Pages

Friday, 25 June 2010

பாவி மகள் நினைக்கலையே


என்னுள் உன் உயிர் வாங்கி
என் கருப்பை பொறிக்குள் வைத்து
ஐ இரண்டு மாதம் அனுதினமும்
கையும் வாயும் கட்டி விரும்பிய
உணவு தவிர்த்து, மசக்கையிலே
உன் நலம் விரும்பி உனக்காக,
பத்திய உணவு உண்டு
எட்டி உதைக்கையிலே
தொட்டு உணர்ந்து,
வலி கண்ட பொழுது
என் உயிர் பிடித்து உன்னை
பிள்ளை என கொணர்ந்து
உதிரத்தால் பால் கொடுத்து
பால் பற்கள் முலையில் பதிய
முட்டி முட்டி குடித்த பொழுது
பாவி மகள் நினைக்கலையே
நாடி தளர்ந்து காடு செல்லும் நேரம்
காக்கவேண்டிய காலத்திலே
காப்பகத்தில் விடுவாய் என.

13 comments:

  1. முதல் முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன் என்று நினைக்கிறேன். கவிதை அருமையாக உள்ளது ஆகா இனிமேல் பாலோ செய்ய வேண்டியது தான்

    ReplyDelete
  2. ///நாடி தளர்ந்து காடு செல்லும் நேரம்
    காக்கவேண்டிய காலத்திலே
    காப்பகத்தில் விடுவாய் என./// - super line

    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

    ReplyDelete
  3. மனம் வலிக்கும் கவிதை.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. உணர்வைத் தொடும் கவிதை

    ReplyDelete
  5. வலி உணர்த்தும் கவிதை.

    ReplyDelete
  6. உச்சி மண்டையில நச்சுன்னு வச்சா மாதிரி எழுத்து. பெருஞ்சோகம் இது:(

    ReplyDelete
  7. பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் நன்றி.

    ReplyDelete
  8. வாசித்து முடித்ததும், மனதில் ஒரு சோகம்.

    ReplyDelete
  9. கவிதை அருமை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. இன்றைய இயல்பாயிருக்கிறது இப்படியான நிகழ்வுகள்.தனக்கும் ஒரு காலம் வரும் என்று நினைக்கும்வரை இப்படியான கவிதைகள் எழுதிக்கொண்டேயிருப்போம் !

    ReplyDelete
  11. பரவாயில்லைபா நல்ல கீதுபா...காப்பகம் இன்ன இன்ன ஹாஸ்டல் தான.. கும்மாச்சி உன்னோட இடம் (ஆதான்பா Site) நல்ல இருக்கும் போல.. டெய்லி மினிய போட்டுட்டு மணிய பாத்து குந்திரலாம்,,,

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.