்க வுடுவோம். இதை எதிர்த்து யாரவது “ஆண்டி” குரல் கொடுத்தா பாதித் தண்ணியக் கீழே வுட்டுடுவோம்.

நிற்க நான் சொல்லவந்தது நாங்கள் போட்டக் கடலை பற்றி அல்ல.
கணேஷும் நானும் நல்ல நண்பர்கள் ஆகி, கல்லூரிவரை ஒன்றாக இருந்து பின்ன வேலை நிமித்தம் நான் வெளிநாடு வந்தக் காரணத்தால் பிரிந்துவிட்டோம். மேலும் நான் வெளிநாடு வந்த பிறகு என் பெற்றோர்கள் வாடகை வீட்டிலிருந்து நான் வாங்கிய புதிய வீட்டிற்கு வந்து விட்டார்கள். ஆதலால் எங்களுக்கு பழைய இடத்திலிருந்த நண்பர்களிடம் இருந்த தொடர்பு இயல்பாகவே குறைய ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட ஒரு பத்துவருடம் கழித்து நான் கணேஷை மறுபடிப் பார்த்தேன். அவனும் கல்யாணமாகி குழந்தைக் குட்டிகளுடன் அதே தெருவில் வசிப்பதாகச் சொன்னான். தற்போது அவன் நடத்தி வந்த அச்சுக் கூடத்தில் நஷ்டம் வந்து விட்டதால் மிகவும் மனது நொந்துப் போயிருப்பதாகச் சொன்னான்.

நான் அவனுக்கு நஷ்டத்தை சரி கட்ட பணஉதவி செய்யப் போவதாக தங்கமணியிடம் சொன்ன பொழுது, "கேட்காமல் யாருக்கும் உதவி செய்வது நல்லதல்ல நான் பணம் கொடுப்பதைப் பற்றி சொல்லவில்லை, நட்பு முறியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றாள்.

நான் அவனிடம் பணத்தைக் கொடுத்து "உன்னால் எப்பொழுது திரும்பக் கொடுக்க முடியுமோ கொடு, எனக்கு அவசரமில்லை" என்று சொல்லிவிட்டு வந்தேன்.
பிறகு நான் அடுத்த முறை போன பொழுது என்னால் அவனை சந்திக்க முடியவில்லை. தொலை பேசியில் அழைத்தேன், அவன் மகள் அப்பா ஊரில் இல்லை வந்தவுடன் நான் அழைத்ததாக சொல்கிறேன் என்று சொன்னாள்.

அடுத்த வந்த ஒரு மூன்று நான்கு வருடங்களிலும் என்னால் அவனை சந்திக்க முடியவில்லை.

இந்த முறை அவனை கட்டாயம் பார்த்து அவனுடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கலாம் என்று சென்றேன்.

அவன் வீட்டை நெருங்கும் பொழுது அவன் குழந்தைகள் அவனுடன் உரையாடும் சத்தமும், பின்பு அவனுடைய குரலும் கேட்டது. அவன் வீட்டு அழைப்பு மணியை அடித்தேன். சற்று தாமதமாகவே கதவுத் திறக்கப் பட்டது. கதவை பாதி திறந்த அவனுடைய மகள் “அப்பா ஊரிலே இல்லே நீங்கள் அப்புறம் வாங்கோ” என்று கதவை என் மேல் சாத்தினாள். நான் இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. உள்ளே அழைத்து என்னிடம் சொல்லியிருக்கலாம்.
நான் திரும்புவதற்கு சற்று தயங்கி நின்றேன்.

"அந்தக் கடன்காரன்தான்பா" என்று உள்ளே குரல் கொடுத்தாள் அவனுடைய மகள்.

Follow kummachi on Twitter

Post Comment

15 comments:

அப்பாவி முரு said...

//"அந்தக் கடன்காரன்தான்பா"//

குடுக்கும் போதே, இது வராது என்கிற மனப்பான்மையோடு கொடுக்க வேண்டும்.

திரும்ப வாங்கிவிடலாம் என நினைத்தால், அந்த பாப்பா சொன்ன மாதிரி ”கடன்காரந்தான்”.

