வயக்காட்டை உழுது போட
வாடகை ட்ராக்டர் ஒட்டி
பம்புசெட்ட ஓட விட்டு
பயிரை விளைய வைக்க
பணத்த வாரி இரைச்சுபுட்டு
பட்டணத்து பகட்டை நம்பி
கண்ட கண்ட உரத்தப்போட்டு
ஏக்கருக்கு அம்பது மூட்டைன்னு
ஏஜெண்டு வித்த விதையை வாங்கி
நாத்தைப் பிடுங்கி நெடுக நட்டு
மழைய நம்பி மறந்துப்புட்டு
கதிரு முத்தும் வேளையிலே
கான்ட்ராக்ட் ஆள் பிடித்து
ஆணை வைச்சு போரடித்த
ட்ராக்டர் அடித்த காலமும் போயி
வண்டி ஓடும் பாதையிலே
வழிநெடுக இரைச்சுப்புட்டு
வாரிக்கட்டி சேத்ததுலே
தேறியது முப்பது மூட்டை
இழந்த இருபது மூட்டைக்கு
ஈடு கட்ட விலையை வெச்சா
வெட்டிப் பயலுக வெச்சுப்புட்ட
விலைக்கு வித்து
குத்த வச்சு யோசிக்கப்ப
தொழிலு!! செஞ்சுப்
பொழைச்சிருந்தா
தோட்டம் தொறவு
பாத்திருப்போம்
எந்தத் தொழிலுக்கு
வந்தனம் செய்வோம்னு
பாட்டு படிச்சப் புலவன்
புட்டு புட்டு வெக்கலயே.
7 comments:
//தேறியது முப்பது மூட்டை
இழந்த இருபது மூட்டைக்கு//
இதுதானுங்க கொடும
நல்ல வரிகள்...
விவசாயிகளைன் நிராதரவை கவிதயாப் புட்டுப்புட்டு வச்சுட்டிங்க...கும்மாச்சி..
விவசாயம் தொடர்ந்து ஆள்பவர்களால் நிராகரிக்கப்படுவதை ஒட்டியே இந்தக் கவிதை. பின்னூட்டம் இட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி.
முப்பது மூட்டை கிடைச்சாலே பாக்யம்
"தேறியது முப்பது மூட்டை
இழந்த இருபது மூட்டை"...
இது தான் இன்றய விவசாயின் நிலைமை...
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.