ஆடிக் குடத்தடையும், ஆடும்போதே இரையும்,
மூடித்திறப்பின் முகம் காட்டும்
ஓடி மண்டை பற்றி பர பர என எரியும்
முற்றிலும் பாம்பை எள்ளெனவே ஒது.
நாம் எல்லோரும் தமிழ் சினிமாக்களில் தான் இரட்டை அர்த்தம் உள்ள வசனங்களையும், பாடல்களையும் கேட்டிருக்கிறோம்.
காளமேகப் புலவர் சொல்லும் இந்த கவியில் உள்ள இரட்டை அர்த்தங்கள் புரிகிறதா.
சிந்தியுங்கள், பதவுரை, பொழிப்புரை, அடுத்த பதிவில் இடுகிறேன்.
5 comments:
காத்திருக்கிறேன் நண்ப
வெயிடிங்
ம்ம்ம்ம்......யோசிக்கிறேன்.
பாம்பும், செக்கு-எண்ணையும்....
ஆடும் போது பாம்பும் செக்கும் சப்தம் உண்டாக்கும்.. ஆடி முடித்தவுடன்
செக்கிலிருந்தஎண்ணெய் குடத்திற்கு மாறும் .. பாம்பும் பெட்டிக்கு..
மூடி திறந்து பார்த்தால் எண்ணெயில் முகம் தெரியும்.. பாம்பும் முகம் தூக்கி
பார்க்கும்..வாயில் பாம்பு கடித்தால் புண்ணாகும்.. செக்கின் பிண்ணாக்கும்
இனிக்கும்...
ஷங்கர், அபாரம், பிடுச்சிட்டிங்க. நான் ஒரு வரியை விட்டிருந்தேன் அதையும் பிடிச்சிட்டிங்க. "பாரில் பிண்ணாக்கும் உண்டாம்".
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.