Tuesday, 27 July 2010

கிரிக்கெட் இனி மெல்ல சாகும்

இந்தியா, ஸ்ரீலங்கா இடையே நடக்கும் மட்டையடித் திருவிழா ஒரு ஐந்து நாட்களுக்கு கொழும்புவில் நடந்துக் கொண்டிருக்கிறது.


இந்தத் திருவிழாவை நேரில் கான்பவர்களோ, அல்லது தொலைக் கட்சியில் குத்த வைத்து குந்திக்கினு பார்க்கிறவர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய அனுதாபங்கள்.

இந்த மாதிரி ஒரு போட்டியை பார்ப்பதற்கு பதில், பேசாமல் டேமேஜெர் பிடுங்க சொல்லும் ஆணிகளை நல்லாப் பிடுங்கலாம்டா சாமி.

இவனுகளுக்கு இதே பொழைப்பாப் போச்சு. வருஷத்துக்கு ரெண்டு தபா இவனுங்க கூத்து. ஒரு தபா இந்தியாவில் வச்சு நல்லா காஜி அடிக்கிறானுங்க.

இந்த முரளி, மென்டிஸ் எல்லோரையும் மாஞ்சு மாஞ்சு போட வச்சு பந்து பொறுக்க உட்டானுங்க.

பதிலுக்கு இப்போ நம்ம பஜ்ஜி, போண்டா எல்லோரையும் போட வுட்டு நல்ல சங்காவும், மகிலாவும் காஜி அடிச்சிக்கிறாங்க.

இதற்கு கிரேக், ரஸ்ஸல், பெர்னாண்டோ, அப்புறம் நம்ம ஊரு ஆஸ்தான குப்பன் சுப்பன். மைக்க பிடிச்சிக்கினு மாஞ்சு மாஞ்சு கூவரானுங்க. இவனுங்களை எல்லாம் பசித்த புலி தின்னட்டும்.

இப்படியே போச்சுன்னா இந்த ஐந்து நாள் போட்டிக்கு சமாதி உறுதி.

பார்ப்போம் இப்போ இந்திய வீரர்கள் முறை. எப்படியும் ஒரு ரெண்டு நாள் போட்டு அந்தப் பந்த சாவடி அடிப்பானுங்க.

போதாகுறைக்கு நம்ம லட்சுமன் ஐயா வந்து ஒரு பக்கம் பொட்டி படுக்கையோட குத்த வச்சு குந்திப்பார்.

கொடுமைடா சாமி.

Follow kummachi on Twitter

Post Comment

Monday, 26 July 2010

கிளம்பிற்றுகாண் ...............................போற்றி

திருக்குவளை தந்த திருமகனே போற்றி


திருவாரூர் கண்ட பெருமானே போற்றி

கழகம் வளர்த்த கனவானே போற்றி

கலை வளர்த்த கலைமகனே போற்றி



செந்தமிழ் வளர்த்த செம்மலே போற்றி

தனி ஈழம் கண்ட தலைவா போற்றி

தமிழினம் காக்கும் தலைவா போற்றி

வாழும் திருவள்ளுவரே போற்றி



ஒய்வுக்கே ஓய்வளித்த ஒளியே போற்றி

சூரியனையே துயிலெழுப்பும் சூரரே போற்றி

குடும்பம் வளர்க்கும் குணவானே போற்றி

அனைவரையும் அமைச்சராகிய அப்பனே போற்றி



சினிமாவை குத்தகை எடுத்த குருவே போற்றி

பேரர்களை தயாரிப்பாளராக்கிய தயாநிதியே போற்றி

தொலைக்காட்சி தொண்டு புரியும் தொண்டமானே போற்றி

பொது சொத்தை (தன்)மக்களுக்கே வழங்கிய பாரியே போற்றி



கோடிகளில் வாழும் கோமானே போற்றி

ஓட்டளித்தவர்களை ஓட்டாண்டியாக்கிய ஒரியே போற்றி

காப்பீட்டில் காசடித்த கண்ணாளா போற்றி

ஆயா (சோனியா) விரும்பும் ஐயாவே போற்றி



உமிழ்நீரில் தமிழ் சொரியும் உத்தமரே போற்றி

மானாட மயிலாட தந்த மன்னவனே போற்றி

நமீதாவை நடுவராக்கிய நாயகனே போற்றி

நான்கு மணியில் சுதந்திரம் கண்ட தியாகி போற்றி



உட்கார்ந்த வள்ளுவனை சிம்ரனாக்கியவா போற்றி

ஊருக்கு தமிழ் உபதேசம் தந்த தலைவா போற்றி

பேரர்களுக்கு ஆங்கிலம் தந்த பெரியவா போற்றி

கோமணத்தை உருவிய கோமானே போற்றி



என்னே சொல்வேன் உன்புகழை போற்றி

டாஸ்மாக்கில் தண்ணியடித்து போற்றி

தேர்தல் நேரம் தரும் காசே போற்றி

லெக் பீசு பிரியாணியே போற்றி



கவுந்து படுக்கும் கண்மணிகளே போற்றி

கூட்டணி கட்சிகள் மானமே போற்றி

ஓட்டளிக்கும் ஓட்டாண்டிகளே போற்றி

போற்றி போற்றி போற்றி போற்றி



வாலி, வைரமுத்து, தமிழன்பன் ரேஞ்சுல ஒரு கவிதைப் பாடனும்முனு தோணிச்சு அதான் இந்தக் கவிதை. நாங்களும் புகழ் பாடுவோம்ல.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 22 July 2010

பேயோட்டிய கொழுந்தியா

கண்ணாத்தாளுக்கு இப்பொழுதேல்லாம் அடிக்கடி பேய் பிடித்துவிடுகிறது. முருகனுக்கு கொஞ்ச நாட்களாகவே களத்து மேட்டில் வேலை ஓடவில்லை. எப்பொழுதிலிருந்து இவளுக்கு பேய் வந்தது என்று யோசித்தான். போன மாசிக்கு நாலாவது பிரசவத்துக்கு போய் வந்தாளே அப்பொழுதிலிருந்து தான். அதுவும் முருகனின் மச்சான் வீட்டுக்கு வந்துப் போனான் என்றால் அன்று நிச்சயம் அவள் பேயாட்டம் ஆடுவாள்.

