ஹைதராபாத்: 15 வயதே ஆகும் மாணவனைக் காதலித்து அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி கல்யாணமும் செய்து கொண்ட 22 வயது ஆசிரியையால் ஆந்திராவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் கோமட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ரம்யா (22). அனுமகொண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவன் நாகேசுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. நாளாக நாளாக இது காதலாக மாறியது.
நாகேஷின் பெற்றோர், போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், 15 வயதே ஆன எங்களது மகன் நாகேஷை ஆசிரியை ரம்யா மயக்கி கெடுத்துவிட்டார். நல்லதைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை நஞ்சை விதைத்துள்ளார். மைனர் வயதுடைய என் மகனை கடத்தி திருமணம் செய்த ரம்யா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பின்னர் நாகேஷை அவனது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால் நான் ரம்யாவுடன்தான் வாழ்வேன். எங்களை பிரித்தால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினான். இருந்தாலும் விடாமல் காரில் ஏற்றி அவனை கூட்டிக் கொண்டு போய் விட்டனர் பெற்றோர்.
சமீபத்தில் வந்த செய்தி, எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
இரு வீட்டிலும் எதிர்ப்புக்குப் பின் இருவரும் ஊரை விட்டு ஓடி வேறு ஊரில் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை ஒரு மன இயல் ரீதியாக ஆராய்வோம்.
பதினைந்து வயது சிறுவன், முடிவெடுக்க முடியாத வயது. பெரும்பாலும் பருவ உணர்ச்சிகளால் உந்தப் படும் மனது. பார்ப்பவர்கள் எல்லாம் தனது மனைவியாக நினைக்கும் வயது. சொல்லப் போனால் எந்தப் பெண் வேண்டுமானாலும் இந்த நிலையை உபயோகித்துக் கொள்ளக்கூடிய பற்றிக்கொள்ளக்கூடிய "பஞ்சு"
இப்பொழுது நெருப்பைப் பார்ப்போம்.
கல்வி கற்றுத்தர வந்தவர்,
கற்றுக் கொடுத்தது முறையற்ற "காதல்". இருபத்திரண்டு வயதில் ஓரளவுக்கு மனது பண்பட்டு இருக்க வேண்டும். இவரது உந்துதல் குடும்ப சூழ்நிலையாக இருக்க வேண்டும். திருமணம் என்பது கேள்விக் குறியாக, தன் நிலைமை குறித்த சந்தேகம் இருந்திருக்கவேண்டும்.
இப்பொழுது ஆண்துணை, தான் ஆளுமை செய்ய ஒரு ஆண் (சிறுவன்).
அல்லது இந்த வயதில் தோன்றும் உணர்ச்சிகளுக்கு ஒரு பாதுகாப்பு வடிகால் என்று நினைத்திருக்கக் கூடும்.
இதையே ஒரு ஆசிரியன் மாணவியை கூட்டிக் கொண்டு ஓடி திருமணம் செய்திருந்தால் சட்டம் என்ன செய்திருக்கும், ஆசிரியன் கம்பி எண்ணிக் கொண்டிருப்பான்.
ஆணிற்கு பெண் சரி நிகர் சமானம் என்று எவன் சொன்னது. போங்கப்பு.
9 comments:
கலி முத்தி போச்சி...இங்கே கும்பகோணத்துல ஒரு சாந்தி....
உண்மை கும்மாச்சி தவறை யாருமே செய்யக்கூடாது இதில் ஆணென்ன பெண்ணென்ன
கண்மணி, தேனம்மை உங்கள் இருவரின் வருகைக்கு, நன்றி,
சட்டம் எல்லோருக்கும் சமம் என்ற கருத்தில் மாறுபாடு கிடையாது.
ஹூம்! இந்த மாதிரியெல்லாம் சினிமாவுலேயும், கதையிலேயும் கூட வந்ததில்லையே! யாராவது இதை வச்சுப் படமெடுத்து சமுதாயத்தை சீர்திருத்த முயற்சி பண்ணிருவாங்களோன்னு பயமாயிருக்குண்ணே! :-(((((((
நல்ல யோசனைதான் சேட்டை, ஆனால் எடுத்துட்டானுங்க, இப்போ தனிக்கைல மாட்டிக்கிட்டு முழிக்குது.
விளையாட்டுக்கல்யாணமே வெறும் விபரீத உறவாகுமே .........கை கொட்டி சிரிப்பார்கள்..... ஊரார் ....சிரிப்பார்கள்
என்று எண்ண தோன்றவில்லியா ........?காதலுக்கு கண் இல்லை.
சினிமாவுக்கு தணிக்கை உண்டு. நிஜ வாழ்க்கையில் இல்லையா? என்ன கொடுமை சார், இது.
நிலாமதி, சித்ரா வருகைக்கு நன்றி.
நிஜ வாழ்க்கையில் தணிக்கை, மனசாட்சி தான். அந்த ஆசிரியை அதைப் பற்றி உணர்ந்ததாகத் தெரியவில்லை. .
லோகம் கெட்டுப்போயிண்டிருக்கு அப்பிடிங்கிறதை தவிர வேறன்ன? இதெல்லாம் பதிவு பண்ணாதீங்க அண்ணா.
நீங்க செய்யவேண்டியது நிறையா இருக்கு..நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.