நித்ய ஆனந்தம் நித்தமும் வேண்டி
சத்திய வழி துறந்து சகதியில் விழுந்து
சீயும் செங்குருதியும் வழிந்தெழுந்து பாயும்
சேலை இல்லாத பொழுது பகல் இரவாய்
ஈயும் எறும்பும் புகும் யோனிக்குள்
இரவு பகலாய் மாயும் மனிதரை
மாயாமல் வைக்க மருந்தொன்றை மறந்து
காவி உடையிலே காமக்களியாட்டம்
கதவைத் திற காற்று வரட்டும் என
கதவைத் திறந்து காற்றுடன், கன்னிகைகளும்
கதவை அடைத்து காதல், கலவி கலப்படம்
கோடிகளில் குவியும் இடங்கள்
கேடிகளின் கிடிக்கிப் பிடியில்
காவி உடை துறந்தக் காதல் செய்தி ஆகா
காவி உடை திறந்து காதல்
டி. ஆர். பி எகிற உதவும்
காவி மேல் விழுந்துத் தழுவிய நடிகை
காலம் மறந்து கை தட்டும்
இனி கோடிகள் கை மாறும்
சத்தியம் சட்டத்தின் பிடியில்
சிக்கி சின்னா பின்னமாகி
வாய்மை சில சமயம் வெல்லும்.
7 comments:
அன்பின் கும்மாச்சி
எழுத்தில் பாசாங்கு இல்லாமல் மனதில் பட்டதை எழுதும் செயல் நன்று
நல்வாழ்த்துகள் கும்மாச்சி
வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி சீனா, அண்ணாமலையான் அவர்களே.
பட்டிணத்தார் பாடல் போல்...அருமை
இனி கோடிகள் கை மாறும்
சத்தியம் சட்டத்தின் பிடியில்
சிக்கி சின்னா பின்னமாகி
வாய்மை சில சமயம் வெல்லும்
............ 2000 கோடியாமே? பேசாமா இருக்குமா? வேதனையான உண்மை சொல்லும் கவிதை.
ஆமாம் சித்ரா பக்தக் கோடிகளின் பணம் “லேடிகள்” போக கேடிகளின் கை மாறும்.
இவனை நினைச்சதுக்கப்புரமும் கவிதையெல்லாம் எப்படி சார் வருது??!!
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.