“அதிகமா ஜொள்ளு விட்ட ஆண்மகனும் அடுப்படிக்கு வராத புருஷனும் சந்தோஷமா வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை”. கலை நிகழ்ச்சி முடிந்த அந்த இரவில் என் தங்கமணி விட்ட பஞ்ச் டயலாக். தங்கமணிக்கு என்னை நக்கலடித்துப் பார்ப்பதில் அலாதி மகிழ்ச்சி.
இந்த பஞ்சின் நந்திமூலம் ரிஷிமூலம் தெரியனுமுன்னா நீங்க ஒரு எட்டு ஒன்பது வருஷம் என்னோட பின்னோக்கி வரணும்
அரபு நாடுகளில் பொங்கல், தமிழ் புத்தாண்டிற்கு வருடா வருடம் கலை நிகழ்ச்சிகள் உள்ளூர் தமிழ்ச் சங்கங்களால் நடத்தப்படுவது ஊரறிந்த விஷயம். தமிழ் புத்தாண்டிற்கு அந்த வருடமும் நடத்தினார்கள். அந்த வருடம் மெல்லிசை விருந்தாக இளையராஜாவை கேட்டுப் பார்த்து அவர் வர முடியாத காரணத்தினால் ஒரு சிறிய மெல்லிசைக் குழு, சில புதிய பழைய பாடகர், பாடகிகள், சில மார்க்கெட் போன நடிகைகள், சில நடனமணிகள், இரண்டாம்தர நகைச்சுவை கலைஞர்கள் என்று ஒரு கூட்டத்தை கூட்டி வந்தார்கள். எல்லாம் கலந்துக்கட்டி கதம்பமாக ஒரு நிகழ்ச்சி. நிகழ்ச்சிக்கு வந்த ஒரே சுமாரான நடிகை நம்ம “நித்திப் புகழ்தான்”.
கலைஞர்களை ஒரு இரண்டு நாளுக்கு முன்பு வரவழைத்து ஒத்திகைப் பார்க்க அரங்கத்திற்கு அழைத்து வந்து கொண்டு விடுவது என்று சில சங்க உறுப்பினர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.
நிகழ்ச்சியன்று இடை வேளையில் பொருளாளர் என்னைப் பார்த்து நிகழ்ச்சி முடிந்தவுடன் கலைஞர்களை அவர்கள் தங்கும் விடுதியில் கொண்டு விடவேண்டும் என்னால் முடியுமா என்று கேட்டார். அதற்கென்ன செய்துவிடலாம் என்றேன்.
இடைவேளை முடிந்து நிகழ்ச்சி தொடங்கியவுடன் தங்கமணி என்னிடம் பொருளாளர் என்ன சொன்னார் என்று கேட்டாள். நான் உண்மையைச் சொன்னேன். நாளைக்கு பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் உண்டு தெரியுமில்லை, நேரமாகப் போகிறது என்றாள்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் வெளியே வந்து காரில் காத்துக் கொண்டிருந்தோம். பக்கத்திலப் பார்த்தா ரஜினி படத்துல வராமாதிரி ஒரு இருபது முப்பது கார்கள் கதவை திறந்தபடி நின்றன. எல்லா ஆளுங்களும் கோட் சூட் போட்டபடி அரங்கின் வாயிலையே “வளர்த்த நாய்” மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். கலைஞர்கள் வெளியே வந்தார்கள். முதலில் வந்தவள் நடிகை தான். எங்கள் காரை நோக்கி வந்தாள். நான் விறு விறுவென்று இறங்கி காரின் பின் பக்கக் கதவை திறந்தேன். அவள் நேராக வந்து எனக்கு அடுத்து கோட் சூட் போட்டுக் கொண்டு பென்ஸ் காருடன் காத்திருந்த என் மேனேஜர் காரில் ஏறிச சென்றாள். அவர் என்னை திரும்பி “உன் காரேல்லாம் ஒரு காரா” என்ற பார்வை பார்த்து “மூத்திரம் குடித்த மாடு போல்” நடிகையுடன் சென்றார்.
என் காரில் ஏறியவர்கள் பழையப் பாடகி (“பயம் புகழ்”), பாடகரும் வந்தார்கள். அவர்களை விடுதியில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்தவுடன் தான் நான் மேற்கூறிய பன்ச் டயலாக் வந்தது.
பிறகு அந்த பிரசித்திப் பெற்ற காணொளி வந்தவுடன் தங்கமணி இப்போதெல்லாம் “நித்யானந்தா உங்களைத்தான் போங்க அடுப்புல ரசம் கொதிக்குது போய் பாருங்க” என்று விரட்டுகிறாள்.
(“இதெல்லாம் சும்மா உவ்வாகாட்டிக்கு கற்பனைன்னு சொன்னா நம்பவாப் போறீங்க”
புடிச்சா வோட்ட “நித்திய” நெனைச்சு குத்துங்க, அப்படியே “கதவைத் திறந்து வையுங்க காசு வரும்”.)
8 comments:
அப்புறம் பென்ஸ் கார் வாங்கினீங்களா இல்லையா? ஹி,ஹி,ஹி,ஹி.....
வீட்டம்மா கிட்ட மாட்டுனது பார்த்தா சிரிப்புதான் வருது கும்மாச்சி
அட.. பத்து வருசம் முன்னாடியே , கலை நிகழ்சிகளில்,
அக்கறை காட்டி வந்தவரா?..
பாவம்.. அப்பவே வீசிங் ப்ராப்ளம் போல..
அதை ஏன் கேக்கிறீங்க சித்ரா, வாங்கினேன் ஆனா அடுத்த முறை “பரவை முனியம்மா” தான் வந்தாங்க. ஹிஹிஹி.
வாங்கண்ணே பட்டாபட்டி.
அப்பவே ஒரு மாதிரி “குன்சா”வா தான் இருந்தாங்க. “
இங்க கலைச்சேவை முடித்து தான் அப்புறம் “ஏகாந்த சேவை, கோமண சேவை” எல்லாம்.
தேனம்மை வருகைக்கு நன்றி.
OK ri rightttu
கதவை திறந்து வையுங்க.. ஆட்டோவுல ஆள் வரப்போறாங்க
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.