Thursday, 17 December 2009

பாரதி பிறந்த தின நிகழ்ச்சி -பொதிகை தொலைக்காட்சி


“பொதிகை” தொலைக் காட்சியில் டிசம்பர் பத்தாம் தேதி இரவு பாரதி பிறந்த தின நினைவாக ஒரு தொகுப்பு வழங்கினார்கள். முழுக்க முழுக்க நிலய கலைஞர்களை வைத்து பாரதியின் பாடல்களுக்கு விரசமில்லாமல் நடனம் ஆடினார்கள். இதையெல்லாம் சன் டிவி, கலைஞர் டிவி நடன நிகழ்ச்சிகளுக்கு ஒப்பிடமுடியாது. ஜட்ஜ் கிடையாது, எனர்ஜி இல்லை மச்சான்ஸ் என்ற அபத்தம் கிடையாது. தேவையில்லாமல் ஜட்ஜுகளின் அழுகை உணர்ச்சி வசபடுதல் கிடையாது. ஆனாலும் பெரும்பாலானவர்கள் பொதிகை தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை என்பது வருந்தக் கூடிய உண்மை.
சில முத்தான பாரதிக் கவிதைகளை நிலைய வித்வான்களே மெட்டமைத்து பாடினார்கள். முக்கியமாக கேட்பவர்களுக்கு கவியின் வரிகளில் உள்ள அழகை கொண்டு செல்வதிலேயே கவனம் இருந்தது.
இதே நேரத்தில் ஜெயா டிவியிலும் பாரதியின் பாடல்கள் திரைப் படத்தில் வந்ததை ஒளி பரப்பினார்கள்.
நாம் இருவரில் தொடங்கி, ஏழாவது மனிதன், கைக் கொடுத்த தெய்வம், பாரதி, படிக்காத மேதை, வறுமையின் நிறம் சிகப்பு போன்ற படங்களில் இருந்து பாடல்கள் ஒளி பரப்பினார்கள்.

இந்த பட பாடல்களில் இசை அமைத்த இசை அமைப்பாளர்களின் திறமை வியக்க வைக்கிறது. கவிதையின் நயம் கெடாமல் வரிகளின் உச்சரிப்பில் கவனம் செலுத்தியது வியக்கத் தக்கது.

பாரதி என்ற ஒரு அற்புதமான கவியை நினைவு கூர்ந்தது வரவேற்க வேண்டிய நிகழ்ச்சி. பாரதியை கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் மறந்துக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது.

இன்றைய இளைஞர் தமிழ் சமுதாயம், பாரதி பற்றிய விழிப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.

பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வை மிக எளிமையாக மக்களிடம் கொண்டு சென்றவன்.

“கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”

என்று முழங்கியவன்

“தேடிச் சோறு நிதம் தின்று,
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பம் மிக உழன்று-பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரைக் கூடிக் கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”


என்று வரம் வேண்டுதலில் கேட்கிறான்.

“வெள்ளை நிறத்தொறுப் பூனை
ஏன் வீட்டில் வளருதுக் கண்டீர்
பிள்ளைகள் பெற்றதுப் பூனை
அவை பேருக்கொரு நிறமாகும்
சாந்தின் நிறம் ஒருக் குட்டி
கருஞ்சாம்பல் நிறம் ஒருக் குட்டி
பாம்பின் நிறம் ஒருக் குட்டி
வெள்ளைப் பாலின் நிறம் ஒருக் குட்டி
எந்த நிறம் என்றாலும்
அவை யாவும் ஒருத்தரம் அன்றோ”.

என்று பாமரனுக்கும் புரியும் படி ஜாதி பேதங்களைச் சாடிய
பாரதியை “மகாகவி” என்று அழைப்பது அந்த வார்த்தைக்கு அழகு சேர்க்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

S.A. நவாஸுதீன் said...

அருமையான இடுகை. பாரதியை நினைவுகூர்ந்த விதமும் அருமை.

“கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்””

இதை மட்டும் கடைபிடித்தால் போதும். எந்த கன்றாவி நோயும் வராது

க.பாலாசி said...

//பாரதியை கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் மறந்துக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது. //

உண்மைதான்...பாரதியின் பிறந்தநாளை கொண்டாடியவர்களைவிட அதற்கடுத்தநாள் ரசினியின் பிறந்தநாளை கொண்டாடியவர்கள்தான் அதிகம்...

நல்ல பதிவு....

அண்ணாமலையான் said...

வருந்தக்கூடிய விஷயம்தான்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு!

சங்கர் said...

போகும் இடத்திலெல்லாம் ஏதாவது மொக்கை பின்னோட்டம் போடும் எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல, பாரதியின் படம் பார்த்தவுடன் ஒரு நொடி கண்ணில் நீர் நிறைந்துவிட்டது, ஏன் என்று புரியவில்லை, நன்றி நண்பரே

R said...

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.