முருகன் அவள் அமைதியானவுடன் எத்தனையோ இரவுகளில் பேயாட்டத்தை அவளுக்கு நினைவுப் படுத்தியிருக்கிறான். அவளுக்கு தன் மேல் பேய் வந்த நியாபகம் வருவதில்லை. முருகனையும் பிள்ளைகளையும் ஒழுங்காக கவனித்துக் கொண்டு தானிருக்கிறாள். சின்னவனுக்கு இப்பொழுதுதான் ஒன்பது மாசம் ஆகிறது.

முருகனின் மாமனார் இறந்து ஆறு மாதம் ஆகிறது. கொஞ்சம் இருந்த கால் ஏக்கர் நிலத்தையும் குடித்தே அழித்துவிட்டார். கல்யாணத்திற்கு வேறு கண்ணாத்தாளுக்கு இரண்டு தங்கச்சிகள் இருக்கிறார்கள். மச்சானுக்கும் வேலை வேட்டி இல்லை. முருகன் இல்லாத நேரத்தில் வீட்டில் வந்து கண்ணாத்தாளிடம் அடிக்கடி காசு வாங்கிச் சென்றுவிடுவான்.

அன்று வழக்கம் போல் அறுவடை முடித்து முருகன் வீட்டுக்கு வந்தான். கண்ணாத்தாள் சின்னவனுக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள். முருகன் கை கால் கழுவிக்கொண்டு திண்ணையில் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து வீட்டினுள் சத்தம் கேட்க ஆரம்பித்தது. பாத்திரங்கள் இறைபடும் ஓசை. கண்ணாத்தாள் தலையை விரித்துப் போட்டு உக்கிரமாக கத்திக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் ஓரமாக ஒண்டிக் கொண்டிருந்தன. சின்னவன் பயந்து அக்கா வள்ளியின் இடுப்பில் ஏறிக்கொண்டான்.

அதற்குள் கண்ணாத்தாள் தெருவில் இறங்கி ஓட ஆரம்பித்தாள். தெருவில் கூட்டம் கூட ஆரம்பித்தது. அதற்குள் யாரோ ஒருவர் தெருக்கோடியில் இருந்த பூசாரியை கூட்டி வந்துவிட்டார். கண்ணாத்தாள் புடவை அவிழ்ந்த நிலையில், தலைவிரி கோலமாக அம்மன் கோவிலில் முன் அமர்ந்து அரற்றிக் கொண்டிருந்தாள்.

ஊர் பெரியவர்கள் நாட்டாமை எல்லோரும் சடுதியில் கூடிவிட்டனர். பூசாரி வேப்பிலை அடித்து பேயோட்ட ஆரம்பித்தான்.

“இன்னா வேணும் சொல்லு கிடா வெட்டனுமா, கோழி வேணுமா” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

“கிடா எல்லாம் வேணாண்டா, கிழக்கே இருக்கிற மஞ்சக் காணிய மச்சானுக்கு கிரயம் பண்ண சொல்லுடா, நான் போயிடுறேன்” என்றாள்.

முருகனுக்கு தூக்கி வாரிப் போட்டது. மஞ்சக்காணி முருகனின் தம்பியின் நிலம், முருகன்தான் அதை கவனித்துக் கொள்கிறான். தம்பி பட்டணத்தில் இருக்கிறான்.

நாட்டாமை “முருகா சரி அது சொல்படி செஞ்சிடுடா” என்றார்.

முருகன் “அதெப்படி நாட்டாமை, வேணுமென்றால் ஒன்று செய்கிறேன்” என்றான்.

கண்ணாத்தாள் பேயாட்டம் நிறுத்தி அவனை நோக்கினாள்.

“சாமி பேயோட என்னால வாழ முடியாது, அதனால கொழுந்தியாள கட்டிக்கிறேன்” என்றான்.

கண்ணாத்தாள் விறு விறுவென்று எழுந்து புடவையை சரி செய்து கொண்டாள், கூந்தலை அள்ளி முடித்து, சின்னவனை கையிலெடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள்.

இப்பொழுதெல்லாம் கண்ணாத்தாள் மேல் பேய் வருவதில்லை.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 20 July 2010

சொன்னாங்க.............சொன்னாங்க...........

சீர்காழி: திமுகவிலும், அதிமுகவிலும் ஒரு வன்னியர் கூட இருக்கக் கூடாது. அத்தனை பேரும் அங்கிருந்து விலகிட வேண்டும். அனைத்து வன்னியர்களும் பாமகவுக்கே வாக்களித்தால் அடுத்தமுதல்வர் அன்புமணிதான் என்பதில் சந்தேகம் இல்லை என வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு அழைப்பு விடுத்துள்ளார்.

கிளம்பிட்டாங்கையா, கிளம்பிட்டாங்கையா.

சீர்காழியை அடுத்த பூம்புகாரில் வன்னியர் மகளிர் மாநாடு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மனைவியார் சரஸ்வதி அம்மாள் தலைமையில் நடந்தது. ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, வன்னிய சங்க தலைவர் குரு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, பசுமை தாயகம் தலைவரும், ராமதாஸின் மருமகளுமான சவுமியா அன்புமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மற்றும் பலர்னா யாருங்க, மருத்துவர் ஐயாவோட, மாமன், மச்சான், கொழுந்தியா, குஞ்சு, குளுவான்கள் எல்லோருமா.


அது சரி அப்போ குடும்ப பொதுக்குழு கூட்டம்னு சொல்லுங்க.

கூட்டத்தில் காடுவெட்டி குரு பேசுகையில்,

தமிழகத்திலேயே மிகப்பெரிய ஜாதி வன்னிய ஜாதி. ஆனால் இன்று ஒடுக்கபட்டு அரசியல் கட்சியிடம் கையேந்தும் நிலை உள்ளது. 2 கோடி வன்னியர்கள் ராமதாஸ் தலைமையில் அணி திரள வேண்டும்.

இரண்டு கோடிபேர் தமிழ் நாட்டுல இருக்காங்களா, அப்படின்னா 33% சொல்லுங்க.

1952ல் இருந்து நம் வன்னிய மக்களுக்கு கல்வி, சமூகம், வேலைவாய்ப்பு என இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

அப்படிங்களா, அப்போ மருத்துவர் ஐயா, சின்ன ஐயா எல்லோரும் அண்டார்டிகாவுல படிச்சாங்களா?


