Pages

Friday, 12 February 2010

ஆதலினால் (தினம்) காதல் செய்வீர்


காதலிலே மானுடற்கு கலவியுண்டாம்
கலவியிலே மானுடற்கு கவலை தீரும்
காதலினால் மானிடற்கு கவிதையுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைகளுண்டாம்
பாரதி பரிந்துரைக்கும் ஆதலினால் காதல் செய்வீர்

ஒரு தலைக் காதல், முக்கோணக் காதல்
பேசி காதல், பேசாக் காதல்
சொல்லி காதல், சொல்லாக் காதல்
எல்லாக் காதலும் காதலில் அடங்கா

ஊன் உயிரை உருக்கி உணர்வுகள் பெருக்கி,
உள்ளத்திலே உவகை கொண்டு
நேசிப்பவளை நேசித்து,
என்னுள் நீ, உன்னுள் நான்
உலகம் நீ என உணர வைத்து
செல்வம் எல்லாம் செல்லா காசாக
செருக்குடன் அகலும் பொழுது
உண்மை காதல்
உணர்ச்சிகள் அடங்கும் நேரம்
ஊரறிய புறப்படும்.





உண்மைக் காதலுக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் அன்றோ.

9 comments:

  1. /unmai kaathal unarchchikal atankum neram oor rariya purappatum. / ithu nalla kaathal kavithai. kumm munnu vanthirukku kavithai.

    ReplyDelete
  2. இன்றைய கவிதை உண்மையிலேயே அருமை கும்மாச்சி

    ReplyDelete
  3. தேனம்மை உங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. //உண்மைக் காதலுக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் அன்றோ.//

    இவ்வளவு தாண்ணே மேட்டர்! இதை விட நடுமண்டையிலே குட்டி யாராலேயும் சொல்ல முடியாது. அற்புதமான கவிதை!

    ReplyDelete
  5. சேட்டை வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. ஒரு தலைக் காதல், முக்கோணக் காதல்
    பேசி காதல், பேசாக் காதல்
    சொல்லி காதல், சொல்லாக் காதல்
    எல்லாக் காதலும் காதலில் அடங்கா

    ..............உண்மைக் காதலுக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் அன்றோ.

    ....... well-said!

    ReplyDelete
  7. காதலுக்கு என்றுமே காதலர் தினம்தான்.
    நல்ல கருத்து கும்மாச்சி.

    ReplyDelete
  8. சரவணன், சித்ரா, தேனம்மை, ஹேமா உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. அண்ணாச்சி நீங்க ரொம்ப சூப்பரா படைத்திருக்கீர்கள்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.