அஜயும், அம்ருதாவும் வீட்டில் நுழையுமுன் அந்தக் கடிதத்தை கண்டனர்.
அஜய் உனக்குத்தான் கடிதம் என்றாள் அம்ருதா.
அஜய் கடிதத்தைப் படித்தான்.
“அம்மு எங்க அம்மா இங்க வராங்க, ஏதோ ஒரு உறவினரின் திருமணமாம், அதை முடித்து விட்டு என்னுடன் இந்த வீட்டில் தங்கப் போவதாக எழுதியிருக்கிறாள்”.
“ஓ அப்படியா” என்றாள் அம்ருதா.
“என்ன அப்படியா, நீ அந்த ஒரு வாரம் ஏதாவது தோழிகள் வீட்டில் தங்கிக் கொள்”.
“என்ன அஜய் விளையாடற எனக்கு யார் தோழி இங்கே இருக்காங்க, ஒன்று செய்யலாம் அந்தக் கடைசி ரூமில் ஒரு சிங்கள் கட்டில் வாங்கிவிடுவோம், அம்மா இருக்கும் ஒரு வாரம் நான் அங்கே உறங்குகிறேன்”.
“அது செய்யலாம் அம்மு, ஆனால் எங்க அம்மா படிக்காதவளே தவிர நல்ல புத்திசாலி, நம் உறவைக் கண்டு பிடித்து விடுவாள்”.
“அஜய் நீயே அம்மாவிடம் நான் இந்த வீட்டை ஷேர் செய்து கொள்கிறோம் என்று சொல்லிவிடு”.
“கேட்காமல் வலியப்போய் பொய் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை அம்மு”.
“அம்மா ரொம்ப சாமர்த்தியமானவள் எப்படியாவது கண்டு பிடித்து விடுவாள். மேலும் நாமோ திருமனம் செய்துக்கொள்ளப் போவதில்லை. இங்கு இருக்கும் வரை ஒரு வருடம் அல்லது எத்தனை வருடமோ ஒன்றாக இருக்கப் போகிறோம். நீதான் முதலிலேய சொல்லிவிட்டாயே அம்மு “லிவிங் டுகதேர்” என்று. அம்மா இதையெல்லாம் ஒத்துக்கொள்ளமாட்டாள்”.
அம்மா வந்து ஒரு வாரம் தங்கி விட்டு சென்றாள். இருந்த ஒரு வாரமும் அஜயுடனும் அம்ருதாவுடனும் நன்றாகப் பேசினாள், ஆனால் அஜயிடம் அம்ருதாவைப் பற்றி ஒன்றும் கேட்கவில்லை.
அஜய் அம்ருதா காலை உணவின் போது அந்த இரண்டு பாத்திரங்களைத் தான உபயோகிப்பார்கள், அது அம்ருதா வாங்கியது.. அந்தப் பாத்திரங்கள் அம்மா ஊருக்கு சென்ற நாள் முதல் காணவில்லை.
அஜய் எப்படி அம்மாவிடம் கேட்பது என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
பிறகு அம்மாவுக்கு கடிதம் எழுதினான். “அம்மா உன்னை கேட்க எனக்கு தயக்கமாக இருக்கிறது, நீ எடுத்துக்கொண்டு போயிருக்கமாட்டாய் என்று தெரியும், ஆனால் நீ வந்து போன பின்பு அந்த பாத்திரங்களைக் காணவில்லை”
இரண்டு நாட்கள் கழித்து அம்மாவிடமிருந்து கடிதம் வந்தது.
“அந்தப் பாத்திரங்கள் அவளின் கட்டிலின் தலையணைக்கு அடியில் தான் உள்ளது, எடுத்துக் கொள்ளுங்கள்” என்று எழுதியிருந்தாள்.
புரிந்தவர்கள் வோட்டைப் போடுங்கள்(பின்னூட்டமும் போடுங்கள்), புரியாதவர்கள் வோட்டைப் போட்டு பின்னூட்டத்தில் கேளுங்கள் புரிய வைக்கிறேன்.
{மின்னஞ்சலில் வந்த ஒரு கருவை வைத்து எழுதியிருக்கிறேன்).
11 comments:
ஐயா! பொடி வைத்து எழுதுவதிலும் நீங்கள் கில்லாடி!
ஐயா! பொடி வைத்து எழுதுவதிலும் நீங்கள் கில்லாடி!
ஹிஹி... எப்பவோ கேட்ட ஆங்கில A-Joke. அதை பதம் குறையாமல் அ-ஜோக் ஆக்கியிருக்கறீங்க! ம்! நல்லாயிருக்கு!
நரேஷ், ஜெகநாதன் வருகைக்கு நன்றி.
ஹிஹி.அ-கதை நல்லா இருக்கு
????????
பாத்திரங்கள் இருப்பது கூடத் தெரியாமலா...சரி,சரி! அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பான்னு மன்னிச்சு விட்டுரலாம் அந்த ஜோடிங்களை..! :-)))
Very Nice ...
I could not understand.... Pl help..
ஹ்ம்ம்ம்,,,
மன்னிச்சுடுங்க...என்னோட சிறு மூளைக்கு எட்ட்டல ...அதனால நீங்களே கொஞ்சம் சொன்னீங்கன்னா....
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.