Pages

Wednesday, 28 April 2010

சுறா- வசூலில் சாதனை


இன்னும் இரண்டு நாட்களில் படம் வெளிவரப்போகிறது, இந்த முறை ஒன்றும் பெரிய எதிர்பார்ப்பு இல்லை.

“ட்ரைலரில்” ஒன்றும் புதியதாக இல்லை, மசாலாதான் என்று பறைசாற்றுகிறது. எப்படியும் படம் பார்த்துவிட்டு நமது பதிவர்கள் படத்தை அக்குவேறு ஆணிவேராக அலசி ஹிட்ஸ்களை அள்ளப் போவது நிஜம்.

அதற்கு எதிர் பதிவு போட்டு “சுறா” ஆஸ்கருக்கு பரிதுரைக்கப் பட்டிருக்கிறது, “இளைய தலைவலி”யின் நடிப்புக்கு ஆஸ்கர் நிச்சயம் என்பார்கள், அவர்களது ரசிகர் பட்டாள “விசிலடிச்சான் குஞ்சுகள்”.

“கார்கிபவா” படம் வெளி வரும் முன்பே விமர்சனம் எழுதிவிட்டார். ஏறக்குறைய அவர் கற்பனைப்படிதான் படமும் இருக்கும் போல் தெரிகிறது.

இப்பொழுது உள்ள “அடைமொழி” கதாநாயகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தோல்வி படம் தருவதில் வல்லவர்கள். ஆனால் அதே நேரத்தில் நல்ல கதையுள்ள படங்கள் யார் நடித்தாலும் ஓடுகிறது.

அடைமொழி கதாநாயகர்கள் யாரையோ பின்பற்றி அவர் மாதிரி ஆகிவிடலாம் என்று பார்கிறார்கள். “தமிழ் நாட்டுக்கு அவர் ஒருத்தர் தான்”. அவரை மாதிரி யாரும் ஆக முடியாது. அதைப் புரிந்துக் கொண்டு அவரவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் வெற்றி கண்டிப்பாக தேடி வரும்.

இந்த முறையும் வெற்றிகரமான பத்தாவது நாள், என்று போஸ்டர் அடித்து ஒட்டப்படும்.

சிங்கமும், “சிங்கம் பெற்ற பிள்ளையும்”, கூசாமல் வசூலில் சாதனை, படம் வெற்றி என்பார்கள்.

சன் டிவி தன் பங்கிற்கு படத்தை “கூவி கூவி” விற்பார்கள்.

“தமிழ் திரையுலகின் இருண்ட காலம் இது, யாராலும் ஒன்று செய்ய முடியாது”.

Thursday, 22 April 2010

பிரபாகரனின் தாய்


மாவீரனைப் பெற்றெடுத்த பாக்யசாலி, பிறந்த மண்ணிற்கு தன் அந்திமக் காலத்தை மகளுடன் கழிக்க வந்தவளை விசா கொடுத்து, பின் இறங்க அனுமதிக்காத “மத்திய அரசு”, அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மாநில அரசு நடவடிக்கை, மிகக் கேவலமான, கீழ்த்தரமான செயல். மனிதாபிமானமற்றது. வன்மையாக கண்டிக்க வேண்டிய விஷயம், அய்யா பதிவாளர்களே, உங்களால் முடிந்தால் அதைக் கண்டித்து பதிவு போடுங்கள், ஆனால் அரசுக்கு கூஜா தூக்கும் வேலையை விட்டொழியுங்கள்.

எண்பதுகளின் தொடக்கத்தில் ஜெயவர்தனே ஆட்சியில், அந்தக் கருப்புநாளை எந்த ஒரு மானமுள்ள தமிழனும் மறக்க முடியாது. தலைநகர் கொழும்புவில் மூன்று லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். எத்துனை தமிழ் இளைஞர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர் இன்று அரசுக்கு கூஜா தூக்கும் “பீத்தப்பதிவாளர்களும்” தவறானக் கருத்தை பரப்பிக்கொண்டு அரசு போடும் விளம்பர “பிஸ்கட் துண்டுகளை” பொறுக்கும் பத்திரிகை நாய்களும் சற்றே சிந்தியுங்கள்.

“மலையாளி, மலையாளி” என்று தூற்றப் பட்ட அன்றைய முதல்வர் கொடுத்த ஊக்கத்தில் தமிழகமே ஈழத் தமிழர்களுக்கு துணை நின்றது. அந்த எழுச்சி ஏன் “தமிழ் ஈனத் தலைவர்” ஆட்சியில் இல்லை. “தொப்புள் கொடி உறவு” “தொந்திகொடி உறவு” என்று மக்களை ஏய்ச்சுப் பிழைக்கும் ஆட்சியில் இல்லை? சிந்தியுங்கள்.

