அன்று மழை மேகம் சூழ்ந்துக் கொண்டு “வருமோ வராதோ” என்ற சென்னை வானிலை காலையிலிருந்தே “பூச்சிக்காட்டி”க் கொண்டிருந்தது. விடுமுறையில் சென்னையில் இருந்த நான் அன்று ஒரு வேலை விஷயமாக பாரிஸ் வரை சென்று கடற்கரை சாலையில் வந்துக் கொண்டிருந்தேன். காலை நேரம் மணி பத்து தான் ஆகியிருந்தது. வண்டியை “ஐஸ் ஹவுஸ்” எதிரில் நிறுத்தி கடற்கரை புல்வெளியில் ஒரு மரத்தின் அருகே அமர்ந்து ஆர்ப்பரிக்கும் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு தனியாக அமர்ந்து கடலை வேடிக்கைப் பார்ப்பதில் எனக்கு அலாதி இன்பம்.
சிறிது நேரத்தில் ஒரு இளம் ஜோடியை இருவர் துரத்திக் கொண்டு வந்தனர். துரத்தியவர்களில் ஒருவன் அவளிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டிருந்தான். பட்டப் பகலில் அப்பட்டமாக அவள் உடையை கலைத்து அவள் மார்பில் கை வைத்து அமுக்கினான். அவள் அவனிடமிருந்து திமிறி என்னை நோக்கி ஓடி வந்தாள். துரத்திய இருவரும் அந்தப் பெண்ணின் கூட வந்தவனை பிடித்து அடித்துவிட்டு, பின்பு அவளை துரத்த ஆரம்பித்தனர். அவள் என்னிடம் ஓடி வந்து என் அருகே அமர்ந்து “பாருங்கண்ணா அடிக்கிறாங்க காப்பாத்துங்கண்ணா” என்று கூறி தன் கலைந்த உடைகளை சரி செய்துக் கொண்டாள்.
அதற்குள் அந்த இளைஞனும் துரத்தியவர்களும் என்னிடம் வந்து விட்டனர்.
பின்பு அவர்களின் உரையாடல்
ஏய் ...த்தா தள்ளிகினு வந்திருக்கியா.” துரத்தியவர்களில் ஒருவன்.
“முறைப்பெண்ணுங்க” இளைஞன்.
..த்தா எவன் கிட்ட கப்சா அடிக்கிற” துரத்தியவன்.
“இல்லைங்க நான் தாம்பரத்திலிருந்து வரேனுங்க இவன் என் முறைப் பெண்ணுங்க கல்யாணம் செய்துக்கபோறோம்” இளைஞன்.
துரத்தியவனில் இரண்டாமாவன் மறுபடி பெண்ணை நெருங்கி “ ...த்தா அவனுக்கு என்னடி செஞ்சே படகுப் பின்னாடி, எனக்கு செய்யடி” என்றான் மற்றுமவன் சொன்ன வார்த்தைகள் பதிவில் போட முடியாதவை.
அவள் என்னைப் பார்த்து “பாருங்கண்ணா அசிங்கமாப் பேசுறாரு” என்றாள்.
துரத்தியவர்கள் இருவரும் என்னை மதித்தது போல் தெரியவில்லை, அவர்கள் இருவரும் குடி போதையில் இருப்பது தெரிந்தது. அவர்களுக்குள் “...த்தா தள்ளிக்கினு வந்துகிறான், காலிலே பார்த்தேன் அண்ணா சமாதியாண்ட குந்திக்கின்னு கை போட்டுக்கினு இருந்தாங்க, ....மாள, காலிலேயே பீச்ச நாரடிக்கிறாங்க,” இளைஞனை திரும்பவும் அடித்தார்கள். அவனை போடா என்று துரத்த முயன்றார்கள்.
இவை எல்லாம் நான் கவனித்தும் ஒன்றும் சொல்ல எனக்கு தோன்றவில்லை. (நடப்பது புரிய வில்லை, புரிந்தாலும் நான் ஒன்று செய்யப் போவதில்லை, அது வேறு விஷயம்.)
அதற்குள் அந்தப் பெண் அங்கிருந்து நழுவி ஐஸ் ஹவுஸ் பக்கம் ஓடினாள். இளைனனும் அவர்களிடமிருந்து திமிறி அவளைப் பின்தொடர்ந்து ஓடினான்.
பின்பு அவர்களிருவரும் தங்கள் உரையாடலை தொடர்ந்தார்கள்.
“அவன் தள்ளிக்கினு வந்துகிறான் நம்ம கை வைச்சா இன்னா, பிகரு சரியில்லப்பா நல்லா அடி வாங்கியிருக்குது, சரி இத்த விடு தொ பார் மோட்டார் ரூமாண்ட ஒரு ஜோடிகீது அங்க தேறுதா பாக்கலாம் வா” என்று சென்றார்கள்.
இவர்களை சொல்லிக் குற்றமில்லை, அரசாங்கம் எல்லாம் இலவசமாக கொடுத்து பழக்கப் படுத்தி விட்டார்கள், ஆதலால் காலையிலேய மப்பு ஏற்றிக்கொண்டு அடுத்து “ஐட்டம்” இலவசமா கிடைக்குமா என்று கடற்கரைக்கு வந்து விட்டார்கள் கலாசாரக் காவலர்கள்.
Post Comment