கல்தோன்றி மண் தோன்றா காலத்தின்
முன் தோன்றி முதன்மைப் பெற்றாய்
அகத்தியனிடம் தொல்கப்பியனிடமும்
நாம் போற்றிக் கற்க வலிமையுற்றாய்
கம்பனிடம் தவழ்ந்து வள்ளுவனிடம் வளர்ந்து
அவ்வையிடம் அழகு பெற்றாய்
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி,
வளையாபதி, குண்டலகேசி, குறுந்தொகை
அகநானூறு, புறநானூறு, போன்ற
பூக்கள் சூடி அழகு பெற்றாய்
இயல் இசை நாடகம் என்ற
மூன்று வடிவத்தில் காட்சியுட்றாய்
பாரதியின் மடியில் தவழ்ந்து
புதுப் பொலிவு பெற்றாய்
பாரதி தாசன், மு. வ.
உ.வே. சா, முதலான
எண்ணற்ற தமிழ் ஆர்வலர்கள்
எமக்களித்தாய்
வந்தாரை வாழ வைத்தாய்
உன் பெயர் உபயோகிப்போரை
உச்சத்திலே தூக்கி விட்டாய்
அவர், இவர், என்றால் தமிழ்
தமிழ் என்றால் அவர், இவர்,
என்று எல்லோரையும் உளற வைத்தாய்
செந்தமிழ் நாடு என்ற பொழுது
தேன் வந்துப் பாயும் என்ற சொல்லை
பொய்யென்று போற்றிப் புகழ
கொங்கு நாட்டிலே துகிலுறியப்பட்டாய்
6 comments:
தமிழ்தான் கலைஞர்
கலைஞர்தான் தமிழ்
குஷ்பூவின் தமிழ்...
கொங்கு நாட்டிலே துகிலுறியப்பட்டாய்
ss very correct
என்னம்மா தமிழ வளக்குறாங்க, முதல்ல அவன் புள்ள பேர மாத்த சொல்லுங்க கும்மாச்சி
அவர், இவர், என்றால் தமிழ்
தமிழ் என்றால் அவர், இவர்,
என்று எல்லோரையும் உளற வைத்தாய்
...... உளறிய "தமிழ்' நெஞ்சங்கள் "வாழ" இப்படி செய்ய வேண்டியதாகி விட்டதே.... :-(
கொங்கு நாட்டிலே துகிலுறியப்பட்டாய்
/////////
மிக அருமை
good
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.