இன்னும் இரண்டு நாட்களில் படம் வெளிவரப்போகிறது, இந்த முறை ஒன்றும் பெரிய எதிர்பார்ப்பு இல்லை.
“ட்ரைலரில்” ஒன்றும் புதியதாக இல்லை, மசாலாதான் என்று பறைசாற்றுகிறது. எப்படியும் படம் பார்த்துவிட்டு நமது பதிவர்கள் படத்தை அக்குவேறு ஆணிவேராக அலசி ஹிட்ஸ்களை அள்ளப் போவது நிஜம்.
அதற்கு எதிர் பதிவு போட்டு “சுறா” ஆஸ்கருக்கு பரிதுரைக்கப் பட்டிருக்கிறது, “இளைய தலைவலி”யின் நடிப்புக்கு ஆஸ்கர் நிச்சயம் என்பார்கள், அவர்களது ரசிகர் பட்டாள “விசிலடிச்சான் குஞ்சுகள்”.
“கார்கிபவா” படம் வெளி வரும் முன்பே விமர்சனம் எழுதிவிட்டார். ஏறக்குறைய அவர் கற்பனைப்படிதான் படமும் இருக்கும் போல் தெரிகிறது.
இப்பொழுது உள்ள “அடைமொழி” கதாநாயகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தோல்வி படம் தருவதில் வல்லவர்கள். ஆனால் அதே நேரத்தில் நல்ல கதையுள்ள படங்கள் யார் நடித்தாலும் ஓடுகிறது.
அடைமொழி கதாநாயகர்கள் யாரையோ பின்பற்றி அவர் மாதிரி ஆகிவிடலாம் என்று பார்கிறார்கள். “தமிழ் நாட்டுக்கு அவர் ஒருத்தர் தான்”. அவரை மாதிரி யாரும் ஆக முடியாது. அதைப் புரிந்துக் கொண்டு அவரவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் வெற்றி கண்டிப்பாக தேடி வரும்.
இந்த முறையும் வெற்றிகரமான பத்தாவது நாள், என்று போஸ்டர் அடித்து ஒட்டப்படும்.
சிங்கமும், “சிங்கம் பெற்ற பிள்ளையும்”, கூசாமல் வசூலில் சாதனை, படம் வெற்றி என்பார்கள்.
சன் டிவி தன் பங்கிற்கு படத்தை “கூவி கூவி” விற்பார்கள்.
“தமிழ் திரையுலகின் இருண்ட காலம் இது, யாராலும் ஒன்று செய்ய முடியாது”.
11 comments:
சன் டிவி தன் பங்கிற்கு படத்தை “கூவி கூவி” விற்பார்கள்.
.......அப்புறம் வித்திட்டோம்ல என்று பெருமையா சொல்வாங்க....... :-(
சித்ரா, வருகைக்கு நன்றி.
திரைப்படங்கள் வியாபாரமாகிவிட்டது கும்மாச்சி !
“தமிழ் திரையுலகின் இருண்ட காலம் இது, யாராலும் ஒன்று செய்ய முடியாது”... :)
படம் சூப்பர் ஹிட்..
தமிழில் இதுபோல ஒரு படம் வந்ததுமில்லை.. வரப்போவதுமில்லை...
( ஏன்னா.. இது மாறனின் படைப்பு..)
வாழ்க ஜனநாயகம்...
worst entry..wasted my time in reading this...
உண்மையைப் புட்டுப் புட்டு வச்சிருக்கீங்க!
படம் உண்மையில் நன்றாக இருந்து வென்றாலும் உங்களில் சிலரின் பார்வை இப்படித்தான் இருக்குமோ? பொறுத்திருந்து பார்ப்போம். அதுவர நோ பேச்சு பட் மூச்சு விடாமல் இருக்க முடியாது சாமியோவ்.
trailor பார்த்தாலே தெரியுதே ... இது இன்னொரு வேட்டைகாரந்தான்னு.... எல்லாம் கலாநிதிமாறன் இருக்குற தைரியம்தான் ,
ontru mattum nallaa puriyuthu,
unga pathivarkal vijai'ya patri karutthu ezuthukiraarkal entraal..... vijai'yin MARKET kuraiya villai entre arttham...... enna sarithaane KUMMAACCHI?
pinne ethukkuyyaa orutthanai pottu intha thaakku thaakkureenga? vijai padam paakka ishtam irunthaa paaru illennaa poyen....... yen ippadi ezuthi enga time'a veast panra???
//படம் சூப்பர் ஹிட்..
தமிழில் இதுபோல ஒரு படம் வந்ததுமில்லை.. வரப்போவதுமில்லை...
( ஏன்னா.. இது மாறனின் படைப்பு..)
வாழ்க ஜனநாயகம்...//
பட்டாபட்டி சார்
அருமை
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.