கும்மாச்சி said...

தமிளிஷ் ஓட்டுப் பட்டையிலிருந்து வோட்டளிக்க முடியவில்லை ஆதலால் தமிளிஷ் தளத்திலிருந்து தயவு செய்து ஓட்டளிக்கவும்.

geethappriyan said...

தமிளிஷ் ஓட்டுப் பட்டையிலிருந்து வோட்டளிக்க முடியவில்லை ஆதலால் தமிளிஷ் தளத்திலிருந்து தயவு செய்து ஓட்டளிக்கவும்.

தமிழ்மணம்/ தமிழிச் இரண்டிலும் போட்டாச்சு
:))))))))))))

இராகவன் நைஜிரியா said...

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று முன்பு எல்லாம் சொல்லுவார்கள். இப்போதெல்லாம் மாற்றி, கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும் உங்க தங்கமணி சொல்லியது போல், கேட்காமல் கொடுக்கும் கடன், திரும்பி வருவது ரொம்ப கஷ்டம் தான்.

இராகவன் நைஜிரியா said...

தமிழிஷில், எந்த பதிவரின் இடுகைக்கும் ஓட்டு பட்டை மூலமாக ஒட்டு போட இயலவில்லை. தமிழிஷில் லாக் இன் செய்துதான் போட வேண்டியிருக்கின்றது.

ஹேமா said...

கும்மாச்சி,கடன் குடுத்தா இப்போ எங்கயுமே இதுதான் நிலைமை.

அதுசரி....உங்க கதைக்கும் அந்தப் படத்துக்கும் என்...ன சம்பந்தம்?

கும்மாச்சி said...

படத்துலேயும் கடன் கொடுத்தவங்க போல முழிக்கிறாங்க, அதான் அவங்கப் படம் வந்திருக்கு.

பித்தன் said...

namakkum niraiya ithupol vundungooo

Vels said...

உங்களின் நல்ல நட்பு, கடனால் பிரிந்து போனது.

ஆனால், நான் எனக்கு பிடிக்காத நண்பன் பணம் கேட்டா (கொஞ்சமா கேட்கும் பொழுது) உடனே குடுத்துடுவேன். ஏன்னா பணம் வருதோ இல்லையோ.. அந்த நண்பர் நம்மளை அடுத்து சந்திக்கவே மாட்டார்.

கும்மாச்சி said...

வேல்ஸ் நல்ல யோசனை, நடைமுறைப் படுத்த வேண்டியதுதான்.

Anonymous said...

ஏன் இப்படி இருக்கக் கூடாது அவர் கடன்காரர்களுக்கு அஞ்சி அப்படி வாழலாமில்லையா? ஒரு வேளை அவர் உங்களை தவிர்ப்பது ஒன்று பணம் திருப்பி தர இயலாமை இன்னொன்று நன்றி கெட்ட நட்பு..விடுங்க உங்க பணம் தொலைந்து போனதென்றோ அல்லது தர்மகாரியத்திற்கு உதவியதாகவோ நினைத்துக்கொள்ளுங்கள்..

துபாய் ராஜா said...

நெஜமாவே நெஞ்சு கலங்கிடுச்சிங்க.......

கதையை படிச்சு இல்ல.'பப்பரப்பா'ன்னு படத்துல பாப்பா நிக்கிறதைப் பார்த்து. :))

VISA said...

//யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை தப்பும் தவறுமாகப் பேசி, ரெண்டு பைட்டு, ஒரு குத்துப் பாடு, ஒரு வடக்கத்தியாளின் தொப்புள், பின்பு ஐட்டம் என்று காண்பித்து, ஒரு ஜொள்ளுக் கூட்டத்தை சேர்த்துக் கொள்கிறார்கள்.
//
ithu super I agree ....

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Barari said...

NAAN VAANGIYA VEEDU ENDRU ILLAMAL NAANGAL VAANGIYA VEEDU ENDRU IRUNTHAAL SIRSPPAKA IRUNTHU IRUKKUM.VALIYA POI UTHAVUVATHIL IPPADIPATTA SANGADANGAL NIRAYAVE VARUM.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.