ஏனுங்க சிறுபான்மையினருக்குத்தான் இட ஒதுக்கீடுங்கிறாங்க, நீங்க தமிழ்நாட்டுல முப்பத்தி மூணு விழுக்காடும், பாண்டில அறுபத்தைந்து விழுக்காடும் இருக்கிங்களே, எப்படி சிறுபான்மை எங்க மர மண்டைக்கு ஒன்னும் புரியல.

அனைவரும் சாதி சங்கம் வைக்கும்போது வன்னியர் சங்கம் வைத்தால் தப்பா?

தப்பே இல்லைங்க? ஏனுங்க நாட்டுல ஜாதியே ஒழியனும்முன்னு எல்லோரும் கூவிக்கிட்டு இருக்காங்க? ஏதோ சொல்றாங்களே இறையாண்மை அப்படி இப்படின்னு இப்படியெல்லாம் பேசுனா, அதுக்கு குந்தகம் வராதா?


அப்படியே கட்சி பெயரையும் வன்னியர் முன்னேற்ற கழகம்முன்னு மாத்திடுங்க. பா.ம.க. ன்னா மக்கள் தப்பா எடுத்துக்குறாங்க. “பாசமிகு மகன் கட்சி”ன்னு சொல்லுறாங்க.

எனவே எந்த வன்னியனும் தி.மு.க., அ.தி.மு.க. என எந்த கட்சியிலும் இருக்கக் கூடாது.

அங்கே இருந்து எல்லாம் வந்தாங்கன்னா தேர்தல் சீட்டு கேப்பானுங்க, அப்புறம் உங்க இடத்துக்கு ஆப்பா ஆயிடும், பாத்து பேசுங்க சாமியோவ்.

வன்னியர் ஓட்டுகள் பா.ம.க.வுக்கு என்று முடிவு எடுத்தால் அடுத்த முதல்வர் அன்புமணி தான் என்றார் குரு.

அது சரி, இது மாதிரி தான் இன்னும் ஒரு ஐந்து ஆறு பேர் கனவு கண்டு கிட்டு இருக்கானுங்க. ரெண்டு மூணு நடிகர்கள் வேறே படம் சரியா ஒடலை முதலமைச்சர் ஆகணும்முனு சொல்லிக் கொண்டிருக்காங்க. ஏற்கனவே தமிழ் நாட்டுல இரண்டு நிரந்தர முதல்வர் இருக்காங்க.


பார்த்து பேசுங்கப்பா. மைக் கெடைச்சா எது வேணா பேசலாம்னா, அப்புறம் சொந்த செலவில் சூனியம் வச்சிக்க வேண்டியதுதான்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday, 19 July 2010

கொடநாடு குந்தானி V/S கோபாலபுர கோமணாண்டி

கொடநாட்டிலிருந்து குந்தானி கோவைக்கு வந்து கொளுத்திச்சியா வெடி. கோபால புற கோமானாண்டி தன் பங்குக்கு வைக்குதையா அடி.


நம் மக்களுக்கு இது புதியதல்ல. நாம்தான் டாஸ்மாக்கில ரெண்டு கட்டிங் வுட்டு ரௌண்டு கட்டி பாப்போமில்ல. தக்காளி இன்னமா அள்ளி வீசுராங்கபா.

கோமாணாண்டி திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தார்கிறாங்க, சொத்து எப்படி வந்ததுங்கறாங்க, கணக்கு கேக்கறாங்க, கஜானா எப்படி நிரம்பிச்சு அப்படின்னு சும்மா கட்டணக் கழிப்பறை கணக்கா நாரடிக்கிறாங்க.

பதிலுக்கு கோமானாண்டி குந்தானி அவசரக் குடுக்கை, பதுக்கல் காரர்களுக்கு பாயா வங்கிக கொடுத்துச்சு, வைர நாயகி, ஆறுமுக சாமிக்கு கப்பம் கட்டிச்சு, இன்னாமா எழுதறாரு.

பதிலுக்கு குந்தானி, குடும்ப கஜானா குலுங்குதுங்கிறாங்க, கோமணம், நீ எப்படி சம்பாதிச்ச வெறும் நடிப்பிலான்னு உள் குத்து குத்துராறு.

நாகரிகம் நாறிப் போச்சு.

புளுகுனி பூதத்த கொடநாடு குகைக்குள்ள குத்த வச்சு குந்த வச்சோம் நாங்கதான், அதுவே பெரிய சாதனை தான் அப்படிங்கிராறு.

ஏலே நமக்கு கொண்டாட்டம் தான். இது வெறும் டிரைலர் தாம்பா, படம் இன்னும் சூப்பரா இருக்கும், தேர்தல் வருது இல்ல.

ஆனா சும்மா சொல்லக் கூடாது, பெரிசுங்க நாகரீகமா பேசுவாங்கன்னு நம்மள மாதிரி கேனயன் நினைச்சுகினு, டாஸ்மாக்கில மோரு கேக்குற மொன்னையனுங்க கணக்கா இருக்கிறோம்.

நாம வழக்கம் போல, கட்டிங்குக்கு காசு கொடுத்து, லெக் பீஸ் பிரியாணி குடுப்பாங்க, அத்த வாங்கி அமுக்கிக்கின்னு மப்புல ரெண்டுல ஒரு சின்னத்துல ஓங்கிக் குத்துவோம். ஏன்னா நமக்குதான் மப்புல வேற சின்னம் கண்ணுக்கு தெரியாதே. இருந்தாலும் புது ஆளுங்க வந்து இன்னா கிழிச்சிற போறானுங்க. ஐட்டமுமா கொடுத்துரப் போறானுங்க.

இன்னா இந்த கட்டிங்குக்கும், லெக் பீசுக்கும் ஆப்பு வச்சிருவானுங்க.

Follow kummachi on Twitter

Post Comment

Sunday, 18 July 2010

கலக்கல் காக்டெயில்-2

ஸ்ஸ் அப்பாடா இப்பவே கண்ணைக் கட்டுதே


இந்த வருடம் பருவமழையில் இருபது விழுக்காடு குறையும் என்று வானிலை நிபுனர்கள் கூறுகிறார்கள். அது கூட பெய்தால் ஏதோ பிழைத்தோம்.

