Pages

Wednesday, 10 February 2010

சரோஜாவின் விளக்கம்


சரோஜாவிடமிருந்து வந்த பதில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இந்த பதிலை சற்றும் எதிர் பார்க்க வில்லை.

“இதைவிட சுலபமான வழி இருக்கா நீ சொல்லு என்றாள். நீ இத்தனை படிச்சிட்டிருக்க வேலை தேடுற, இன்னி தேதிக்கு நீ சம்பத்திக்க முடியாதத நான் சம்பாதிக்கிறேன்” என்றாள்.
என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இந்த பதிலின் நதிமூலம் வேண்டும் என்றால் என்னுடைய சுய சரிதையை நீங்கள் கேட்கவேண்டும்.

பட்டப் படிப்பை முடித்து வேலை தேடும் காலம் அது. என்னுடன் நண்பன் சங்கரும் தினமும் வேலைக்கு மனு போட்டுக் கொண்டிருந்தான். எவனும் வேலைத் தருவது மாதிரித் தெரியவில்லை.

தினமும் நான் காலை உணவை முடித்துவிட்டு சங்கர் வீட்டுக்கு போய் விடுவேன். அவன் இல்லை என்றாலும் அவன் அம்மா சங்கர் வந்துருவாண்டா நீ உட்கார் என்று கதவை திறந்து விட்டு அவள் சென்று விடுவாள். அவளுக்கு பக்கவாதம் வந்து கைகளும் கால்களும் செயலிழந்து, இப்பொழுது தான் ஓரளவுக்கு நடக்க ஆரம்பித்திருக்கிறாள்.
சங்கர் வந்தவுடன் நானும் அவனும் சிறிது நேரம் சதுரங்கம் ஆடுவோம். பின்பு பேசிக்கொண்டிருப்போம். மாலையில் தெருக்கோடி டீ கடையில் உட்கார்ந்து அரட்டை அடிப்போம்.

சங்கர் வீட்டின் எதிர் வீடு பெரும் பாலும் காலியாகவே இருக்கும். அதனுடைய சொந்தக்காரர் திருச்சியிலோ தஞ்சாவூரிலோ எங்கேயோ இருந்தார். சமீபத்தில் அந்த வீட்டில் ஒரு குடும்பம் குடி வந்தது. ஒரு கணவன் மனைவி, இரு குழந்தைகள், மற்றும் ஒரு இளம் பெண். அவள் அந்த மனைவியின் தங்கை போலும்.

இவளை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்தப் பதிவுப் போதாது. நல்ல அழகி. மா நிறத்தவள். இவளின் அழகிற்கு இன்றைய திரை நடிகைகளின் அழகு உரை போடக் காணாது. இதற்கு மேல் இவள் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை. தமிழின் வளம் இங்குக் கேள்விக்குறியாகிறது.?

இரவு நேரங்களில் இவள் வீடு விழிக்கும். தினமும் ஒரு இரண்டு மூன்றுக் கார்கள் வரும். எங்கள் தெருவிற்கு கார்கள் வருவது அதிசயம். இதற்கு மேல் அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்று சொல்ல அவசியமில்லை.

எனக்கும் சங்கருக்கும் சரோஜா மேல் ஒரு அனுதாபம் ஏற்பட்டது, இவள் அக்கா கணவன் இவளை தப்பாக உபயோகிக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.

சரோஜா மதிய நேரங்களில் நாங்கள் சதுரங்கம் விளையாடும் நேரம் சங்கர் வீட்டில் திண்ணையில் அமர்ந்துக் கொண்டு எங்கள் விளையாட்டை வேடிக்கைப் பார்ப்பாள்.

பெரும்பாலும் நாங்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவோம், அவள் இருப்பதை கண்டு கொள்ள மாட்டோம்.

அன்று பாதி விளையாட்டில் சங்கர் பால் வாங்க கடைக்கு சென்ற பொழுது, சரோஜா என்னிடம் பேச்சைத் தொடங்கினாள்.

நான் என்ன படித்திருக்கிறேன் என்ன செய்கிறேன் என்று தொடங்கியப் பேச்சு அவளைப் பற்றிய திரும்பிய பொழுதுதான் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அந்தப் பதில் கிடைத்தது,

10 comments:

  1. அப்படி என்னங்க சொன்னாங்க சரோஜா...

    ReplyDelete
  2. இரண்டாவது பத்தியைப் படியுங்கப் புரியும். வித்யாசமா வரிகளை வேறு
    புட்டு புட்டு வைத்திருக்கிறேன்

    ReplyDelete
  3. ஹ்ம்ம்.., பின்னாடி சொல்லவேண்டியத முன்னலயே சொல்லிடிங்களே.. இதான் பின்நவீனத்துவமோ

    ReplyDelete
  4. //நண்பன் சங்கரும்//
    நா இல்லப்பா...

    //இவளை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்தப் பதிவுப் போதாது. நல்ல அழகி. மா நிறத்தவள். இவளின் அழகிற்கு இன்றைய திரை நடிகைகளின் அழகு உரை போடக் காணாது. இதற்கு மேல் இவள் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை. தமிழின் வளம் இங்குக் கேள்விக்குறியாகிறது.?//
    எவ்வளோ ஜொள்ளுளூளூ

    //எனக்கும் சங்கருக்கும் சரோஜா மேல் ஒரு அனுதாபம் ஏற்பட்டது//
    ச்சீ ச்சீ இந்த பழழம் புளிக்கும்.

    //பெரும்பாலும் நாங்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவோம், அவள் இருப்பதை கண்டு கொள்ள மாட்டோம்.//
    எப்பூடிடா அவ்ளவு அம்சமான ஃபிகர் பக்கத்துல வச்சுக்கிட்டு வெளாட்ல கவனமா இருப்ப. எனக்கு ரெண்டு காதும் குத்தியாச்சுடா....

    ReplyDelete
  5. குஞ்சு உனக்கே இது நியாயமா இருக்கா, நீ அவகிட்டே என்ன பேசின, என்ன செய்தே எல்லாம் எழுதினா மவனே உனக்கு இன்றைக்கு டின்னு தான்.
    நல்லது, மாலையில் சந்திப்போம்

    ReplyDelete
  6. கொஞ்சம் சட்டுன்னு முடிச்ச மாதிரி இருக்குப்பா..

    ReplyDelete
  7. தமிழின் வளம் இங்குக் கேள்விக்குறியாகிறது.?

    ........... ஜொள்ளு வளம் போல தமிழ் வளம் இல்லையா?

    ReplyDelete
  8. என்ன சார்.. இப்புடி கொண்டுவந்து நிறுத்திட்டிங்க..

    அடுத்த பதிவு..?
    பட்டாபட்டி டைம் ஸ்டார்ட்...

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.