ஐம்பதுகளின் தொடக்கத்திலேயே தமிழ் ஈழப் போராட்டம் அறவழியிலே நடத்தப் பட்டது. அவர்களை ஆயுதம் ஏந்த வைத்தது, யார்?.

நம்ப வைத்து கழுத்தறுத்த அன்றைய மத்திய அரசு.

மாவீரன் பிரபாகரன் தன் பிள்ளைகளை வெளிநாட்டிலே படிக்க வைத்து மற்றவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துகிறார் என்று தூற்றிய பத்திரிகைகள் இன்று அவர் தன் குடும்பம் முழுவதையும் போரிலே “காவு” கொடுத்திருக்கிறார்.
இப்பொழுது அந்தப் பத்திரிகைகள் மௌனம் சாதிப்பது ஏன்?

அவர் நினைத்திருந்தால் வந்த வரைக்கும் லாபம் என்று “ராஜீவ் காந்தி ஆட்சியிலே கொடுத்ததை வாங்கிக் கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்” ஆனால் அவர் வடக்கு, வடகிழக்கு மாகாணத் தமிழரை உயிரினும் மேலாக மதித்தார். தன் போராட்டத்தை தொடர்ந்தார்.

கண்ட கண்ட அரசியல் தலைவர்களுக்கு சிலை வைக்கும் பொழுது பிரபாகரனுக்கு சிலை வைத்தால் என்ன குறைந்து விடும்?.

காலையில் சின்ன வீட்டில் பசியாறிவிட்டு, மதியம் பெரிய வீட்டில் பகலுணவு உண்ண உண்ணாவிரதத்தை முடித்த “தமிழ் ஈனதலைவர்” தமிழ் மாநாடு நடத்துகிறார், அந்த அவலத்தை தட்டிக் கேட்க யாருமில்லை.

மொத்தத்தில் இவர் தமிழருக்கோ தமிழுக்கோ ஒரு ..யிரும் பிடுங்கவில்லை.

போரின் உச்சத்தில் நான் எழுதியக் கவிதை இப்பொழுது உங்களின் பார்வைக்கு.

நித்தமும் ஒரே செய்தி,
செத்து விழும் அவலம்,
வன்னியில் குண்டுப் பொழிவு,
கண்ணீரில் சிறுவர், சிறுமியர்,
அசைவற்று தாய்,
முலையுன்னும் சேய்.

ஆதரவற்ற நிலையில்,
அகதிகளாய் வருவோருமிடமும்,
சகதியில் உழன்ற சண்டாளர்களின்,
"தண்டல்" ராஜ்ஜியம்.

கண்டும் காணாத அரசாங்கம்,
இண்டு இடுக்கிலும் அரசியல்,
ஊர் வாயை மூட,
உண்ணாவிரதம் அறப்போராட்டம்,
எண்ணமெல்லாம் ஓட்டு வேட்டை.

வேசியோடு ஒப்பிடத் தோன்றும்,
எத்துனை தவறு..........................
காசுக்காக கற்பு கடை,
மூலதனம் விற்கப்படும் ,
அவளின் அவலத்தை,
காசாக்கும் கூட்டி கொடுப்பான்.........
நாய் கூட பிழைக்காது,
இந்த பிழைப்பு.


ஒன்று நிச்சயம் பிரபாகரன் விதைத்து சென்ற “தமிழ் ஈழம்” அடுத்த தலை முறையால் நிச்சயம் எழுச்சி பெறும்.

Monday, 19 April 2010

கடற்கரையில் நானும், அவளும் மற்றும் கலாசாரக் காவலர்களும்.


அன்று மழை மேகம் சூழ்ந்துக் கொண்டு “வருமோ வராதோ” என்ற சென்னை வானிலை காலையிலிருந்தே “பூச்சிக்காட்டி”க் கொண்டிருந்தது. விடுமுறையில் சென்னையில் இருந்த நான் அன்று ஒரு வேலை விஷயமாக பாரிஸ் வரை சென்று கடற்கரை சாலையில் வந்துக் கொண்டிருந்தேன். காலை நேரம் மணி பத்து தான் ஆகியிருந்தது. வண்டியை “ஐஸ் ஹவுஸ்” எதிரில் நிறுத்தி கடற்கரை புல்வெளியில் ஒரு மரத்தின் அருகே அமர்ந்து ஆர்ப்பரிக்கும் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு தனியாக அமர்ந்து கடலை வேடிக்கைப் பார்ப்பதில் எனக்கு அலாதி இன்பம்.

