கரியக் கூந்தல் நடனமிட
கன்றுக்குட்டிக் கண்கள் போதையூட்ட
அபரிமித அழகு ஆர்ப்பரிக்க
அறிவுச்சுடர் தெறித்து எழ
நடையின் நளினம் நான்முகனின்
நல்ல படைப்பாற்றல்
அறிந்துக் கிறங்கும் வேளையிலே
இரவில் உன்முகம் புலப்படாது
மாறும் ஆண்களின் முகங்களின்
பறைசாற்றிய உண்மையின் தாக்கம்
எரியும் நெஞ்சை விட்டு ஒழித்தாலும்
சாக்கடை வெள்ளத்தில்
அமிழவும் முடியாமல்
குத்தி மேலெழுந்து
தத்தளிக்கும் சருகு.
7 comments:
சாக்கடை வெள்ளத்தில்
அமிழவும் முடியாமல்
குத்தி மேலெழுந்து
தத்தளிக்கும் சருக
ஏதோ ஒரு வலி தெரிகிறது .
/saakkatai vellaththil
amilavum mutiyaamal
kuththi melezhunthu
thaththalikkum saruku /
nalla varikal . paarattukkal.
நன்றி சங்கர், மதுரை சரவணன்.
என்னிக்காவது வெளிச்சம் பொறக்காதா?
//மாறும் ஆண்களின் முகங்களின்
பறைசாற்றிய உண்மையின் தாக்கம்
எரியும் நெஞ்சை விட்டு ஒழித்தாலும்//
கும்மாச்சி அவர்களே...
இதை இந்த பாமரனுக்கு புரியும் படி விளக்க முடியுமா?
சாக்கடை வெள்ளத்தில்
அமிழவும் முடியாமல்
குத்தி மேலெழுந்து
தத்தளிக்கும் சருகு
எத்தனையோ சருகுகள் இப்படி தத்தளித்துக் கொண்டு.....என்றும் வரும் விடியல் என்று விடியாத பொழுதுக்கு விழித்திருக்கும் விழிகள்...ஏனோ கண்கலங்குகிறது...
புரியுது..... ஆனா புரியல
கோனாரிடவும்
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.