Saturday, 26 June 2010

செம்மொழி மாநாடும் ஓணான்டி கவிஞர்களும்


செம்மொழி மாநாடு விமர்சையாக கொங்கு நாட்டிலே கொண்டாடப் போகிறோம் என்ற ஒரு செய்தி வெளியான பொழுதே அதற்கான எதிர்மறை கருத்துக்களும் அப்பொழுதே பிறந்துவிட்டன.

எல்லோர் மனதிலும் இருந்த ஐயப்பாடு அகல இதில் தனி மனிதத் துதி இருக்காது என்று நம்பியிருந்தோம். ஆனால் அங்கு நடப்பதை பார்க்கும் பொழுது “இப்பரிசில் வாழ்கை” என நொந்த புலவன் கதை தான் மனதில் தோன்றுகிறது.

கவியரங்கம் என்றப் பெயரில் தமிழ் பெருமைகளை, இல்லை தமிழை அழியாமல் காக்க ஆக்க பூர்வமானக் கருத்துக்கள் தான் கவிதையூற்றிலே பெருக்கெடுத்து ஓடும் என்ற நம் எண்ணத்தில் விழுந்தது அடி.

ஈரோட்டு தமிழன்பன் தொடங்கிவைத்தார். “அவர் நேரடியாகவே கேட்டிருக்கலாம், நீதான் தமிழ், தமிழ்தான் நீ, சில்லறை இருந்தாக் கொடு தலைவரே என்று” அதை விட்டு வேட்டிக் கட்டிய தாய், அவ்வை அதியமான் நெல்லிக்கனி, துப்பின கொட்டை(கள்) என்று, நல்ல காலம் அவ்வையார் காதில் விழவில்லை விழுந்திருந்தால்

எட்டேகால் லட்சணமே
எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே
முட்டமுட்ட கூரையில்ல வீடே
குலராமன் தூதுவனே
யாரையடா சொன்னாய் அது

நல்லத் தமிழில் திட்டியிருப்பாள். பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டாள்.

அடுத்தபடியாக நம்ம கவிப் பேரரசு

“உன் வாய் உமிழ் நீர் கூடத் தமிழ் நீர்”, அபத்தத்தின் உச்சக் கட்டம். அதற்கு பதில் “கொடுத்தது போதாது தலைவா கூட்டிக் கொடு” என்று கேட்டிருக்கலாம்.
ஏதோ தமிழ்த் தாய்க்கு நல்ல காலம் மற்ற கழிவு நீரை விட்டானே பாவி என்று தப்பி ஓடிவிட்டாள்.

அப்புறம் வந்தார் ஐயா வாலி என்று ஒரு போலி இவரின் செம்மொழி மாநாட்டு பங்கு அபாரம்.

பூ ஒன்று ப்பூ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது, ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதய சூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது அப்பூ எப்பூ “புடவைக் கட்டிய பூ” அந்தம்மா ஜாக்கெட்டை ஏன் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.

மேலும் நாம் யாருக்கு சொம்பு தூக்குகிறோமோ அவருடைய எதிராளிய ஏதாவது ஏசவேண்டும் என்பது எழுதாத விதி.

அந்த வகைக்கு தன் பங்கில்
புனைந்தான் அய்யா ஒரு பாட்டு, அது செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு, அந்த மையநோக்குப் பாடல் ஈர்த்தது வையநோக்கு
ஆனால் என் அருமை நண்பர் சோவுக்கு மட்டும் அதன் உட்பொருளில் ஒரு அய்யா நோக்கு அது அய்ய நோக்கு அல்ல “அய்யர்” நோக்கு.

இதற்கு முதல்வர் விழுந்து விழுந்து சிரித்தார்.
என்ன ரசனை, செம்மொழி மாநாட்டிலும் சாதி வெடி கொளுத்தியாகிவிட்டது.

நான் மாநாடு நடத்துவதை குறை சொல்லவில்லை. நடத்திய விதம் நடத்தப் படும் நோக்கம் இதைப் பற்றிதான் சொல்கிறேன்.

ஒனாண்டி கவிஞர்களை வைத்து புகழ் மாலை தேவைதானா.

தமிழைப் பாடுங்க என்று ஏன் யாரும் சொல்லாமல் போனார்கள்.