விளைச்சல் கம்மி என்றால் விலைவாசி எங்கு போய் நிக்குமோ தெரியவில்லை.

போதாதற்கு நாட்டில் மாவோயிஸ்டுகள் வேறு குடைந்துக் கொண்டிருக்கிறார்கள்.

காஷ்மீரில் இரண்டு கட்சிகளும் ஒத்துப் போகாமல் ராணுவம் அழைக்கப்பட்டு அதைப் பற்றி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் அல்லக்கை மந்திரி எல்லாம் இந்தியாவையும், மந்திரிகளையும் நக்கலடித்து டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம்ம கீழ இருக்கிற குஞ்சு நாடெல்லாம் நம்ம போடற பிச்சையில் வாழ்ந்துக் கொண்டு நம்ம மீனவர்களை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டை ஆள்கிற “கிழபோட்ல்டுகள்” என்ன பண்ணுகிறார்கள் என்றே தெரியவில்லை.

ஸ் அப்படா கண்ணைக்கட்டுதே.



ரசித்த கவிதை



வெயிலில்


விளையாடிக்கொண்டிருக்கிறாயா?


வெகுளித்தனமாகச்


சிரித்துக்கொண்டிருக்கிறாயா?


இளையராஜாவின்


இசையில் இணைந்திருக்கிறாயா?


இளந்தூறல்


மழையின் நனைகின்றாயா?


களையெடுக்க


களத்துமேட்டுக்குச் செல்கின்றாயா?


மேற்படிப்புக்காக


மெட்ராசுக்குச் செல்கிறாயா?


பதினாறு புள்ளிக் கோலத்தை


வரைந்து பார்த்துக் கொண்டிருக்கிறாயா?


பக்கத்துவீட்டு அக்காவிடம்


கதைபேசிக் கொண்டிருக்கிறாயா?


என்ன செய்து கொண்டிருக்கிறாய்?


உனக்காக ஒருத்தி பிறந்திருப்பாளென்று


சொன்னாள் அம்மா


என்னதான் செய்து கொண்டிருக்கிறாய்


நீ………..



ரசித்த நகைச்சுவை



சர்தார்ஜி ஒருவர் டில்லியிலிருந்து அமிர்தசரஸ் காரில் ஒரே நாளில் சென்றாராம்.

திரும்பி டில்லி வருவதற்கு பத்து நாட்கள் ஆகியதாம்.

டில்லி திரும்பியவுடன் நண்பர் ஒருவர் கேட்டாராம், ஏம்பா போகும்பொழுது ஒரு நாளில் சென்றுவிட்டாய், திரும்பி வருவதற்கு பத்து நாட்கள் ஆகிவிட்டது?.


அதற்கு சர்தார்ஜி என் காரில் முன்னே செல்வதற்கு ஐந்து கியர்கள் உள்ளன, பின்னல் செல்வதற்கு ஒரு கியர் தான் இருக்கிறது என்றாராம்.

Follow kummachi on Twitter

Post Comment

Friday, 16 July 2010

ஒரு பதிவரின் டைரிக் குறிப்பு.

இது ஏதோ பதிவைப் பற்றிய குறிப்பு என்று படிக்க வருபவர்கள் அப்படியே அடுத்த ப்லாகிற்கு போயிடுங்க ஆமா முதலிலேயே சொல்லிட்டேன். இது வந்து எனக்கு டைரி எழுத வேண்டும் என்ற ஆவலில் எதையோ கிறுக்கி பின் டைரிக் கனவை கொன்று குழி தோண்டிப் புதைத்தக் கதை.

என் அப்பா விடாமல் டைரி எழுதுவார் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார். அதில் எல்லா நுணுக்கங்களும் இருக்கும். அவரிடம் நான் கவனித்தப் பழக்கம் தினமும் எழுதுவார். ஒரு இரண்டு நாட்கள் விட்டு விட்டு மூன்றாவது நாள் எழுதுவோம் என்பதெல்லாம் கிடையாது. நான் யாருக்காவது கடன் கொடுத்தோ அல்லது வாங்கியோ இருந்தால், அதை அவரிடம் சொன்னால் அதையும் எழுதுவார். அப்புறம் இரண்டு வருடம் கழித்து என்னை நியாபகப் படுத்தி கடுப்பும் ஏற்றுவார்.

ஒரு முறை கல்லூரி விடுமுறையில் வீட்டில் பொழுது போகாதபோது பரணில் ஏறி எல்லாப் பழைய குப்பைகளை கிளறிய போது என் தாத்தாவின் இரண்டு டைரிகள் கையில் கிட்டின. (அதே பரணில் இரண்டு கொக்கோகம் (ரசவந்தி) சம்பந்தப் பட்டவைகளும் சிக்கின அது வேறு கதை, என் அண்ணன் கைங்கர்யம்). தாத்தா எல்லா நுணுக்கமான விஷயங்கள், நாங்கள் பிறந்த நேரம் முதல், நிலம் வாங்கிய விவரங்கள், அவரின் காசி பயணம் எல்லாம் விலாவரியாக எழுதியிருந்தார். பாட்டியுடன் போட்ட சண்டையும் விடவில்லை. இந்த டைரி படிப்பதில் ஒரு குற்ற உணர்வு இருந்தாலும் அவர் எப்படியும் சமாதியில் இருந்து எழுந்து வந்து காதைத் திருகமாட்டார் என்ற ஒரு தைரியம்.

நிற்க இது தாத்தாவின் டைரியைப் படித்த அனுபவமோ அல்லது அப்பா எழுதும் டைரிகளைப் பற்றியோ அல்ல. எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் பதிவு கல்லூரி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருத்த பொழுது நான் எழுதிய சரித்திரப் புகழ் பெற்ற டைரியைப் பற்றியது. கல்லூரி வகுப்பை கட் செய்து விட்டு எங்கு ஒரே காட்சியில் இரண்டுப் படம் போடுகிறார்கள் என்று அலைந்து தேடிப் படம் பார்த்த காலம். இதையெல்லாம் ஒன்று விடாமல் எழுதியிருந்தேன். முதல் செமஸ்டரில் மட்டு ஐம்பதுப் படங்கள் பார்த்திருந்தேன். இதைத் தவிர எந்தப் பெண் எந்த பஸ் பிடிக்க எத்தனை மணிக்கு பஸ் நிறுத்தம் வருகிறாள் என்ற “டாவு”களைப் பற்றிய புள்ளி விவரங்களும் அடங்கும்.

