Thursday, 22 April 2010

பிரபாகரனின் தாய்


மாவீரனைப் பெற்றெடுத்த பாக்யசாலி, பிறந்த மண்ணிற்கு தன் அந்திமக் காலத்தை மகளுடன் கழிக்க வந்தவளை விசா கொடுத்து, பின் இறங்க அனுமதிக்காத “மத்திய அரசு”, அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மாநில அரசு நடவடிக்கை, மிகக் கேவலமான, கீழ்த்தரமான செயல். மனிதாபிமானமற்றது. வன்மையாக கண்டிக்க வேண்டிய விஷயம், அய்யா பதிவாளர்களே, உங்களால் முடிந்தால் அதைக் கண்டித்து பதிவு போடுங்கள், ஆனால் அரசுக்கு கூஜா தூக்கும் வேலையை விட்டொழியுங்கள்.

எண்பதுகளின் தொடக்கத்தில் ஜெயவர்தனே ஆட்சியில், அந்தக் கருப்புநாளை எந்த ஒரு மானமுள்ள தமிழனும் மறக்க முடியாது. தலைநகர் கொழும்புவில் மூன்று லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். எத்துனை தமிழ் இளைஞர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர் இன்று அரசுக்கு கூஜா தூக்கும் “பீத்தப்பதிவாளர்களும்” தவறானக் கருத்தை பரப்பிக்கொண்டு அரசு போடும் விளம்பர “பிஸ்கட் துண்டுகளை” பொறுக்கும் பத்திரிகை நாய்களும் சற்றே சிந்தியுங்கள்.

“மலையாளி, மலையாளி” என்று தூற்றப் பட்ட அன்றைய முதல்வர் கொடுத்த ஊக்கத்தில் தமிழகமே ஈழத் தமிழர்களுக்கு துணை நின்றது. அந்த எழுச்சி ஏன் “தமிழ் ஈனத் தலைவர்” ஆட்சியில் இல்லை. “தொப்புள் கொடி உறவு” “தொந்திகொடி உறவு” என்று மக்களை ஏய்ச்சுப் பிழைக்கும் ஆட்சியில் இல்லை? சிந்தியுங்கள்.

ஐம்பதுகளின் தொடக்கத்திலேயே தமிழ் ஈழப் போராட்டம் அறவழியிலே நடத்தப் பட்டது. அவர்களை ஆயுதம் ஏந்த வைத்தது, யார்?.

நம்ப வைத்து கழுத்தறுத்த அன்றைய மத்திய அரசு.

மாவீரன் பிரபாகரன் தன் பிள்ளைகளை வெளிநாட்டிலே படிக்க வைத்து மற்றவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துகிறார் என்று தூற்றிய பத்திரிகைகள் இன்று அவர் தன் குடும்பம் முழுவதையும் போரிலே “காவு” கொடுத்திருக்கிறார்.
இப்பொழுது அந்தப் பத்திரிகைகள் மௌனம் சாதிப்பது ஏன்?

அவர் நினைத்திருந்தால் வந்த வரைக்கும் லாபம் என்று “ராஜீவ் காந்தி ஆட்சியிலே கொடுத்ததை வாங்கிக் கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்” ஆனால் அவர் வடக்கு, வடகிழக்கு மாகாணத் தமிழரை உயிரினும் மேலாக மதித்தார். தன் போராட்டத்தை தொடர்ந்தார்.

கண்ட கண்ட அரசியல் தலைவர்களுக்கு சிலை வைக்கும் பொழுது பிரபாகரனுக்கு சிலை வைத்தால் என்ன குறைந்து விடும்?.

காலையில் சின்ன வீட்டில் பசியாறிவிட்டு, மதியம் பெரிய வீட்டில் பகலுணவு உண்ண உண்ணாவிரதத்தை முடித்த “தமிழ் ஈனதலைவர்” தமிழ் மாநாடு நடத்துகிறார், அந்த அவலத்தை தட்டிக் கேட்க யாருமில்லை.

மொத்தத்தில் இவர் தமிழருக்கோ தமிழுக்கோ ஒரு ..யிரும் பிடுங்கவில்லை.

போரின் உச்சத்தில் நான் எழுதியக் கவிதை இப்பொழுது உங்களின் பார்வைக்கு.

நித்தமும் ஒரே செய்தி,
செத்து விழும் அவலம்,
வன்னியில் குண்டுப் பொழிவு,
கண்ணீரில் சிறுவர், சிறுமியர்,
அசைவற்று தாய்,
முலையுன்னும் சேய்.

ஆதரவற்ற நிலையில்,
அகதிகளாய் வருவோருமிடமும்,
சகதியில் உழன்ற சண்டாளர்களின்,
"தண்டல்" ராஜ்ஜியம்.

கண்டும் காணாத அரசாங்கம்,
இண்டு இடுக்கிலும் அரசியல்,
ஊர் வாயை மூட,
உண்ணாவிரதம் அறப்போராட்டம்,
எண்ணமெல்லாம் ஓட்டு வேட்டை.

வேசியோடு ஒப்பிடத் தோன்றும்,
எத்துனை தவறு..........................
காசுக்காக கற்பு கடை,
மூலதனம் விற்கப்படும் ,
அவளின் அவலத்தை,
காசாக்கும் கூட்டி கொடுப்பான்.........
நாய் கூட பிழைக்காது,
இந்த பிழைப்பு.


ஒன்று நிச்சயம் பிரபாகரன் விதைத்து சென்ற “தமிழ் ஈழம்” அடுத்த தலை முறையால் நிச்சயம் எழுச்சி பெறும்.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

ttpian said...

kizham:super actor(without make-up) than green saari/cabara dancer:

Sridhar said...

//அந்த எழுச்சி ஏன் “தமிழ் ஈனத் தலைவர்” ஆட்சியில் இல்லை

தி மு க வை , தமிழ் நாட்டை குடும்பதிற்கு பிரித்து கொடுத்து விட்டு இருக்கும் கருணா விற்கு ,
தேர்தல் வந்தால் - ஓட்டுக்கு ௫ 5, 000
விருது வழங்கி ஜால்ரா அடிக்கும் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் - திருமா , சு ப ,வீ , இபோழுது ராமதாஸ்,
பாராட்டு விழ கலந்து கொள்ளும் வித்வான்கள் - கமல், ரஜினி
வாரம் ஒரு பாராட்டு கலந்து கொள்ளும் “தமிழ் ஈனத் தலைவர்” ,

-- இப்படி இருந்தால் “தமிழ் ஈனத் தலைவர்” க்கு எப்படி வரும் அந்த எழுச்சி ??

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

செருப்படி சார்..
அதுவும்.. செருப்புல சாணியப்பூசி அடிச்சிருக்கீங்க..
பார்ப்போம்..இனியாவது..பிரபல டோமர் பதிவர்களுக்கு, புத்தி தெளியுதானு?..

ஹேமா said...

தமிழின் உணர்வுக்கு நன்றி தோழரே.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.