ஹலோ யாரு குஷ்பூவா, நான்தான் அபி மாமிடி, அதாண்டி அபிதகுஜாம்பா மாமிடி, எங்காத்து எதிராத்துக்கு ஷூட்டிங் வரும்போது வந்து பாப்பேனே அந்த அபி மாமி.
ஏன்டி சுந்தர் சௌக்கியமா, அவனே நான் விசாரிச்சன்னு சொல்லு. கொழந்தைகள் எல்லாம் சௌக்கியமா.
இவர் ஜெயா டிவில உன்னோட ப்ரோக்ராம் வந்தா வாயத்தொறந்துண்டு “ஆன்னு” பாத்துண்டிருப்பார்.
என்ன இந்த மனுஷன் பொது அறிவெல்லாம் வளத்துக்கிராறு, இந்த வயசில்லேன்னு எனக்கு ஆச்சர்யம் சொல்லி மாளல. அப்படி ஒன்னும் நீ கேள்வி கேக்கறதில்லையே, கெக்கே பிக்கேன்னு தானே கேட்கறேன்னு இவர கேட்டா, உன் முதுக பாத்துண்டு இருக்காராம். “பாருடி அவ முதுகில எட்டு பேர் உக்காந்து ரம்மி ஆடலாம்” அப்படின்னு பெனாத்தறார்.
ஏன்டி இன்னிக்கு நான் கேள்விப்பட்டது உண்மையா.
நீ ஏதோ அரசிய கட்சியில சேர்ந்துட்டதா எங்காத்துக்காரர் சொல்றார் அப்படியா. நோக்கு ஏண்டி இந்த வம்பெல்லாம். இப்போதான் ஒரு வழியா கோர்ட்டுக்கேல்லாம் போய் உன் விவகாரம் சிக்கி சின்னா பின்னமாகி வெளியிலே வந்திருக்கே, இது என்னடி புது அக்கப்போர்.
தோ பாருடி, நீ ஏற்கனவே எதிர் கட்சி டிவிகாராள ஏகத்துக்கும் வடக்கதிக்காரா டிவில போய் காச்சின. உங்காத்துல கேமரா வச்சிருக்கா என்ன வாட்ச் பண்றான்னு அவாள நேர ஒருமைல திட்டின. இப்போ அங்கேயே போய் சேரர.
அவாளேல்லாம் ஒண்ணுக்குள்ள ஒன்னு, அப்போப்போ அடிச்சிப்பா அப்புறம் சேர்ந்துண்டு, “கண்கள் பணிச்சுது காது புளிச்சுதுன்னுவா”, குறுக்கே நீ போய் குனிஞ்சா கும்மியடிச்சுடுவா.
“நாமெல்லாம் குனியப்டாதுடி, குனிஞ்சாலும் அக்கம் பக்கம் பாக்கணும், இல்லேன்னா கும்மியடிச்சுப்புடுவா”.
ஏதோ சொல்லறத சொல்லிட்டேன் சமத்தா நடந்துக்கோ.
21 comments:
குஷ்பூ மாமி கட்சியிலே சேர்ந்தாச்சு தெரியுமோ? இனிமே யாரு சொன்னாலும் அவா காதுலே விழாது ஓய்! அவா அவா விதிப்படி நடக்கட்டும்!
good ...advice
அக்மார்க் நையாண்டி...:-))
சேட்டை வாரும் ஒய் பின்னூட்டத்துக்கு முந்திண்டுட்டேள்.
வாங்கோனா கார்த்திகை எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்.
பாஸ்கரன் நன்னா சொன்னேள்
நல்ல பதிவு
கும்மாச்சி.......கிண்டலு !
தமிழீஷ் வாக்களிப்புத் திலகமே, உன் பதிவுக்கு வெறும் இருபது ஓட்டா. நெஞ்சு பொறுக்குதில்லையே...
யாரையும் நம்பாதீங்க.
கருனாநிதிய விட ஜெயலலிதா புத்திசாலி. இட்ஸ் ஆல் இன் த கேம். கடந்த ஒருவருடத்துல இங்க இருந்து அங்க போனவங்க எல்லாம் நோட் பண்ணிக்குங்க. எலெக்க்ஷன் நேரத்துல எதுவும் நடக்கலாம்.
அஹோரி நீங்க எதிர்பார்ப்பது நடக்கும் என்றே தோன்றுகிறது.
விஜய் சார் உங்கள் வருத்தம் புரிகிறது
என்ன ஓய், அவா டீவில வந்த ஜாக்கெட்..சே சே...ஜாக்பாட் நிகழ்ச்சிய நிறுத்திட்டாலாமே! அய்யயோ அப்படின்னா குஷ்பு முதுக இனிமே பாக்க முடியாதா? இவா டீவிலயாவது காட்டுவாளா? கேட்டுச் சொல்லும் ஓய்!
நையான்டிக்கு தேர்தெடுத்த படம் ........!
குஷ்பு'வ ஜாக்பாட் நிகழ்ச்சியிலேர்ந்து தூக்கிட்டாளே தெரியுமா நோக்கு..
எட்டு பேர் மட்டும்தானா?..
அது அப்போ.. இப்போ, 10 பேர்ண்ணா..
எப்படியோ.. தமிழ் நாட்டுக்கு, அடுத்த முதலமைச்சர் கிடச்சாச்சு..வாங்கோ.. போயி பொங்கல் சாப்பிடலாம்..
நல்லாச் சொன்னேள் போங்கோ!
எனக்கென்னவோ அவங்க நம்மள விட புத்திசாலின்னுதான் தோணுது..
அபி மாமிக்கு:
உங்கள் அட்வைசுக்கு தேங்க்ஸ். எனக்கு முன்னே ஜெயா மாமியெல்லாம் இந்த திராவிடர்கள் கட்சியெலே சேர்ந்த்து அவா கண்ணிலே விரலை விட்டு ஆட்டிண்டு வரது நீங்கள் பாக்க வில்லையா?
நமக்கும் ரிடையர்மென்ட் ஆனப்புறம் பொழுது போக வேண்டாமா? சம்பாரித்த காசை ரெய்டெல்லாம் வராம கட்டிக் காக்க ஒரு கட்சியிலே சேந்தா தான் நல்லதுன்னு பெரியவா எல்லாரும் சொல்றா.
எனக்கும் மருத்துவர் கட்சியில்ருந்து வர எதிர்ப்பையெல்லாம் சமாளிக்க தனி ஆளாய் ஒண்ணும் செய்ய முடிய வில்லை. அடியாள் பலம் வேண்டுமென்றால் ஏதோ ஒரு மு.க வில் சேர்வது தான் நியாயம்னு படறது.
உங்க உடம்பையும், ஆத்துக் காரரையும் பத்திரமாகப் பாத்துக் கோங்கோ.
இப்படிக்கு,
மணச்செல்வி என்கிற குஷ்பு.
சூப்பர் !!!!!!
அவசரம் அவசரமா வழக்கையெல்லாம் உச்ச நீதிமன்ற முலமாக வழக்கை வாபஸ் வாங்கும் போதே நெனைச்சேன்.
எவ்வளவு குனியவேண்டியிருக்கிடியம்மா ,,,,,, இடுப்பு வலிக்குது....
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.