
இப்பொழுது பெரும்பாலும் தமிழ் இல்லத்தரசிகளும் அவர்களுடைய கூஜாக்களும், குட்டீஸ்களும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி “ஏர்டெல் சூப்பர் சிங்கர்” தான் என்று தோன்றுகிறது. எந்த ஒரு விழாவிற்குப் போனாலும் மேற்கூறிய நிகழ்ச்சியைப் பற்றிதான் பேச்சு.
சின்னஞ்சிறுசுகள் பாடுவது அற்புதம்தான். இந்த வாரம் தொடக்கம் இறுதிப் போட்டி.
“அல்கா”வின் “என்னை என்ன செய்தாய் வேங்குழலே” என்று தொடக்கத்திலேயே இது ஒரு அசத்தப் போகும் நிகழ்ச்சி என்பதற்கு கட்டியம் கூறும் பாட்டு. அருமையான குரல் வளம். நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
பொடியன் ஸ்ரீகாந்த் “இசைத்தமிழ் நீ செய்த அரும்சாதனை”, வயதுக்கு மீறியப் பாட்டுத்தான். ஆனால் இந்த வயதிற்கு இவ்வளவு பாட்டுக்களை மனனம் செய்து பயமில்லாமல் பாடுவது பெரிய விஷயம். அடுத்த பெரிய பாடகர் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைக்க பலமான வாய்ப்பு.
“ஷ்ரவன்” “பாட்டும் நானே” என்று பாடி தன் திறமையை வெளிக் கொணர்ந்தது அவரது இசைப் புலமையின் “Tip of the ice berg”. இந்த கௌரி மனோகரியை டி.எம். எஸ் கேட்டிருந்தால் கே.வி. மகாதேவனை நினைத்திருப்பார். ஷ்ரவன் எல்லா சங்கதிகளை விடாமல் பாடினதை வியந்திருப்பார். ஜதிகளும் ஷ்ரவனேப் பாடியது கூடுதல் ஆச்சர்யம்.
அடுத்தது நித்யஸ்ரீ “கண்ணோடு காண்பதெல்லாம்” ரசிக்க வைத்தது. நல்லக் குரல், இந்த முறை ஆட்டம் இல்லை. ஆனாலும் அற்புதமான “performance”.
ரோஷனின் “வந்தாள் மகாலக்ஷ்மியே” சிறுவனின் இசைத்திறமைக்கு சான்று. ரோஷனிற்கு நல்லக் குரல் வளம், திறமையாகப் பாடுகிறான். இவனின் “ஆயிரம் நிலவே வா” கேட்ட பொழுதே இவனின் திறமை தெரிந்தது.
இது இறுதிப் போட்டியின் முதல் வாரம். ஆனால் "வின்னர்" யார்? என்பதில்தான் இப்பொழுது சர்ச்சை. தமிழர் இல்லை என்பதுதான் விவாதத்திற்கு முன்னுரை. இதைப் பற்றிய அலசல்தான் அடுத்த இடுகை.
அண்ணே திரிய கில்லிட்டீங்களே... நானே எழுதல்லாம்னு இருந்தேன் நீங்க சொன்னதினால் ஒரு வாசகனாய் காத்திருக்கிறேன் ----- நன்றி.
ReplyDeleteI want to know who is Tamilzhan 1) By Birth 2) By Domicile 3) By Native or 4) Just speaking Tamil. Then you decide about our topic.
ReplyDeleteஅண்ணே தலப கேரளத்தின் செல்ல கொரல் எண்டு போடுங்கணே
ReplyDeleteதமிழை பேசி தமிழனை அழிப்பவன் தமிழனா?
ReplyDeleteஇன்று தமிழுக்கு பெருமை சேர்க்கும் ஜானகியும் தமிழன் தான் . தமிழில் இனிமையாக பாடும் ஆஷா போன்ஸ்லே வும் தமிழ்பெண்தான்.
எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது. அதுதவிர ஓட்டுப்போட்டு வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பதும் சரியாக படவில்லை(சென்ற தடவை ஒட்டு எண்ணிக்கையை பார்த்து சீனியர்களில் அஜீசினை தெரிவு செய்ததில் எனக்கு உடன்பாடில்லை ) சின்னப் பொடியன் நல்லாப்பாடுகிறான் என்று ஸ்ரீகாந்த்துக்குத்தான் இசையறிவு 'அதிகமுள்ள' நம் ஜனங்கள் ஓட்டுப்போடுவார்கள், எது எப்பிடியோ இறுதிப்போட்டியின் முதல் இருநாட்களின் நிலவரப்படி எனது ஒட்டு அல்க்காவிற்குத்தான்.
ReplyDeleteஇது இறுதிப் போட்டியின் முதல் வாரம். ஆனால் "வின்னர்" யார்? என்பதில்தான் இப்பொழுது சர்ச்சை. தமிழர் இல்லை என்பதுதான் விவாதத்திற்கு முன்னுரை.
ReplyDelete..... OH!
சாரிண்ணே.. டீ.வி பார்பதில்லை நான்..
ReplyDeleteஅதனால நோ கமென்ஸ்....ஹி..ஹி
அல்காவிற்கு நல்ல குரல் வளம், எதிர்கால ஜானகி அம்மா இவங்கதான்
ReplyDelete