ஒரு நாள் கல்லூரியிலிருந்து நான் வந்த பொழுது என் தங்கை அலமாரியில் எதையோ தேடுவதுபோல் பாவனை செய்துக் கொண்டிருந்தாள், நான் கேட்டபொழுது ஒன்றுமில்லை ஒரு புத்தகம் என்னுடையது காணவில்லை என்றாள். நானே அன்று சரியான மூடில் இல்லை, கல்லூரியில் செமஸ்டர் மார்க் வந்த நேரம். ஆதலால் அவளை விட்டு விட்டேன். அப்பொழுது தெரியாது எனக்கு சரியான ஆப்பு இரவில் காத்திருக்கிறது என்று.

அப்பா அலுவலகத்திலிருந்து வந்தவுடன், மெதுவாக என்னிடம் செமஸ்டர் ரிசல்ட் கேட்க ஆரம்பித்தார். நான் வாங்கிய மார்க்குகளை சொன்னேன், எப்பவும் சொல்வதுபோல் அடுத்தமுறை படித்து நன்றாக மார்க் எடு என்று தான் சொல்லுவார் என்று நினைத்தேன். மாறாக நீ எங்கே உருப்படப் போறே, காலேஜ் கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு போகவேண்டியது, எந்தப் பெண் எப்ப வருவா என்று வாரவதியில தேவுடு காக்க வேண்டியது. இந்த அழகில இவனுக்கு டைரி எழுதறதுதான் முக்கியம். என்னத்த எழுதறான் பாரு டைரில, என்று தன் பின்புறம் மறைத்து வைத்திருந்த டைரியை எடுத்து என் அம்மாவின் முன் நீட்டிவிட்டு அதை தோட்டப் பக்கம் எறிந்தார், அது எங்கள் வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் போய் விழுந்தது.

புரிந்துவிட்டது. என் தங்கை சனியன் தான் போட்டுக் கொடுத்திருக்கிறது என்று. அத்தனையும் கேட்டுக் கொண்டு “இதற்கும் அவளுக்கும் சம்பந்தமில்லை என்பது போல் படித்துக் கொண்டிருந்தாள்”.
“தக்காளி” அன்னிக்கு வச்சேன் இனி மவனே டைரியே எழுத்தாகக் கூடாது என்று. என் டைரி எழுதும் வழக்கம் அந்த கிணற்றில் புதைந்த டைரியுடன் போய் விட்டது.

அதனால் என்ன இப்பொழுது ப்லாகில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவுக்கு அமெரிக்காவிலிருந்து கட்டாயம் “சனியன்” பின்னூட்டம் போடும். ஒவ்வொரு முறை விடுமுறையில் வரும் பொழுது “அண்ணா உன் டைரி எங்கே?” என்று கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 13 July 2010

கழிவறை நித்திரை



அன்னைக்கென்ன ஆயிரம் வேலை

அலைபேசியை அப்புறமும் இப்புறமும்

அசைத்து தோழியிடம் அரட்டை

அடுப்படியில் அலுவலக அவசரம்

அப்பாவிற்கு வார அலுப்பு

அனைத்தும் களைய

அசந்த உறக்கம்



நேற்றைய விடுமுறையின் கனவில்

இன்றைய பள்ளியைத் தவிர்க்க

கழிவறைத் தொட்டிலில்

நித்திரை சுகம்.

Follow kummachi on Twitter

Post Comment

Monday, 12 July 2010

கலக்கல் காக்டெயில் - 1 (++18 மட்டும்)

காலைல நல்ல வார்த்தை சொல்லுடா பேமானி


கடற்கரையில் காலையில் நடந்து முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன். அந்த டீக்கடையை கடக்கையிலே அந்த முதியவர் ஒரு சிறுவனை கத்திக் கொண்டிருந்தார்.

மூதேவி, முண்டம், தோசிப்பயலே, விளங்கமாட்ட நீ, சாவுகிராக்கி, காலைல நல்ல வார்த்தை சொல்லுடா பேமானி.

அதற்கு சிறுவன் “பெரிசு நான் இன்ன சொல்லிட்டேன் எதிரில் வண்டி வருது அடிபடப் போறேன்னு தானே சொன்னேன்”.



சமீபத்தில் ரசித்த கவிதை.

சற்றே துவையல் அரை தம்பி ஒரு பச்சடி வை

வற்றல் ஏதேனும் வறுத்துவை – குற்றமிலை

காயமிட்டுக் கீரை கடை கம்மெனவே மிள

காயரைத்து வைப்பாய் கறி.

.........சிவஞான முனிவர்.




சமீபத்தில் படித்த ++18 joke

திருடன் பூட்டிய வீட்டை திறந்து நுழைந்தான். படுக்கையறையில் கணவனும் மனைவியும் பதறி அடித்து எழுந்தனர்.

இதோ பாரு பணம் நகைகள் எங்கே இருக்கு சொல்லு இல்லே ரெண்டு பேரையும் கீசிடுவேன்” என்று கத்தியை எடுத்தான்.

இருவரும் பதறி பீரோவை காட்டினர். அவன் அங்குள்ள பணம் நகைகள் எல்லாவற்றையும் கவர்ந்துக் கொண்டு, “தோ பார் நான் எங்கே திருடினாலும் என் உடற் பசியை தீர்க்காமல் போகமாட்டேன். இல்லேன்னா உங்க ரெண்டு பேரையும் கீசிடுவேன்” என்று கத்தியை மறுபடி காட்டினான்.

கணவன் மனைவியிடம் “பரவாயில்லை டியர் கொஞ்சம் பொறுத்துக்கோ நமக்கு உயிர் தான் முக்கியம் கற்பு எல்லாம் சும்மா உட்டாலக்கடி.நான் வெளியிலே சொல்ல மாட்டேன்” என்றான்.

திருடன் மனைவியின் காதில் ஏதோ சொன்னான்.

கணவன் அவளிடம் என்ன சொன்னான் என்று கேட்டான்.

