இடம்: கோயஸ் தோட்டம் அம்மா, உ.பி.ச தீவிர சிந்தனையில் இருக்கின்றனர்.
ஓ.பி, கம்பிதுரை, வெங்கோட்டையன் பரபரப்புடன் உள்ளே பம்மி பம்மி என்ட்ரி கொடுக்கிறார்கள்.
மூவரும் காலில் விழுகின்றனர்.
அம்மா வணக்கம்மா.
அம்மா அலுப்புடன், “ஓ.பி வெங்கு, கம்பி வாங்க கொஞ்சநேரம் நிம்மதியா இருக்க வுட மாட்டீங்களா”.
அதில்லம்மா, நீங்க இல்லாம ஒடனாட்டில, மரம், செடிஎல்லாம் துளிர் உட்டுப் போச்சும்மா.
ஆமாம் கவனிக்கலேன்னா காடு மாதிரி தான் வளரும், அதுக்கு என்ன ஓ.பி.
அங்க அப்படின்னா கட்சியிலே இலை பட்டுப் போயிட்டிருக்கும்மா,
செங்கு என்ன பேத்தறீங்க.
அது என்னான்னு தெரியலேமா, உங்க முன்னாடி அப்படித்தான் வருகுது.
நம்ம ஆளுங்க எல்லாம் எதிர் கட்சியிலே என்ட்ரி உட்டுக்கினே இருக்காங்கம்மா.
சரி அதுக்கு இப்போ என்ன?, நீங்களும் போகனுமா, “போங்க நான்தான் இந்தக் கட்சி, இந்தக் கட்சிதான் நான்”. கூட உ.பி.ச,
ஐயோ அது இல்லம்மா, நாங்க எப்பவும் உங்க காலடிலதான் இருப்போம்மா.
அந்த குஸ்.வி. சேகர், பயம்கொண்டான், சுனிதா ராதாகிருஷ்ணன் எல்லாம் எதிர் கட்சி பொதுக் கூட்டத்துக்குப் போய் உங்களைப் போட்டுக் குடுக்கிராங்கம்மா.
அதெல்லாம் நாம ஆட்சிக்கு வந்தவுடனே பிடிச்சி உள்ளப போட்டுடலாம்.
அம்மா, ஜனங்க இந்த தடவ நம்ம இலைக்கு தண்ணி ஊத்தமாட்டாங்க போல தெரியுதுமா,
சும்மா வாய மூடுங்க, எல்லாம் எலெக்ஷன் சமயத்துல லட்டு கொடுக்கலாம். அடுத்த சி.எம், நான்தான் போய் வேலயப்பாருங்க.
11 comments:
என்னண்ணே, பயமுறுத்துறாங்களா? எங்களுக்கு எதையும் தாங்கும் இதயமிருக்கில்லா...?
சார்.. சார்..
அப்படியே கொஞ்சம் ஊறுகாயும் கொடுக்கச் சொல்லுங்க..
ஏன்னா லட்டு , புல்லா சாப்பிட , வசதியாயிருக்குமில்ல...
:)) இப்புடி வேற நினைப்பிருக்கோ.
சும்மா வாய மூடுங்க, எல்லாம் எலெக்ஷன் சமயத்துல லட்டு கொடுக்கலாம்.
......... அப்புறம் அல்வாதான்.
காலம் போன கடைசியில ஒரு ஜென்மம் தமிழ் நாட்டையே தன வீட்டு எழுதி வச்சி கிட்டு இருக்கே ... அந்த கொடுமைய நினைச்சா .. உங்க மொக்கை க்கு சிரிப்பு வரல.
@அஹோரி said...
காலம் போன கடைசியில ஒரு ஜென்மம் தமிழ் நாட்டையே தன வீட்டு எழுதி வச்சி கிட்டு இருக்கே ... அந்த கொடுமைய நினைச்சா .. உங்க மொக்கை க்கு சிரிப்பு வரல.
//
சார். நீங்க ஏதோ எக்ஸ்பையர் ஆன பீஸ பத்தி , சொல்லற மாறியிருக்கு சார்..
லட்டா..., அப்போ பிரியாணி இல்லயா
பாவங்க... அம்மா.
என்ன தல சீக்கிரம் (சின்னதா ) முடிச்சிட்ட , ஏன் கோயஸ் தோட்டம் அம்மா அதுக்குள்ள ஒய்வு எடுக்க போய்டாங்கள
ஆமா அம்மா லட்டுனு சொன்னங்களா அல்லது அடுத்த அல்வான்னு சொன்னங்களா கும்மாச்சி
ஆட்சிக்கு வந்தோன கும்மாச்சிக்கு லட்டு இல்லை வேட்டு இருக்கு.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.