
கருணாகரன் கவலையுடன்
கதவருகே காத்திருக்க
கல்யாணி கல்லூரியில்
கணினி வகுப்பை முடித்து
கடைசி பேருந்தில் வந்தாள்.
என்றாவது கேட்கவேண்டும்
என்று நினைத்ததை
இன்றாவது கேட்கவேண்டும்
நன்றாக பதில் கிடைக்குமானால்
சென்றாக வேண்டும் நண்பர் வீடு.
கல்யாணி கேள் "பெண்ணே
கல்யாணம் எப்பொழுது,
நல்ல வரன் வரும்பொழுது
தள்ளுவது நல்லதல்ல
சொல் உன் முடிவை"
உனக்கு அடுத்த படியாக
உஷாவும் காத்திருக்கிறாள்
மூத்தவள் மீனாதான், கண்
மூடி முடிவெடுத்தாள்
முருகனுடன் ஓடிப்போக
உன் தங்கை உஷாவோ
உன் திருமணம் முடிய
உறவுடன் கைகூடும்
உற்ற நேரம் எப்பொழுது
தப்பாமல் வரும் என்று.
அருமை நண்பன்
அருண்குமார் புதல்வன்
அமெரிக்காவில் பணி
அழகானவன், அறிவுள்ளவன்
அவனை ஏற்றுக்கொள்.
எத்துனை சொல்லியும்
எதிர்ப்பும் காட்டாமல்
ஏறெடுத்தும் பாராமல்
எதிர்வீட்டு சன்னலை
ஏக்கமுடன் நோக்குகிறாள்.
இவள் திருமணமும்
நான் சொன்ன மாப்பிள்ளை
இல்லமால் எதிர் வீட்டு
சன்னலில் தெரியும்
கண்ணனுடன் தானோ.
இருக்கலாம்... நல்லா இருந்தா சரிதான். நாளைக்கு உங்கள குறைக்கூற முடியாதுல்ல?
ReplyDelete//இவள் திருமணமும்
ReplyDeleteநான் சொன்ன மாப்பிள்ளை
இல்லமால் எதிர் வீட்டு
சன்னலில் தெரியும்
கண்ணனுடன் தானோ//
pinne sonna maaplayo...! :> nallaa irukku katha..!
// இவள் திருமணமும்
ReplyDeleteநான் சொன்ன மாப்பிள்ளை
இல்லமால் எதிர் வீட்டு
சன்னலில் தெரியும்
கண்ணனுடன் தானோ //
அது ... ஒரு தகப்பனின் கவலையோ..
கவிதையிலும் டுவிஸ்டா, நல்லாருக்கு
ReplyDeleteஒரு தந்தையின் கவலை.......
ReplyDeleteஅப்பா....கவலை.பாவம் கருணாகரசு.
ReplyDeleteநல்லாருக்கு
ReplyDelete//அமெரிக்காவில் பனி//
பணி..?
எழுத்துப் பிழைக்கு வருந்துகிறேன், பிழை திருத்தப்பட்டுள்ளது.
ReplyDelete