இதற்காக தொடங்கியிருக்கும் வலைமனையில் சான்றோர் என்ற பகுதி நிரப்பப்படாமலே உள்ளது உறுத்துகிறது. இது வரை நான் கவனித்ததில் உருப்படியான ஒன்று புத்தக விற்பனை. (அதிலும் தள்ளுபடி இல்லையாம்)

“நெஞ்சுப் பொறுக்குதில்லையே”

Follow kummachi on Twitter

Post Comment

14 comments:

Vijays said...

இத ஜெயலலிதா நடத்திறந்த சால்ர அடிபிங்க.

பித்தன் said...

“கொடுத்தது போதாது தலைவா கூட்டிக் கொடு”

rittu vidu.....

பித்தன் said...

உட்பொருளில் ஒரு அய்யா நோக்கு அது அய்ய நோக்கு

ithukku 'I' la varavendum iyyam (doubt) is what he meant. I'm i right

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

“நெஞ்சுப் பொறுக்குதில்லையே”

//////

வழிமொழிகிரேன் ...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

முதல் நாள் ஊர்வலத்தை, சன் டீவியில் பார்த்ததில் இருந்து..அந்த நிகழ்சிகளை பார்ப்பதை நிறுத்திவிட்டேன் பாஸ்...

சசிகுமார் said...

எல்லாமே அரசியல் நண்பா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

கும்மாச்சி said...

பின்னூட்டமிட்ட அணைவருக்கும் நன்றி, அப்படியே கொஞ்சம் வோட்டையும் போடுங்கப்பு.

அஹோரி said...

தி மு க ஜாதி வெறியை தூண்டும் மூன்றாம் தர கட்சி.

Chitra said...

hello sir, I voted. :-)

sibeash said...

நான் இலங்கையில் இருந்து ஆவலுடன் இதை தொலைகாட்சி ஊடாகப் பார்த்தேன். மிஞ்சியது ஏமாற்றமே. ஏதோ தி.மு.க. கட்சி மாநாடு இல்லையில்லை முதல்வர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் புகழ்பாடும் குடும்ப நிகழ்ச்சி போல் இருந்தது. அதிலும் தமிழ் படுகொலை வேறு.

இன்றைய 26-06-2010 நடைபெற்ற பட்டிமன்றத்தில் திருப்பூர் குமரன் அவர்கள் மட்டுமே நன்றாகப் பொருள்பட பேசினார். மற்றவர்கள் கருத்தினை விட்டு முதல்வர் புகழ்பாடுவதிலேயே கருத்தாய் இருந்தார்கள். அதிலும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் விவாதம் சுத்த உளரல். ஏதோ வீட்டில் உரையாடுவது போல் பேசினார்.

சாமக்கோடங்கி said...

"சாமிகள் இருக்க வேண்டியது ஆலயத்தில் தானே,
அதனால் தான் வந்து சேர்ந்தனர் இரண்டு சாமிகள்..
அவர்கள் முத்துசாமி, சின்னசாமி என்ற இரண்டு சாமிகள்,
அதற்குக் காரணம் இரண்டு மாமிகள்"

இதை விடக் கேவலமாக ஒருவர் எழுத முடியுமா...? வாலியின் மேல் இருந்த மரியாதையே பொய் விட்டது..எங்கோ டாஸ்மாக் கடையில் குடித்து விட்டுப் பேசும், குடிகாரன் கூட இந்த மாறி ஒரு வார்த்தையை உபயோகிக்க முடியாது... கேவலத்திலும் மகா கேவலம்..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//..எங்கோ டாஸ்மாக் கடையில் குடித்து விட்டுப் பேசும், குடிகாரன் கூட இந்த மாறி ஒரு வார்த்தையை உபயோகிக்க முடியாது... கேவலத்திலும் மகா கேவலம்.//
என்ன எங்கள பார்த்தா அவ்வளவு கேவலமா போச்சா உங்களுக்கு
இதோ கடைக்கு போயிட்டு வந்து வச்சுக்கிறேன்....

Unknown said...

அப்புறம் கயல்விழி அக்கா கவிதை படிச்சாங்க பாருங்க.....அருமை.அருமை .

virutcham said...

நியாயமான குமுறல்.
எனது குமுறல்கள் இங்கே http://www.virutcham.com/tag/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.