செம்மொழி மாநாடு நாளைத் தொடங்கவிருக்கிறது. தமிழுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? என்று பொறுத்திருந்துப் பார்க்கவேண்டும். முதல்வரே அணைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த விழா வழக்கம் போல “சொம்படிக்கும்” விழாவாக இருக்குமோ என்ற ஐயம் இல்லாமல் இல்லை.
ஏற்கனவே தெருவெங்கும் முத்தமிழ் அறிஞர், சேக்கிழார், பாரிவள்ளல், ஓரி வள்ளல், ராஜ ராஜ சோழன் என்ற பெயர்ப் பலகைகள் பல்லிளிக்கின்றன. இன்னும் என்ன என்ன நாமறியாத, இல்லைக் கேட்ட மோசுக்கீரனார், சீத்தலை சாத்தனார் போன்ற பெயர்களும் தோண்டி எடுக்கப்படலாம்.
சென்னை மேயர் ஒரு படி மேலே போய் தமிழல்லாதப் பெயர்ப் பலகைகளை அகற்றுகிறார். சன் டிவி, க்லௌட் நைன், ரெட் ஜெயன்ட் முதலியவற்றை அகற்றுவாராத் தெரியவில்லை. நட்சத்திர விடுதிகளுக்கும் இதுப் பொருந்துமா? தெரியவில்லை.
இந்த விழாவுக்கு ஆகும் செலவு எவ்வளவு? இப்படி ஒரு விழா அவசியமா? இதெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள்? அரசாங்க செலவில் தனக்குத்தானே புகழாரமா? இந்த விழாக்களால் தமிழ் வளருமா? என கேள்வி மேல் கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த விழாக்களில் ஆகும் செலவில் நூறில் ஒரு பங்கு அரசாங்க நூலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் தமிழ் வளர தமிழ்ப் புத்தகங்களாக வழங்கப்படுமா? தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் ஊக்குவிக்கப்படுவார்களா?
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் விடை கிடைக்கும்.
7 comments:
எதிர் பார்ப்போம் . பகிர்வுக்கு நன்றி
..... தமிழ், இப்படி கொண்டாடினால் தான் வாழும் என்று திருப்பி சொல்லி விட்டு, "செம்மொழி காத்த தானை தலைவர் வாழ்க!" என்று கோஷம் போட போய்டுவாங்க....
இந்த விழாவுக்கு ஆகும் செலவு எவ்வளவு? இப்படி ஒரு விழா அவசியமா? இதெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள்? அரசாங்க செலவில் தனக்குத்தானே புகழாரமா? இந்த விழாக்களால் தமிழ் வளருமா? என கேள்வி மேல் கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன.
//
அதெல்லாம் வரப்படாது கும்மாச்சி சார்...
இனி பத்து வருஷத்தில..மனுஷனுக, ரெண்டு கால்ல நடக்கமுடியாம, நாலுகால்ல நடக்கப்போறாங்க சார்..ஹி..ஹி
உங்கள் எதிர்பார்ப்பும் சிந்தனையும் வித்தியாசமாக இருக்கிறது.பார்ப்போம்.நல்லதே நடக்கும் கும்மாச்சி.
இந்த விழாக்களில் ஆகும் செலவில் நூறில் ஒரு பங்கு அரசாங்க நூலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் தமிழ் வளர தமிழ்ப் புத்தகங்களாக வழங்கப்படுமா? தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் ஊக்குவிக்கப்படுவார்களா? good advice
//இந்த விழாக்களில் ஆகும் செலவில் நூறில் ஒரு பங்கு அரசாங்க நூலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் தமிழ் வளர தமிழ்ப் புத்தகங்களாக வழங்கப்படுமா? தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் ஊக்குவிக்கப்படுவார்களா?//
கலாம் ஐயா சொல்லிட்டாருன்னு இப்படி ஆளாளுக்குக் கனவு கண்டால் எப்படி??????
செம்மொழி மாநாடு சென்று வந்த பிறகு பதிவை இடுங்கள் திருவாளர் அவர்களே! எத்தனை தடவை நீங்கள் நூலகத்திற்கு சென்று தமிழ் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டீர்கள் அய்யா? குறை சொல்லியே பழக்கப்பட்ட நமக்கு இது என்ன புதுசா? தொடருங்கள் குறை சொல்வதை..!
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.