அது வந்து அவன் “கே”வாம் வேஸலின் (Vaseline) எங்கே இருக்குன்னு கேட்டான், பாத்ரூமில் இருக்கு என்று சொன்னேன், பொறுத்துக்கோங்க டியர், நமக்கு உயிர்தான் முக்கியம், மற்றதெல்லாம் உட்டாலக்கடி” என்றாள்.

Follow kummachi on Twitter

Post Comment

Friday, 9 July 2010

தமிழினம் காக்கும் தலைவர்

சென்னை: இந்திய மீனவர்களை தாக்கக் கூடாது என்று தொடர்ந்து கோரி வந்த நிலையிலும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்குவது தொடர்கிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக நீங்கள் தலையிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.


செய்தி


ங்கொய்யால கடிதம் எழுதிட்டார்பா. ராமேஸ்வரம், நாகபட்டினம், கோடியக்கரை, வேதாரண்யம் எல்லா இடத்தில் இருந்தும் மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க இனி கடலில் செல்லலாம், கவலை வேண்டாம். இவர் கடிதம் ஒன்று போதும் இனி சிங்களவன் உங்களப் பாத்தா "உச்சா ஊத்திடுவான்".


இதுக்கெல்லாம் எங்க தமிழீனத் தலைவர் டில்லி போகலேன்னு இங்க ஒருக் கூட்டம் குத்த வைச்சு குந்திக்கின்னு அலம்பி புலம்பி திரியரானுங்க. இவனுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் புரிய மாட்டேங்குது. மண்டையில இன்னா வச்சிகிரானுங்களோ தெரில.


அதான் கடிதம் எழுதி புறா காலில கட்டி உட்டுகிறார் இல்ல. அது நேராபோய் டோப்பா தாத்தாவாண்ட குடுக்கும், அப்பால பாரு அவரு ராஜபட்சே பட்டாபட்டிய கள்ட்டிருவாரு.


ஏண்டா இப்போ இன்னா அவரு குடும்ப ஆளுங்களை மந்திரிப் பதவியிலிருந்து தூகிட்டானுங்களா உடனே டில்லிக்குப் போக.

இப்போதான் ஒரு வயியயா கனிமொயிக்கு மந்திரி பதவி தர்தா சிங்குத் தாத்தாவும், வெள்ளைக்கார ஆயாவும் ஒத்துகின்னு கீறாங்க, வந்துட்டானுங்க அதுக்கு ஆப்பு வைக்க.


மீனவன் செத்தா இன்னா அதான் மூணு லட்சம் குத்துகிறார் இல்ல எங்க பாரி, ஓரி வள்ளல்.


டாய் கூவுற பேமானிங்க இன்னா ஒன்னு கூவுங்க. இந்த மீனவப் பிரச்சினைல ஒரு முதலமைச்சர் இவ்வளவுதான் செய்ய முடியும். “இன்னாது உண்ணாவிரதமா இதுக்கெல்லாம் இருக்க முடியாது”.

“இன்னாது அடுத்த தேர்தலில் பாத்துப்பிங்களா?”

“அடப் போங்கடா கூமுட்டைங்களா, டாஸ்மாக் சரக்கு, பிரியாணி, இலவசம், குண்டனுங்க இருக்கிற வரைக்கும் ஒரு ..ரும் புடுங்க முடியாது”.

இன்னும் எத்துனை பேருக்கு மந்திரிப் பதவி வாங்கித் தரனும், அந்த நிதி, இந்த நிதி, சொறிஞ்சநிதி, சொறியாநிதி.

வீழ்வது நீயாக இருப்பினும் வாழ்வது அவர் குடும்பமாக இருக்கும்.

ங்கொய்யால டாஸ்க்மாக்ல ரெண்டு கட்டிங்வுட்டுட்டு கவுந்தடிச்சு படுத்துக்குவியா! வந்துட்டாணுங்க.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 8 July 2010

எப்படியெல்லாம் கவிதை எழுதுறாய்ங்கப்பா

ஏதோ கவிதை எழுதுவது காதல் பற்றியோ, இல்லை சமூக அவலங்களோ இல்லை சீர்திருத்தமோ இல்லை சொந்த சோகமோ இருக்கவேண்டும் என்பது கவிதையின் எழுதாத விதியோ என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு சமீபத்தில் படித்த கவிதை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. எதை வேண்டுமானாலும் வைத்துக் கவிதை எழுதலாம்.

இதைப் படித்து எனக்குள் நான் சிரித்ததைக் கண்டு என் மகளிடம் தங்கமணி “உங்கப்பருக்கு என்ன ஆச்சு தானே சிரித்துக் கொண்டிருக்கிறார்?” என்ற நக்கல் என் சிரிப்பை நிறுத்தவில்லை.

அந்தக் கவிதை இதுதான், வலைமனையில் படித்தது.

கால்விரல்களின் நகத்தை வெட்ட
காலை மடக்கி மாதம் தொட,
சாக்சும், ஷூ லேசும் கட்ட
கஐகர்ணம் போட வைக்கிறாயே!

ரேஷன் கடை க்யூவானாலும்
சினிமா டிக்கெட் எடுக்கும்
வரிசையிலும்
பேருந்து ஸ்டான்டிங்கில்
பயணிக்கும் போதும்
யோவ்! உனக்கு முன்னால
எவ்….. வளவு கேப் என பிறர்
முறைக்கப் காரணம் நீ தானே!

மல்லாந்து படுத்தால் மலை மாதிரியும்
பக்கவாட்டில் படுத்தால் அருகில்
பாப்பாவாகி
குப்புறப்படுக்க விடாமல்
கொடுமை செய்து
குலுங்கிச் சிரித்தால் பிறரையும்
குலுங்க வைக்கிறாயே!
இருப்பினும் உன்னால்
எனக்கு உதவிதான்,
இருக்கும் இடத்தில் உன்னை
டேபிளாகவும்,
இரு கைகளுக்கு ரெஸ்ட் ஸ்டாண்ட்
ஆகவும்,
ஹெல்மெட்டுக்கு நல்ல
ஷெல்பாகவும்….
ஐ லௌவ் யூ ஸோ மச் தொப்பை!.


