Pages

Thursday, 4 February 2010

அறியாமை பிழைக்கட்டும்


அப்பன் வியர்வை கைப் பையில்
அம்மா அறிவுரை அவளிடம் விட்டு
அவளின் ஒரே நகை கவர்ந்து
கனக்கும் பையில் உடைகளுடன்
காலை கதிரவன் விரியும் முன்பு
காதலனுடன் காணாமல் போவதற்கு
கால் வலிக்க ஓட்டம், தொடர் வண்டி
நிறுத்தம் நெருங்கி, சில்லறை கொடுத்து
சீட்டெடுத்து, இருக்கையில் அமர்ந்து,
வரச் சொன்னவன் வரவை எதிர்
நோக்கி, விழியிரண்டும் வழிவைக்க
இதயம் இறைந்து களைக்க,
இடது புறம் புறப்பட்டு, விரையும்
தொடர் வண்டியில் கட்டழகியின்
இடுப்பனைத்து எதிர் புறம் நோக்குபவன்
ஒன்றும் அறியாதிருந்த என்னை
இத்துணை தூரம் கொண்டு...
அவளிடம் அறியாமையாவது
பிழைக்கட்டும்.

9 comments:

  1. புரிஞ்சுக்கிட்டா சரி

    ReplyDelete
  2. அண்ணாமலையான், வானம்பாடி இருவருக்கும் நன்றி

    ReplyDelete
  3. இன்றைய காலத்தில் ஓரளவு தெளிவாகவே இருக்கிறார்கள் இளையவர்கள்.
    பிழைத்துக்கொள்வார்கள்,

    ReplyDelete
  4. நல்லாயிருக்கே........

    ReplyDelete
  5. உள்ளேன் அய்யா..
    (சாரி .. சார்.. நமக்கு இதுமட்டும் கொஞ்சம் புரியாதுங்க..அடுத்த பதிவுல வந்து சேர்ந்துக்கிறேன்)

    ReplyDelete
  6. இதெல்லாம் காதல் இல்லை வெறும் இனக் கவர்ச்சி மட்டுமே ன்னு மரமண்டைகளுக்குப் புரிந்தால் இப்படி

    //அப்பன் வியர்வை கைப் பையில்
    அம்மா அறிவுரை அவளிடம் விட்டு
    அவளின் ஒரே நகை கவர்ந்து
    கனக்கும் பையில் உடைகளுடன்
    காலை கதிரவன் விரியும் முன்பு
    காதலனுடன் காணாமல் போவதற்கு....//

    சம்மதிக்குங்களா?

    ReplyDelete
  7. inna kavarchi maaraathu . pattapin thaan theriyum. nalla karuththulla kavithai.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.