Pages

Sunday, 6 December 2009

மஞ்சள் துண்டு மடாதிபதிக்கு மண்ணாங்கட்டி எழுதும் மடல்


ஐயா தமிழீனத்தலைவரே, நான் மண்ணாங்கட்டி ஒரு தற்குறி, அதால இந்த மடலில் எதாவது எழுத்துபிழை இருந்த மன்னியுங்கள். ஆனா கருத்துப் பிழை இருக்காதுங்கோ.

முதலில் நீங்கப் போடும் மஞ்சள் துண்டின் மர்மம் என்னாங்கோ?. உங்களை பகுத்தறிவாதின்னு வேறே சொல்லிக்கிறீங்கோ. வூட்டுக்கு சாய்பாபா வராரு, வுங்க வூட்டு அம்மா காலிலே விழறாங்கோ இதையெல்லாம் கண்டுக்க மாட்டிங்களா?. வூட்ட திருத்தாத நீங்கோ எப்படிங்கோ ஒரு கூட்டத்தே, கண்மணிக்கு கடிதம் மூலமாவே மூளை சலவை செஞ்சு வச்சிகிறீங்க.

உங்கள் உதவியாளர் சண்முகநாதன் கொஞ்ச நாள் காணாமப் போனதற்கு ஏதோ காரணம் சொல்லறாங்களே உண்மையாங்கோ? அவரு நீங்க கூட்டத்தில் பேச சொல்ல உங்களுக்கு கொடுக்க வேண்டியக் குறிப்ப தேட சொல்ல எவ கூ--ல வச்சேன்னு கேட்டத்துனாலதான் அவர் போயிட்டாருன்னு பேசிக்கறாங்களே. அவரு படிச்ச ஆபிசருங்கோ, அதான் கம்முன்னு போயிட்டார். வேறே யாரவதிருந்தா பதில் சொல்லியிருப்பாருங்கோ. கனிமொழிதில் என்று சொன்னால் உங்க நிலைமை மோசமாயிருக்கும்.
நீங்கதான் தமிழ வாழ வைக்கிறா மாதிரியும் மத்தவங்கோ ஏதோ தமிழ குழி தோண்டிப் புதைக்கிரா மாதிரியும் ஒரு மாயை வளர்த்து குப்பை கொட்டுறீங்களே ஏங்க ஒரு நியாயம் வேணாமா? உண்மையிலயே நீங்க தமிழ் பேர்லயும், தமிழினம் பேர்லயும் பற்று இருந்திச்சுன்னா ஈழப்போர் உக்கிர நிலையில் இருந்தப்போ உங்கள் பாராளுமன்ற உறுப்பினரேல்லாம் வெளியே வரச்சொல்லியிருக்கணும். ஏதோ சிங்களவன் குண்டு போட்டத நிறுத்திட்டா மாதிரி சும்மா லெட்டர் வாங்கி வச்சிக்கின்னு அப்பாலே கிழிச்சிட்டிங்க. ஆனா ஒன்னு உண்மைங்கோ உங்களே மாதிரி மவனே நடிகன் உலகத்திலே யாருமே இல்லீங்கோ. கலைமாமணி விருது உங்க அரசு குடுக்குதே அதிலே உங்க பேரையும் போட்டு ஒன்னு வாங்கிக்கோங்க ஆஸ்கார் நாங்க பாத்துகிறோம்.
ஈழத்துக்கு சும்மா தொப்புள்கொடி உறவு, அது இதுன்னு சொல்லி நல்லாத்தான் எமாத்திநிங்க. இப்போ வேறே சொல்லுறிங்கோ வீரம் ஒன்றும் செய்யாது, விவேகம் துணைக்கு வராவிட்டால். நல்லாத்தான் அல்வா கொடுக்கிறிங்க.

உங்களாலே சில பேர் அசாத்திய முன்னேற்றம் அடைஞ்சது உண்மைதாங்கோ. மக்களே லிஸ்ட் வச்சிக்ராங்கோ. ஏன் கூட வயலிலே வேலை செய்யறானே பொடியன் மருது அவனே சொல்லறாங்கோ. நாத்து நட வருதோ இல்லையோ, நாட்டு நடப்ப கரீட்ட சொல்லரானுங்கோ. அழகிரி எவ்வளவு வச்சிக்கிறார், கனிமொழி எவ்வளவு வச்சிகிராருன்னு கணக்கு வச்சிகின்னு அல்லர் கிட்டேயும் சொல்லிகின்னுகிறான். அதே துரை முருகன் அடிச்சா அவரே மெரட்டுரிங்க, பாலு சம்பாதிக்க விடாம ஆப்பு வக்குறீங்கோ, உங்களே மாதிரி ஒரு தகப்பன் இல்லையேன்னு அவன் வாயிலே புகை வுட்டுக்கின்னு இருக்கானுங்கோ.

