Pages

Tuesday, 30 March 2010

பென்னாகரம் தேர்தலடா......


பென்னாகரம் தேர்தலடா
பெரிசா வந்து போனதடா
கண்ட கண்ட கட்சியடா
காசை அள்ளிக் கொட்டுதடா

கருப்புக் கட்சி “கம்மல்”டா
மஞ்சக் கட்சி “மூக்குத்தி”டா
நீலக் கட்சி “கட்டிங்” டா
பச்சைக் கட்சி “கத்தை”யடா

வண்ண வண்ண சேலையடா
வரிஞ்சுக் கட்ட வேட்டியடா
பட்டா பட்டி இல்லையடா
பக்குன்னு ஆகுதடா


கட்டிங் வுட்ட கணவன் எல்லாம்
கண்மணிகளின் கையை முறுக்கி
முதுகினிலே மொத்துதடா
காலடியில் தங்கமடா

பிச்சை எடுக்கும் பெருமாளடா
லெக்பீசு பிரியானியடா
சரக்கடிச்ச “ஜனா”டா
சரசாவோட “ஜல்சா”டா

மப்பு இறங்கிப் போகுதடா
மண்டை மெர்சல் ஆகுதடா
மறுபடியும் தேர்தல் வர
மனசு ரொம்ப ஏங்குதடா

இப்படியே தேர்தல் வந்தால்
ஆணி புடுங்க வேண்டாமடா
பில்கேட்ஸ் பிர்லா எல்லாம்
பின்னாடி வருவானடா

அடிக்கடியே தேர்தல் வர
அடிமனசு ஏங்குதடா
உடுக்கடிச்சு கூழ் ஊத்தி
கருப்புசாமிக்கு கிடா வெட்டி
படையல் வைக்கப் போறோம்டா

15 comments:

  1. சூப்பர் கவிதை சார்....

    அடுத்த தேர்தலுலில் சந்திப்போம் மக்களே..

    -இவன் அரசியல்வாதி

    ReplyDelete
  2. பட்டா பட்டி ஸார் பென்னாகரம் வெச்சு நீங்களும் ஒரு பதிவ போட்டுட்டிங்க, அடுத்த இடைதேர்தலில் சிந்திப்போம்.

    ReplyDelete
  3. // அடிக்கடியே தேர்தல் வர
    அடிமனசு ஏங்குதடா
    உடுக்கடிச்சு கூழ் ஊத்தி
    கருப்புசாமிக்கு கிடா வெட்டி
    படையல் வைக்கப் போறோம்டா //

    ஆஹா... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..

    ReplyDelete
  4. ராகவன் வருகைக்கு நன்றி

    தமிழ்நாட்டு நிலைமை இப்போ இப்படித்தான். .

    ReplyDelete
  5. பென்னாகரம் தேர்தல் முடிவுகள்

    http://manakkan.blogspot.com/2010/03/blog-post_29.html

    ReplyDelete
  6. கலக்கிட்டீங்க.......

    ReplyDelete
  7. அருமை. கருணாநிதிக்கு ரெண்டு காப்பி அனுப்ப்ங்க.

    ReplyDelete
  8. செந்தழல் ரவி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  9. அஹோரி வருகைக்கு நன்றி, காபி அனுப்பிச்சா திருந்திடுவாங்களா? நடக்காது ஸார். .

    ReplyDelete
  10. கட்டிங் வுட்ட கணவன் எல்லாம்
    கண்மணிகளின் கையை முறுக்கி
    முதுகினிலே மொத்துதடா
    காலடியில் தங்கமடா


    ...... இப்படியெல்லாம் உண்மையை போட்டு உடைக்கப்படாது. ஹா,ஹா,ஹா.....

    ReplyDelete
  11. சித்ரா மப்புல உண்மை தானா வருது. ஹி.ஹி.

    ReplyDelete
  12. ////இப்படியே தேர்தல் வந்தால்
    ஆணி புடுங்க வேண்டாமடா
    பில்கேட்ஸ் பிர்லா எல்லாம்
    பின்னாடி வருவானடா////



    அடாடா!!! எத்தன டா !!!
    கலக்குங்க !!

    ReplyDelete
  13. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...இத போயி பாட்டா பாடிக்கிட்டு...மேல இருக்கிற பாப்பா ஜெயிச்சுதா இல்லையா? கோவிச்சுக்காதீங்க நம்ம அரசியல் அறிவு அவ்வளவுதான், அதான் சந்தோஷமா இருக்கிறேன்.

    ReplyDelete
  14. பாப்பாதான் அடுத்த “இடை” தேர்தலில் நம்ம கட்சி வேட்பாளர்

    ReplyDelete
  15. நல்ல.. அருமையான‌ கவிதை!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.