இந்த அனுபவக் கதையில் இரண்டு பிரதான பாத்திரங்கள் தான், மற்றவரெல்லாம் கௌரவத் தோற்றமே. சுகுணா தான் கதாநாயகி, இரண்டாவது பாத்திரமான சுண்டெலி அல்பாயுசில் “அபிட்” ஆகப் போகிறது.
சுகுணா குடும்பத்தினர் எங்கள் காலனியில் புதியதாக குடிவந்தவர்கள். அவளுடைய தந்தை போலிஸ் கமிஷனர் ஆபீஸில் வேலை பார்க்கிறார். சுகுணா பார்க்க ரேஸ் குதிரை போல இருப்பாள். ஏத்தம் கொஞ்சம் அதிகம். அப்பாவின் செல்லம் வேறு. எங்களுக்கெல்லாம் தலைவலியாக வந்து சேர்ந்தாள்.
நாங்கள் தெருவுக்கு குறுக்கே கிரிக்கெட் பிட்ச் போட்டு எதிர் வீட்டு சுவற்றில் கரி கோட்டில் விக்கெட் வரைந்து இத்தனை வருஷங்களாக ஆடிக்கொண்டிருக்கிறோம். இவள் வந்தவுடன் மற்றப் பெண்களுக்கும் எங்களை எதிர்க்க ஓரளவுக்கு துணிவு வந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். வேணுமென்றே நாங்கள் கிரிக்கெட் ஆடும் இடத்தில் தரையில் கரிக்கோடிட்டு பாண்டி ஆடுவாள். எங்களுக்கு கிரிக்கெட் ஆட வேறு சரியான இடம் கிடையாது. எவ்வளவோ செய்து பார்த்து விட்டோம், அவள் மசியவில்லை. அவளை ஒரேயடியாக எதிர்க்க எங்கள் யாருக்கும் துணிவில்லை, அவள் அப்பா போலிஸ் கமிஷனர் ஆபீஸில் வேலை பார்ப்பதால் எங்களுக்கு பயம்.
மொத்தத்தில் அவள் வந்ததில் எங்களுக்கு நிம்மதி போய் விட்டது. கோடை விடுமுறையில் என் வீட்டில் எல்லோருமாக சேர்ந்து கேரம் விளையாடுவோம். அதற்கும் என் தங்கையைத் தூண்டிவிட்டு ஆப்பு வைத்து விட்டாள். நாங்கள் வரும் முன்பே கேரம் போர்டை எடுத்து வைத்துக் கொண்டு ஆட அரம்பித்து விடுவார்கள், அவர்கள் ஆட்டம் முடிந்தவுடன் “ஸ்ட்ரைகரை” ஒழித்து வைத்து விடுவார்கள். என் தங்கையிடம் நான் கேட்டால் கூட இவள் குறுக்கே பூந்து கும்மி அடித்து விடுவாள்.
சுகுணாவின் அராஜகத்தை ஒழிக்க நாங்கள் எவ்வளவு பாடு பட்டும் ஒன்றும் வழித் தெரியவில்லை. அன்றும் வழக்கம் போல் நாங்கள் கிரிக்கெட் ஆடத் தொடங்குமுன் அவள் தன் தோழிகளுடன்(என் தங்கை சனியனும் கூட) வந்து பாண்டி ஆட ஆரம்பித்து விட்டாள். நாங்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிக்கொண்டிருந்த நேரம், அவள் சற்று விளையாட்டை நிறுத்தி, மற்ற பெண்களை விளையாடச் சொல்லிவிட்டு அவள் வீட்டிற்கு போனாள்.
சிறிது நேரத்தில் அவள் வீட்டிலிருந்து வீல் என்று ஒரு அலறல். அவள் அம்மாவும் கூட சேர்ந்து "வீலவே", மணி அவர்கள் வீட்டிற்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடினான், நாங்கள் எல்லோரும் பின் ஓடினோம். என்ன ஆச்சு ஆண்டி, என்று கேட்டுக் கொண்டே நாங்கள் சுகுணா இருந்த ரூமுக்கு சென்றோம், அவள் இன்னும் "வீல்" அலறலை விடவில்லை.
நாங்கள் அவள் அறையில் நுழைந்த பொழுது எங்களது கதா நாயகன் "சுண்டெலி" மணியின் காலின் கீழ் கத்திரிக்காய் துவையல் போல் கிடந்தது. கதாநாயகன் அறிமுகம் முன்பே "அபிட்".
ஆனால் அடுத்தது நாங்கள் கண்ட காட்சி சென்சார் போர்டில் தப்பித்த காட்சி போல் இருந்தது. சுகுணா கட்டிலின் மேல் ஏறி ஒரு காலை ஜன்னலில் வைத்துக் கொண்டிருந்தாள். அவளது "ஸ்கிர்ட்" (குட்டை பாவாடை) அபாய எல்லையைத் தாண்டிவிட்டது. அவளது நிலைமை புரிய அவளுக்கு சில கணங்கள் பிடித்தது.
இப்பொழுதெல்லாம் சுகுணா எங்கள் பிட்சிற்கு போட்டியாக வருவதில்லை. மேலும் அவள் வந்தாலே நம்ம பசங்க "சுண்டெலி" என்று குரல் விடுவார்கள்.
10 comments:
கதைக்காகவே அமைந்த மாதிரி ஒரு படம் போட்டு இருக்கீங்க பாருங்க அங்கதான் நீங்க நிக்கறீங்க..
நன்றி ராகவன்
//அபாய எல்லையைத் தாண்டிவிட்டது. //
nice words
argh...! ithellaam too too three muchunga..!
பாருங்க அங்கதான் நீங்க நிக்கறீங்க..
ஓட்டு போட்டாச்சு தல..
கலையில எங்க வயித் தெரிச்சளைக் வாங்குறீங்க.... நல்லா இருங்கள்.....
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி
இப்பிடி எல்லாம் புத்தி போகுது... இந்த தரம் தாழ்ந்த எழுத்துக்கு பின்னூட்டம் வேறு... பயத்தில் அலறிய / தன்னை அறியாமல் நின்று கொண்டிருந்த பெண்ணை அங்கேயே கண்ணால் கற்பழித்ததோடு தினமும் அதையே சொல்லி காயபடுத்தி....... கதையாக இருந்தாலும் தயவு செய்து நீக்கி விடவும் சுகுணாவை உங்கள் இரத்த சொந்தமாக நினைத்து.....
ராஜா உங்காள் பின்னூட்டத்திற்கு விளக்கம் எழுதி புதிய சர்ச்சையை வளர்க்க விரும்பவில்லை. இது ஒரு விடலைப்பையன்களின் கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் இதில் எதுவும் பாசாங்கு இல்லை. கண்ணால் கற்பழிப்பதெல்லாம் டூ மச்.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.