விஜயகாந்த், தே.தி.மு.க தலைவர் சமீபத்தில் பேசும் பேச்சுக்களைப் பார்த்தால் அவர் நிதானத்தில் தான் உள்ளாரா? என்று சந்தேகமாக இருக்கிறது.
அவருடைய படங்களில் வரும் வசனங்களில் எல்லா புள்ளி விவரங்களும் கொடுத்து, ஏறக்குறைய ஒரு முடி சூடா "புள்ளிராஜாவாகவே" இருந்தார்.
ஆனால் நேற்று கலைஞர் கொடுத்த விளக்கங்களுக்கு புள்ளி விவரங்களுடன் சரியான பதில் கொடுக்காமல் "உளறுகிறார்" என்கிறார்.
இது மிக அநாகரீகமான ஒரு செயல்.
இவரைப்பற்றி ஏற்கனவே ஒரு புகார் எல்லோருக்கும் தெரிந்ததே, சட்ட சபைக்கு மப்போடு வருகிறார் என்று.
இடைத் தேர்தல் என்ற உடன் அவரு குஷி ஆகிட்டார் போல.
நல்ல மப்போடுதான் மீட்டிங் போகிறாப் போலத் தெரியுது.
மக்கள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
இவர்களெல்லாம் திரைப் படத்துறையில் யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை தப்பும் தவறுமாகப் பேசி, ரெண்டு பைட்டு, ஒரு குத்துப் பாடு, ஒரு வடக்கத்தியாளின் தொப்புள், பின்பு ஐட்டம் என்று காண்பித்து, ஒரு ஜொள்ளுக் கூட்டத்தை சேர்த்துக் கொள்கிறார்கள்.
அப்புறம் என்ன, மைக் கையில், சரக்கு உள்ளே, உளர வேண்டியதுதான்.
சமீபத்திலே இதே போல இன்னொருத்தர் கிளம்பியிருக்கிறார். வாயைத் திறக்காமலே வசனம் பேசுவார். (என்ன ஒரு தகுதி).
வாழ்க தமிழகம்.(வாள்க தமிலகம்)
4 comments:
good post voted in tamilish and tamilmanam aswell
"இவர்களெல்லாம் திரைப் படத்துறையில் யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை தப்பும் தவறுமாகப் பேசி,..."
மிகச் சரியாகச் சொன்னீர்கள். யார் வசனத்துக்கோ கைதட்டல் வாங்கி அதெல்லாம் தனக்குத்தான் என்கிற கனவில் நிறைய பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
"சமீபத்திலே இதே போல இன்னொருத்தர் கிளம்பியிருக்கிறார். வாயைத் திறக்காமலே வசனம் பேசுவார்."
ம்ம்ம் அவர் என்ன செய்வார், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
http://kgjawarlal.wordpress.com
அருமை கும்மாச்சி
//யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை தப்பும் தவறுமாகப் பேசி, ரெண்டு பைட்டு, ஒரு குத்துப் பாடு, ஒரு வடக்கத்தியாளின் தொப்புள், பின்பு ஐட்டம் என்று காண்பித்து, ஒரு ஜொள்ளுக் கூட்டத்தை சேர்த்துக் கொள்கிறார்கள்.
//
ithu Super. I agree with you.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.