அன்று மழை மேகம் சூழ்ந்துக் கொண்டு “வருமோ வராதோ” என்ற சென்னை வானிலை காலையிலிருந்தே “பூச்சிக்காட்டி”க் கொண்டிருந்தது. விடுமுறையில் சென்னையில் இருந்த நான் அன்று ஒரு வேலை விஷயமாக பாரிஸ் வரை சென்று கடற்கரை சாலையில் வந்துக் கொண்டிருந்தேன். காலை நேரம் மணி பத்து தான் ஆகியிருந்தது. வண்டியை “ஐஸ் ஹவுஸ்” எதிரில் நிறுத்தி கடற்கரை புல்வெளியில் ஒரு மரத்தின் அருகே அமர்ந்து ஆர்ப்பரிக்கும் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு தனியாக அமர்ந்து கடலை வேடிக்கைப் பார்ப்பதில் எனக்கு அலாதி இன்பம்.
சிறிது நேரத்தில் ஒரு இளம் ஜோடியை இருவர் துரத்திக் கொண்டு வந்தனர். துரத்தியவர்களில் ஒருவன் அவளிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டிருந்தான். பட்டப் பகலில் அப்பட்டமாக அவள் உடையை கலைத்து அவள் மார்பில் கை வைத்து அமுக்கினான். அவள் அவனிடமிருந்து திமிறி என்னை நோக்கி ஓடி வந்தாள். துரத்திய இருவரும் அந்தப் பெண்ணின் கூட வந்தவனை பிடித்து அடித்துவிட்டு, பின்பு அவளை துரத்த ஆரம்பித்தனர். அவள் என்னிடம் ஓடி வந்து என் அருகே அமர்ந்து “பாருங்கண்ணா அடிக்கிறாங்க காப்பாத்துங்கண்ணா” என்று கூறி தன் கலைந்த உடைகளை சரி செய்துக் கொண்டாள்.
அதற்குள் அந்த இளைஞனும் துரத்தியவர்களும் என்னிடம் வந்து விட்டனர்.
பின்பு அவர்களின் உரையாடல்
ஏய் ...த்தா தள்ளிகினு வந்திருக்கியா.” துரத்தியவர்களில் ஒருவன்.
“முறைப்பெண்ணுங்க” இளைஞன்.
..த்தா எவன் கிட்ட கப்சா அடிக்கிற” துரத்தியவன்.
“இல்லைங்க நான் தாம்பரத்திலிருந்து வரேனுங்க இவன் என் முறைப் பெண்ணுங்க கல்யாணம் செய்துக்கபோறோம்” இளைஞன்.
துரத்தியவனில் இரண்டாமாவன் மறுபடி பெண்ணை நெருங்கி “ ...த்தா அவனுக்கு என்னடி செஞ்சே படகுப் பின்னாடி, எனக்கு செய்யடி” என்றான் மற்றுமவன் சொன்ன வார்த்தைகள் பதிவில் போட முடியாதவை.
அவள் என்னைப் பார்த்து “பாருங்கண்ணா அசிங்கமாப் பேசுறாரு” என்றாள்.
துரத்தியவர்கள் இருவரும் என்னை மதித்தது போல் தெரியவில்லை, அவர்கள் இருவரும் குடி போதையில் இருப்பது தெரிந்தது. அவர்களுக்குள் “...த்தா தள்ளிக்கினு வந்துகிறான், காலிலே பார்த்தேன் அண்ணா சமாதியாண்ட குந்திக்கின்னு கை போட்டுக்கினு இருந்தாங்க, ....மாள, காலிலேயே பீச்ச நாரடிக்கிறாங்க,” இளைஞனை திரும்பவும் அடித்தார்கள். அவனை போடா என்று துரத்த முயன்றார்கள்.
இவை எல்லாம் நான் கவனித்தும் ஒன்றும் சொல்ல எனக்கு தோன்றவில்லை. (நடப்பது புரிய வில்லை, புரிந்தாலும் நான் ஒன்று செய்யப் போவதில்லை, அது வேறு விஷயம்.)
அதற்குள் அந்தப் பெண் அங்கிருந்து நழுவி ஐஸ் ஹவுஸ் பக்கம் ஓடினாள். இளைனனும் அவர்களிடமிருந்து திமிறி அவளைப் பின்தொடர்ந்து ஓடினான்.
பின்பு அவர்களிருவரும் தங்கள் உரையாடலை தொடர்ந்தார்கள்.
“அவன் தள்ளிக்கினு வந்துகிறான் நம்ம கை வைச்சா இன்னா, பிகரு சரியில்லப்பா நல்லா அடி வாங்கியிருக்குது, சரி இத்த விடு தொ பார் மோட்டார் ரூமாண்ட ஒரு ஜோடிகீது அங்க தேறுதா பாக்கலாம் வா” என்று சென்றார்கள்.