சிறிது நேரத்தில் ஒரு இளம் ஜோடியை இருவர் துரத்திக் கொண்டு வந்தனர். துரத்தியவர்களில் ஒருவன் அவளிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டிருந்தான். பட்டப் பகலில் அப்பட்டமாக அவள் உடையை கலைத்து அவள் மார்பில் கை வைத்து அமுக்கினான். அவள் அவனிடமிருந்து திமிறி என்னை நோக்கி ஓடி வந்தாள். துரத்திய இருவரும் அந்தப் பெண்ணின் கூட வந்தவனை பிடித்து அடித்துவிட்டு, பின்பு அவளை துரத்த ஆரம்பித்தனர். அவள் என்னிடம் ஓடி வந்து என் அருகே அமர்ந்து “பாருங்கண்ணா அடிக்கிறாங்க காப்பாத்துங்கண்ணா” என்று கூறி தன் கலைந்த உடைகளை சரி செய்துக் கொண்டாள்.

அதற்குள் அந்த இளைஞனும் துரத்தியவர்களும் என்னிடம் வந்து விட்டனர்.
பின்பு அவர்களின் உரையாடல்
ஏய் ...த்தா தள்ளிகினு வந்திருக்கியா.” துரத்தியவர்களில் ஒருவன்.
“முறைப்பெண்ணுங்க” இளைஞன்.
..த்தா எவன் கிட்ட கப்சா அடிக்கிற” துரத்தியவன்.
“இல்லைங்க நான் தாம்பரத்திலிருந்து வரேனுங்க இவன் என் முறைப் பெண்ணுங்க கல்யாணம் செய்துக்கபோறோம்” இளைஞன்.
துரத்தியவனில் இரண்டாமாவன் மறுபடி பெண்ணை நெருங்கி “ ...த்தா அவனுக்கு என்னடி செஞ்சே படகுப் பின்னாடி, எனக்கு செய்யடி” என்றான் மற்றுமவன் சொன்ன வார்த்தைகள் பதிவில் போட முடியாதவை.
அவள் என்னைப் பார்த்து “பாருங்கண்ணா அசிங்கமாப் பேசுறாரு” என்றாள்.
துரத்தியவர்கள் இருவரும் என்னை மதித்தது போல் தெரியவில்லை, அவர்கள் இருவரும் குடி போதையில் இருப்பது தெரிந்தது. அவர்களுக்குள் “...த்தா தள்ளிக்கினு வந்துகிறான், காலிலே பார்த்தேன் அண்ணா சமாதியாண்ட குந்திக்கின்னு கை போட்டுக்கினு இருந்தாங்க, ....மாள, காலிலேயே பீச்ச நாரடிக்கிறாங்க,” இளைஞனை திரும்பவும் அடித்தார்கள். அவனை போடா என்று துரத்த முயன்றார்கள்.
இவை எல்லாம் நான் கவனித்தும் ஒன்றும் சொல்ல எனக்கு தோன்றவில்லை. (நடப்பது புரிய வில்லை, புரிந்தாலும் நான் ஒன்று செய்யப் போவதில்லை, அது வேறு விஷயம்.)
அதற்குள் அந்தப் பெண் அங்கிருந்து நழுவி ஐஸ் ஹவுஸ் பக்கம் ஓடினாள். இளைனனும் அவர்களிடமிருந்து திமிறி அவளைப் பின்தொடர்ந்து ஓடினான்.
பின்பு அவர்களிருவரும் தங்கள் உரையாடலை தொடர்ந்தார்கள்.
“அவன் தள்ளிக்கினு வந்துகிறான் நம்ம கை வைச்சா இன்னா, பிகரு சரியில்லப்பா நல்லா அடி வாங்கியிருக்குது, சரி இத்த விடு தொ பார் மோட்டார் ரூமாண்ட ஒரு ஜோடிகீது அங்க தேறுதா பாக்கலாம் வா” என்று சென்றார்கள்.
இவர்களை சொல்லிக் குற்றமில்லை, அரசாங்கம் எல்லாம் இலவசமாக கொடுத்து பழக்கப் படுத்தி விட்டார்கள், ஆதலால் காலையிலேய மப்பு ஏற்றிக்கொண்டு அடுத்து “ஐட்டம்” இலவசமா கிடைக்குமா என்று கடற்கரைக்கு வந்து விட்டார்கள் கலாசாரக் காவலர்கள்.

Sunday, 18 April 2010

புயலில் சாய்ந்த மரம்


படித்து முடித்த கவிதை
எடுத்து முடித்த வேலை
நடத்தும் வாழ்வை நகர்த்த
தொடர்ந்த அலுப்புத் தொழில்
கொடுத்து வைத்த தர்மம்
அடுத்து எடுக்கும் செயல்
என எப்பொழுதும் அலை
ஓடும் எண்ணங்களில் படிக்க
நேரமின்றி தொலைத்துவிட்ட
வாழ்வை திரும்பி பிடிக்கும்
முயற்சியில் மனம்
அடித்து விட்ட புயலில்
முறிந்து சாய்ந்த மரம் போல்
வெறுத்து நிற்கிறது.


தொடரும் வேலைப் பளுவில் வலைப்பூ வாடாதிருக்க என் எண்ண ஓட்டத்தில் எழுந்த ஒரு கவிதை