அது சரி அந்த ஜோசியர் மார்ச் கடைசிக்குள் புது தலமைசெயகலத்துல நீங்க உட்காரணுமாம், அப்போதான் உங்க குடும்பம் செழிக்கும் என்று சொல்லிகிறார், அதாலே அந்த வேலையே முதலிலே கவனிங்கோ, நாடு கிடக்குது விடுங்க.

"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" மறந்துராதிங்க.

அப்பாலே அந்த புவனேஸ்வரி மேட்டர் இன்னான்னு உங்க புள்ளைய கேட்டிங்களா?

இப்படிக்கு,

ஏதோ விவசாயம் பாத்துக்கினு, தண்ணி வராத சொல்ல, உங்க டிவியிலே காட்டுறே மானாட மயிலாட பாத்துகின்னுகிற( பிகர் எல்லாம் சூப்பருங்கோ) "மண்ணாங்கட்டி"

18 comments:

  1. அப்பு....அசத்திட்டீங்க.

    ReplyDelete
  2. அருமையா எழுதியிருக்கீங்க! நிறைய பேரோட மனநிலைய பிரதிபலிக்கிற மாதிரி இருக்கு!

    பிரபாகர்.

    ReplyDelete
  3. ஹா...............

    ஆட்டோ பயமே அத்துப்போச்சா?

    இல்லே, சுமோ வரவே வராதுன்னு நினைப்பா?

    ReplyDelete
  4. shhhh.... publeeeec...! publeeeeeeeeeec!

    ReplyDelete
  5. சண்முகசுந்தரத்தை பற்றிய அலசலும், அதற்கான உங்களின் பதிலும் தான் தேவையில்லாததாக உள்ளது.

    ஆனால், மத்ததெல்லாம் மிகச்சரியானவைகள் தான்.

    ReplyDelete
  6. கும்மாச்சி எங்க இருக்கீங்க!!??

    இதெல்லாமா அந்த மஞ்சதுண்டுக்கு மண்டைக்கு ஏற்ப்போகுது.

    கட்டியிருக்கிற வேட்டியே அவுந்தாலும் மஞ்சதுண்டு நாற்காலிய விடாது. முடிஞ்சா வேட்டி அவுந்ததுக்கு காரணம் சொல்லி கழகக் கண்மணிகளுக்கு ஒரு கடுதாசி எழுதும்.

    தமிழ்(ஈ)னத்தலைவர் அப்படீன்னு நீங்க சொன்னது ரொம்ப சரி!

    ReplyDelete
  7. வேனா வலிக்குது
    அழுதுடுவார். . . . . . .
    இருந்தாலும் வயசுக்கு ஒரு மரியாதை கொடுத்துள்ளிர்கள்

    ReplyDelete
  8. படித்த அடிமாடுகளுக்கு ரெண்டு % கூட்டி குடுத்தா பின்னாலையே குறைச்சி கிட்டு இருக்கும். ஆனா பாமரனுக்கு , சூசக அறிக்கை , சுண்ணாம்பு அறிக்கைன்னு எதாவது ஒன்னு விடனும்ல. போங்கப்பு ... வேலைய பாருங்க.

    ReplyDelete
  9. ஆத்தாடி.......என்ன ஒரு அதிரடி...! கலக்குறீங்க...!

    ReplyDelete
  10. pinnitteenga!
    well done.
    nan ninaichchen neenga sollitteenga.
    abarnashankar from usa

    ReplyDelete
  11. unngalukku oru virudho allathu arasuppaniyo nitchayam mr. Kummacchi!

    ReplyDelete
  12. சும்மா தூள் கிளப்பிருக்கீங்கோ. ஆட்டோ, சுமோ-வுக்கெல்லாம் பயப்புடாதீங்க...நம்ம குவாலிஸ் அனுப்புவோம். :-)

    ReplyDelete
  13. தமிழீனத்தலைவரே- ஆரம்பமே கலக்கல்!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.