இவர்களை சொல்லிக் குற்றமில்லை, அரசாங்கம் எல்லாம் இலவசமாக கொடுத்து பழக்கப் படுத்தி விட்டார்கள், ஆதலால் காலையிலேய மப்பு ஏற்றிக்கொண்டு அடுத்து “ஐட்டம்” இலவசமா கிடைக்குமா என்று கடற்கரைக்கு வந்து விட்டார்கள் கலாசாரக் காவலர்கள்.
13 comments:
WHAT????? :-o
இப்படியெல்லாம் நடக்குதா சார்?
மூஞ்சியோட ரெண்டு அப்பு அப்புறது விட்டுட்டு ...என்னங்க நீங்க ? இதுவே நமக்கு தெரிஞ்சவங்களுக்கு நடந்து இருந்தா சும்மா இருப்போமா ?
//இவர்களை சொல்லிக் குற்றமில்லை, அரசாங்கம் எல்லாம் இலவசமாக கொடுத்து பழக்கப் படுத்தி விட்டார்கள், ஆதலால் காலையிலேய மப்பு ஏற்றிக்கொண்டு அடுத்து “ஐட்டம்” இலவசமா கிடைக்குமா என்று கடற்கரைக்கு வந்து விட்டார்கள் கலாசாரக் காவலர்க//
அடுத்த எலெக்ஷனில் ஜெயிக்கவச்சிங்கன்னா ஐட்டத்தை இலவசமாக கொடுக்கவும் அரேஞ்ச் பண்ணுவாங்க. கிழவி திருப்பியனுப்புனவங்களுக்கு இத்தெல்லாம் ஒரு சப்ப மேட்டரு
தயவு செய்து இவர்களை கலாச்சார பாதுகாவலர்கள் என்று சொல்லாதீர்கள்!.
பழமை வாய்ந்த சிற்பத்தில் தன் பெயரை பொறித்துக் கொண்டிருப்பவனை பார்த்து பொங்கி எழுபவனே கலாச்சார பாதுகாவலன்.
நான்கு சுவருக்குள் சுகமாய் இருந்துவிட்டு போகாமல் குழந்தைகளும், குடும்பஸ்தர்களும் வந்து போகும் கடற்கரையில் படகின் பின்னாலும், நடு மணலிலும் குஜாலாக இருக்கும் காதலர்களுக்கும், முறை தவறிய மக்களும் பரிந்து பேசுவது போல இருக்கிறது.
அந்த இரண்டு பேராவது குடித்திருந்தார்கள். அது கலைஞர் தமிழனுக்கு கொடுத்த சாபம். காதலர்கள் என்ன குடித்திருந்தார்களா நண்பரே!.
“ ...த்தா அவனுக்கு என்னடி செஞ்சே படகுப் பின்னாடி, எனக்கு செய்யடி” என்றான் மற்றுமவன் சொன்ன வார்த்தைகள் பதிவில் போட முடியாதவை.
நீங்களே இதை தெளிவாக சொல்லிவிட்டீர்கள். அவள் படகிற்கு பின்னாடி செய்தவைகளை இரண்டு நபர்கல் பார்த்து அவர்களுக்கும் செய்யும் படி கேட்டிருக்கின்றார்கள். என்னதான் முறைப் பையனாக இருந்தாலும் இது சரியா.
இது தான் மாண்பா!.
இவ்ளோ நடந்துகீது, போலீசு வரவேயில்லையா ???
இது அன்று மட்டுமே நடந்த மாதிரி தெரியல.
தினமும் நடக்கும் ஒரு செயலாகத்தான் தெரிகிறது.
இந்த மாதிரி இடத்தில் நல்லதே நடக்கும் என்று போலீஸ் போடவில்லை போல.
ம்ம்ம்....கேட்கவே அருவருப்பாயிருக்கு.
இன்றைய நாகரீகத்தின் அசிங்கம் !
அட நீங்க வேற... பகல்ல யாரும் வராத கடற்கரையில படகு மறைவுல ஏதோ பண்ணிக்கிட்டு இருந்தாங்கன்னு சொன்னா உண்மையான்னு கேக்குறீங்க... இப்போ மக்கள் அதிகம் பயன்படுத்தும் நகர பேருந்துக்குள், பேருந்து நிலையத்தில் இதெல்லாம் நடக்குது...
அடுத்தவன் சோற்றுக்கு அலையும் நாய்கள் அவர்கள்.
அதுசரி நாம் சோற்றை வீட்டில் வைத்து சாபிட்டால்
கண்ட நாயெல்லாம் ஏன் நாம் இலையில் கை வைக்க போகிறது.
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ். சுய நலம் நிறைந்த பொது ஜனங்கள்.
வருகை தந்த எல்லோருக்கும் நன்றி
உண்மை சம்பவங்கள்
one ....த்தா வாடா
Two ....த்தா வர்ரண்டா
one .... த்தா சிவன் கோயிலு பூணும்
வாடங்.... த்தா
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.