Pages

Sunday, 9 August 2009

அம்பேல் ஆகிறேன் (தற்காலிகமாக), பத்திரமா பாத்துக்கோங்க.


பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, வோட்டுப் போடுபவர்களே, பின்னூட்டம் இடுபவர்களே,

நான் ஒரு சிறிய விடுமுறையில் தாய் நாடு செல்வதால், எனது மொக்கை எழுத்துக் களப்பணியில் இருந்து சிறிது நாட்கள் அம்பேல் ஆகிறேன். (அப்பா தொலஞ்சாண்டா)

எனதுத் தொண்டர்கள் யாவரும் விமான நிலையத்திற்கு பேரெழுச்சியுடன் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். (நடு ராத்திரி போய் இறங்கினா தங்க மணியே வரமாட்டா)

தயவு செய்து எனது தொண்டர்கள், வழி நெடுக கட் அவுட், வைப்பதை தவிர்க்கவும்.
"குன்சாப் பதிவு கும்மாச்சியே வருக, மொக்கைப் பதிவுலகத் திலகம், பதிவுலகப் பெருந்தகையே வருக, வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்" போன்ற கட் அவுட்டுகள் வைக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் தாரை, தப்பட்டை, மேள தளங்கள், நூறு கார்கள், கொடி, முதலியவைகள் வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் தெரியும் நான் மிகவும் எளிமையானவன். ஆதலால் விமான நிலையத்திலிருந்து, மீன்பாடி வண்டியோ, கட்டை வண்டியோ பிடித்து, இல்லை பொடி நடையாகவோ வீடு சேர்கிறேன்.

பத்திரமா பாத்துக்கோங்க...
போனமுறை விடுமுறையில் சென்ற பொழுது, கூகிள் ஆண்டவர் “மொக்கைப் பதிவே எரிந்து போ” என்று இட்ட சாபத்தில் எனது ப்லோக் எரிந்துவிட்டது.
ஆதலால் இந்தமுறை எதிர் கட்சியின் சதிக்கு இரையாகாமல், தொண்டர்களே என் ப்லோகை "பத்திரமா பாத்துக்கோங்க".


சத்தியமா உக்காந்து யோசிச்துங்கன்னா.

12 comments:

  1. விடுமுறை இனிதாக கழிய இனிய நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இனிய விடுமுறைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. have a very nice and memorable vacation
    try to leave comments atleast.
    cheers...
    going to miss your posts...
    voted in tamilish and tamilmanam

    ReplyDelete
  4. கார்த்திகேயன் உங்களது ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி.

    ReplyDelete
  5. //கட் அவுட்டுகள் வைக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்//

    ஹிஹி.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..

    ReplyDelete
  6. happy journey enjoy u r holiday with family pa..pathivu nalla serika vachathu....

    ReplyDelete
  7. உம்ம்.. enjoy பண்ணுங்க ..

    ReplyDelete
  8. பின்னூட்டம் இட்ட அனைவருக்கும், மற்றும் என்னை வாழ்த்தி வழி அனுப்பும் எல்லா பதிவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. இனிய விடுமுறைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  10. நல்லபடியா போயிட்டு பத்திரமா திரும்பி வாங்க. திரும்பி வந்ததும் உங்க ஊர்ல கட் அவுட் வச்சிருக்க போறாங்க.

    ReplyDelete
  11. கும்மாச்சி,போய் சுகமா வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.