Pages

Friday, 4 September 2009

பால்காரி- பாரிஜாதம்


காலையில் எழுந்ததும்
உன் முகம்
காணாமல் விடியலுக்கு
அர்த்தம் தெரிவதில்லை

எந்தன் பால்
கொண்ட அன்பால்
நீ கொண்டு வரும் பால்
காய்ச்சப் படும் பொழுது
உன் அன்பு அப்பால்
போவதாக உணர்கிறேன்.

உன் நினைவில்லா
நாட்கள் ஒருக்காலும்
பிறந்ததில்லை
என்னுடன் நீ
இருந்தால் நான்
இழந்த கால்கள்
என்னோடு இணைகின்றன.

என் கால்கள்
என்னுடன் இணைய
நம் ஜாதி பேதம்
நாலு கால்கள்
கொண்டு நாட்டை
விட்டே ஓட வேண்டும்.

என் ஓட்டம்
எந்நாளும் இயலாது
நாலு கால்களின்
ஓட்டம் நடக்கும்
நாள் எப்பொழுது.

2 comments:

  1. புள்ள ஓவரா புலம்புதே ஊருக்கு போய் வந்து. என்னாச்சி? கவிதை வழக்கம் போல் அழகு

    ReplyDelete
  2. பாலா பின்னூட்டம் கவிதையைவிட அருமை, புலம்பல் கொஞ்சம் ஓவர்தான். அடுத்தது நம்ம சென்னை செந்தமிழில் எதிர் பார்க்கலாம்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.