இன்ன நயினா கடையாண்ட இம்மாம் கூட்டம்?
நாளிக்கி கட கிடயாதாம்பா.
ஐய்யே இன்னாவாம், நாளிக்கி தலிவரு பந்த வச்சிகினாரா..
இல்லிபா காந்தி பொறந்த நாளாமபா.
ஏம்பா அவருதான் தபா தபா இந்தபக்கம் வரார், போஸ்டர் ஓட்டலியே பா
யோவ் மெர்சல் பண்ணாதே, அது ராகுல் காந்திபா.
அப்பா நீ யாரே சொல்லுறே? அவரு பட்டானா?
யோவ் அவரு பாட்டனுக்குப் பாட்டன் நேருபா, தொப்பிவச்சிகின்னு, சொக்காயிலே ரோசப்போ சொருகிக்கினுபாரே அவருபா, காந்தி அவரு வேறே பார்டிபா.
இன்னா பார்டி கழகமா.
யோவ் அத்தே சொல்லலே, ஆளே வேற ஆளுபா.
பீச்சண்டே ஒரு செலே வச்சிகிரான்களே அவரு பா.
நம்ம செவாளியறு செலைக்கி எதிருலே நிஙனுகினரே அவருதாம்பா.
ஏம்பா சரி அதுக்கு இன்னாத்துக்கு கடையே அடைக்கிரானுங்கோ.
அவருக்கு போதைன்னா ஆவாதுபா.
சரிபா அவரு கட்டிங் உட வேணாம், நமக்கு ஏன் கொடுக்க மாட்டேங்கராங்கோ.
அது கவர்மென்ட் உத்தறவுபா.
அப்பாலே நாம எண்ணப் பன்றதுபா.
டாச்மாக்தான் கிடையாதுப்பா, கிளுப்புக்காரனுங்கோ தொரந்துக்கின்னு கொடுப்பானுங்கோ.
நம்மளே உள்ளே உடமாட்டானுங்க்ப, அவனுங்கோ ரவுசு பார்டிங்கோ.
அப்போ இன்னாத்தான் செயறதான்.
ப்ளாக்கிலே விப்பானுங்கபா, இன்னிக்கே வாங்கி, நாயர் கடையிலே கொடுத்தா, கட்டிங் உட்டுக்கலாம்பா.
4 comments:
கும்மாச்சி,காந்தித் தாத்தாக்குப் புரியுமா இந்த பாஷை.
ஹேமா அவர் தென்னாப்பிரிக்காவில் தமிழ் படித்தார்
யதார்த்தம், அன்றும் எல்லா இடங்களிலும் கிடைக்கத்தான் செய்கிறது.இந்த மாதிரி சமாச்சாரங்கள் எல்லாம் வெறும் கண் துடைப்பு.
அருமை நண்பர் கும்மாச்சி,
நலம் தானே?வேலை பளு அதிகமோ?
ஆளையே காணவில்லையே?
என்ன ஆயிற்று?
நல்ல பதிவாக போட்டு மீண்டும் அசத்தவும்.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.