எழுதியது யார் தெரியவில்லை?
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

இந்த இன்பம் எல்லோரும் பெற தமிளிஷிலும், தமிழ்மணத்திலும் உங்கள் வோட்டப் போடுங்க.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 7 July 2010

பிரபலங்களிடம் குண்டக்கமண்டக்க கேள்விகள்

சில பிரபலங்களிடம் ஏடாகூட கேள்விகள் குண்டக்க மண்டக்க கேளு? ஆட்டோ வராம நான் பாத்துக்கிறேன்னு நான் கும்பிடுற ஸ்ரீ ஸ்ரீ நித்திரவிபிரேமகுனியவைச்சான்சாமி கனவில் வந்து கேட்டுக் கொண்டதால் இந்தப் பதிவு.

இதற்கு உண்டான பதில்களை தொடர் பதிவாக அளிக்க மற்ற பதிவர்களிடம் விட்டுவிடுகிறேன். ஏதோ நம்மளால் முடிந்தது கொளுத்தி வைக்கிறேன்.

முதலில் தமிழ்தான் அவர், அவர்தான் தமிழ் அவர்களுக்கு.

செம்மொழி மாநாடு முடிந்தவுடன் சும்மா வூட்லே இருக்கப் போவதாக உதார் உட்டிங்களே, அஞ்சா குஞ்சனிடமும், தொளபதியிடமும் பேசிட்டிங்களா?
இனி கோட்டைப் பக்கம் போகமாட்டிங்களா?


அம்மா அவர்களுக்கு
கொடநாட்டில குப்புறப் படுத்துக்கிட்டு ..–விட்டுக்கிட்டு இருந்தா கோட்டையைப் புடிச்சிடலாம்னு இன்னுமா கனவு கண்டுகிட்டு இருக்கீங்க?
கட்சியிலே இன்னும் எத்தனைப் பேரு பாக்கி இருக்காங்க?

மருத்துவர் ஐயா அவர்களுக்கு



ஐயா அடுத்த தேர்தலுக்கு துவைத்துக் காயப் போட வேட்டியா புடவையான்னு கட்சியிலே ஒரு மனதா முடிவு செய்து விட்டீர்களா?

அப்படியே மகனுக்கு கோமணம் மற்றும் லங்கோடு துவைக்க ஏற்பாடு செய்வீங்கதானே?

சைகோ அவர்களுக்கு
கூட்டணி குழப்பம் உங்களுக்கு கிடையாது, ஆதலால் பொட்டி தயார் பண்ணிட்டிங்களா?

தமிழ் ஈழம் பற்றி குரல் உடுவீங்களா?

செம்மொழி மாநாட்டில் சொம்பு தூக்கிய கவிஞர்களுக்கு

வெற்றிகரமான மாநாட்டிற்குப் பிறகு, பாராட்டு விழாவிற்கு கவிதைகள் தயாரா?
போன முறை உமிழ் நீரை சொல்லி மற்றக் கழிவுகளை விட்டு விட்டீர்கள், இந்த முறை மறக்காம சேர்த்துக் கொள்வீர்கள் தானே?

தமிழக காங்கிரசாருக்கு

ஏனுங்க உங்க கட்சியிலே யாரைப் பார்த்துக் கேள்வி கேட்கனும் என்று அடுத்த நூற்றாண்டு முடிவதற்குள் சொல்லுவீங்களா?
முதலில் இந்தக் கேள்வி யாரை கேட்கனும் என்று விடிவதற்குள் யாராவது சொல்லுங்கப்பா?

கேப்டன் அவர்களுக்கு
கூட்டணி போட யாரவது உங்க வூட்டாண்ட வந்தாங்களா?

தனியா நில்லுங்க, ஆனா குவாட்டருக்கு கொதருகிற கூட்டணிக் காரங்களை சேர்க்க மாட்டிங்கதானே?


திரைப்பட துறைக்கு

அடுத்த சொம்பு தூக்கும் திருவிழா எப்போது?

இந்த முறை தொடை கறியும், தொப்புள் குருமாவும் தாராளமாக கொடுப்பீர்களா?

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 6 July 2010

ஐயோ யாரவது உதவி பண்ணுங்கோ-comments moderation ல் சிக்கல்


இன்று காலையில் ஒரு பதிவுப் போட்டேன் “தையல்காரர் ஜோசப்பும் அளவெடுத்த அஞ்சலையும்” என்று. இது இப்பொழுது தமிழிஷில் வெளியாகியிருக்கிறது.

சிக்கல் பின்னூட்டங்களை வெளியிடுவதில். டாஷ் போர்டில் முதலில் “3 comments to be moderated” என்று வந்தது. அதை க்ளிக்கிய பொழுது நேராக “No moderated comments found” என்று வருகிறது. இதில் பித்தன், ப்ரியமுடன் வசந்த், ஜெ முதலானோர் பின்னூட்டங்கள் அடக்கம்.
சரி இங்கிருந்து சரிப்பட்டு வராது என்று ஜி மெயிலிருந்து வெளியிட்டுப் பார்த்தேன். கொடநாட்டில் போய் குப்புறப் படுத்தா மாதிரி பின்னூட்டம் வரமாட்டேங்குது. அதாலதான் இந்தப் புலம்பல்.

இந்தக் கணினி சனியனை கொத்தி கொத்தி பதிவு போடத்தான் தெரியும், என் கணினி அறிவு அவ்வளவுதான். அதற்கு மேல் குழப்பம் என்றால் “பப்பறேபே” என்று உட்கார்ந்துவிடுவேன்.

ஏற்கனவே நான் முதலில் ஆரம்பித்த வலைப்பூ ஏதோ ஒரு நாதாரி உதவியில் வைரஸ்ல சிக்கி சின்னா பின்னமாகி, எலி கொதறிப் போட்ட வலை போல் ஆகி கூகிள ஆண்டவரிடம் முறையிட்டும் ஒரு மயிரும் புடுங்கவில்லை.

ஒரு புலம்பலுக்கு பிறகு அண்ணன் “நைஜீரியா ராகவனின்” அறிவுரையின் பேரில் புதிய வலைப்பூ தொடங்கி மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். போன வலை பூவில் ஒரு முப்பது இடுகைகளும், முப்பதாயிரம் ஹிட்சுகளும், இருபத்தைந்து பாலோயர்களும் அபிட் ஆகிவிட்டது.

