Pages

Sunday, 28 March 2010

அனுபவம் -வாக்கினிலே வரைந்து, வாரிக்கொடுத்து


ஏடெடுத்து படிக்கையிலே விளங்காத சொந்தபந்தம்
பாடுபட்டு சேர்த்ததை கேடு கேட்டு தொலைத்து
மாடு மேய்க்க வக்கில்லா மடையன் என்று
மக்கள் சுற்றம் மேடுறுத்தி கூறுகையில்
காசு பணம் வேண்டும் என்று கையேந்தி
கூறு கெட்டு பொய்யுரைத்த பந்தம்
கேடு கெட்டு போனதனால், உழைப்பு மற்றும்
ஊன் உருக்கி சேர்த்து வைத்த செல்வமெல்லாம்
போன இடம் தெரியலே, ஏட்டினிலே எழுதாமல்
வாக்கினிலே வரைந்து, வாரிக்கொடுத்து
போக்கிடம் தெரியாமல் புழுங்கி நிற்கையில்
ஏட்டினிலே இல்லாத எவரும் சொல்லாத
பாடம் இன்று விளங்குது.

7 comments:

  1. நல்ல கருத்துக்கள் உள்ளக் கவிதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என்ன ஆச்சு சார்... கவிதையில் கொஞ்சம் சோகம் தெரியுது? உங்க அனுபவமா இல்ல பொதுவா சொல்றீங்களா?

    ReplyDelete
  3. உங்கள் வருகைக்கு நன்றி.

    அனுபவம்தான் தலைவா, எல்லோரும் உஷாரா இருக்கத்தான்.

    ReplyDelete
  4. இது காலம் காலம இருக்கிற பாடம்தான். படிச்சாலும் புரியாம போயிடும் சமயத்துல.:)

    ReplyDelete
  5. ஏடெடுத்து படிக்கையிலே விளங்காத சொந்தபந்தம்
    பாடுபட்டு சேர்த்ததை கேடு கேட்டு தொலைத்து


    ....வாழ்க்கை பாடங்கள், அனுபவங்களில் மிளிர்ந்து கவிதையாக வந்து உள்ளது .

    ReplyDelete
  6. வருகை தந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.