Pages

Monday, 9 November 2009

ஹைக்கூ - பாகம் 3






காதல்

அடையும் வரை ஆனந்தம்,
அடைந்த பின் பூகம்பம்,
காதல்.

ஏட்டுச் சுரைக்காய்


ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது,
எவன் சொன்னது, மனைவி கொடுத்த,
காய்கறிப் பட்டியல்.


உறக்கம்


நாடும் பொழுது நழுவும்,
தவிர்க்கும் பொழுது தழுவும்,
உறக்கம்.


மூட நம்பிக்கை


மழையை எதிர்நோக்குதல் நம்பிக்கை
மழை வர மாக்களை மணந்தால்
மூட நம்பிக்கை.


கடன்காரன்

கன்னியின் மேல் உள்ள காமத்தினால்
கடன்பட்டுப் போனான்
காதலிடம்.

9 comments:

  1. வாங்க சார். அசத்தல் எண்ட்ரீ.

    ReplyDelete
  2. ஆகா,
    ராஜாதிராஜ ராஜகம்பீர ராஜகுலதில கும்மாச்சி
    பராக் ப்ராக் ப்ராக்

    எங்கே போனிங்க? அசத்தலான கவிதை ஓட்டுக்கள் போட்டாச்சு:)))

    ReplyDelete
  3. எல்லாம் நல்லா இருக்கு மக்கா.கடைசி.. ரொம்ப பிடிச்சுருக்கு.

    ReplyDelete
  4. //நாடும் பொழுது நழுவும்,
    தவிர்க்கும் பொழுது தழுவும்,
    உறக்கம்.//

    இதுதான் டாப்பு! ஓட்டுகள் போட்டாச்சு தலைவா!!

    ReplyDelete
  5. எல்லாமே நல்லா இருக்கு

    ReplyDelete
  6. ஆஹா அனைத்துமே அருமை..

    //நாடும் பொழுது நழுவும்,
    தவிர்க்கும் பொழுது தழுவும்,
    உறக்கம்.//

    ஆமா ஆமா ஆமா

    ReplyDelete
  7. மூட நம்பிக்கை


    மழையை எதிர்நோக்குதல் நம்பிக்கை
    மழை வர மாக்களை மணந்தால்
    மூட நம்பிக்கை.


    அருமை...

    மாக்கள் ஆதலால் மாக்களை நம்புகின்றனர்....

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.