சமீபத்தில் நான் செட்டிங்கில் ஒன்றும் மாற்றம் செய்யவில்லை. இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், இந்தப் பிரச்சினை எனக்கு மட்டும் தானா இல்லை என் போல் பாவப்பட்ட ஜென்மங்கள் வேறு யாரவது உண்டா?. அப்படி என்றால் இதற்கு என்ன செய்ய வேண்டும்?.

கூகிள ஆண்டவரிடம் முறையிட்டால் சரியாகுமா? அவருக்கு ஏதாவது நேந்துக்கனுமா? இல்லை அவர் கோவிலில் நடக்கும் “கும்பாபிஷேகம்” காரணமா?

இதற்கு யாரவது வழி சொன்னால் அவர்களுக்கு என் ராஜ்யத்தில் ஒரு பாதியும், கொருக்குப் பேட்டை டாஸ்மாக்கில் என் பெயர் சொல்லி இரண்டு கட்டிங்கும் அடிக்கலாம்.

மறக்காமல் கடைக்காரரிடம் “கொருக்குபெட்டை கும்மாச்சி” என்று சொல்லவும். அவர் தர மறுத்தால் அவரிடம் வவுச்சர் பெற்று கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

கொருக்கு பேட்டை கும்மாச்சி
6/9 கொலைகாரன் சந்து,
டுபாக்கூர் நகர்,
கொருக்குப் பேட்டை
பின்கோடு: 111111

அய்யா பெரியோர்களே தாய்மார்களே, இன்னும் இண்டு இடுக்கில் இருக்கும் எல்லா பெரிய மனுஷங்களும் கொஞ்சம் பார்த்து எதாவது செய்யுங்க.

இப்படிக்கு
கும்மாச்சி

Follow kummachi on Twitter

Post Comment

தையல்காரர் ஜோசப்பும் அளவெடுத்த அஞ்சலையும்...........


"இன்னா கன்னிகா அளவு ஜாக்கெட்டு கொடு, நான் எப்படி தைக்கிரதான்" என்று அந்தப் பெண்ணிடம் ஜோசப் சொல்லிக் கொண்டிருந்தான்.

“அட இன்ன தையக்காரரே இன்னொரு ஜாக்கெட்டு வசிக்கினா நான் ஏன் ஒங்கிட்ட வரேன், போ விளையாடாத”.

"அய்ய உன்கிட்ட இன்ன விளையாட்டு, இல்லன்னா வூட்டுக்கு போய், போட்டுகிறத அவுத்துக் கொண்டா" என்று அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருந்தான்.

"அய்ய இத்த அவுத்து போட்டுகின்னு நான் எப்படி தெருவுல வருதான் என்றாள் அவள்".

“அட போம்மா சும்மா பேஜார் பண்ணாத, எம்மாம் துணி கீது பாரு அல்லாத்தையும் நான் ராவிக்குள்ள முடிக்கணும்” என்றான் ஜோசப்.

தட்டி மறைவில் உட்கார்ந்து தம் அடித்துகொண்டிருந்த எங்களுக்கு அவர்களது பேச்சு தெளிவாக காதில் விழுந்தது.
கல்லூரி முடிந்து கோடை விடுமுறையில் வெட்டிபொழுது போக்கிகொண்டிருந்த காலம் அது.

நாயர் கடையில் தம் அடிக்க போவோம், அவர் தான் எங்களுக்கு கடனில் தம் தருவார், ஒரு கடையை பிரித்து நாயர் பொட்டிக் கடையும், ஜோசப் பின் பாதியில் தட்டி மறைவில் டைலர் கடையும் வைத்திருந்தார்கள். அவ்வாறு நாங்கள் நாயர் கடையின் தட்டி மறைவில் இருந்த பொழுது தான் மேற்கூறிய பேச்சுக்கள் எங்கள் காதில் விழுந்தன.
கூட இருந்த மொட்டை குமார் "சப் இன்னா கதை வுடறான் பாரு, நான் ஆல்டேரஷன் செய்யக் கொடுத்த பேண்டை ரெண்டு மாசமாகியும் இன்னும் கொடுக்கவில்லை" என்று அலுத்துக் கொண்டான். கூட இருந்த எங்களுக்கு அவன் அலுப்பு காதில் விழவில்லை, உள்ளே நடந்த பேச்சு வார்த்தையின் "பிட்" ஓட்டத்தில் மூழ்கியிருந்தோம்.

பிறகு அந்தக் கடையில் உரையாடல் நின்று மௌனத்திற்குப் பிறகு அவள் “நாளைக்கு தச்சிக்கொடுத்திடு” என்று கூறி சென்றாள்.

"தாழோழி மச்சக்காரண்டா" என்று அலுத்துக்கொண்டோம். நாயர் கடையில் தம் அடிக்கும் பொழுது ஜோசப்பின் லீலைகளை கேட்டுக் கொண்டிருப்போம். அன்று இரவு நாங்கள் இரவு எட்டுமணிக்கு நாயர் கடையில் தம் அடிக்க சந்தித்துக் கொண்டோம். அப்பொழுதுதான் அங்கு வந்த மற்றொரு நண்பன் ஜிஞ்சர் அடிக்கலாமா என்று ஆரம்பித்தான். நாயரிடம் அனுமதி வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. நாயர் மற்றவர்களுக்கு கலந்துகொள்ள சோடா, க்ளாஸ் எல்லாம் கொடுப்பார், படிக்கும் பையன்களுக்கு சிகரட்டுக்கு மேல் அனுமதிக்க மாட்டார். வேறு வழியில்லாமல் நாங்கள் ஜோசப்பின் உதவியை நாட வேண்டியிருந்தது.

பிறகு நாயர் கடையில் ஜிஞ்சருக்கு வேண்டிய மற்ற கொசுருகளை வாங்கிக் கொண்டு செட்டில் ஆகிவிட்டோம். ஜோசப் தன் பங்கிற்கு எங்களிடமிருந்து ஒரு கிளாஸ் வாங்கிக் கொண்டு கடைக்குள் போய் விட்டான்.
நாங்கள் வழக்கம் போல் தட்டி மறைவில் கடை கட்ட ஆரம்பித்தோம். ஜோசப் கடை அடைத்துவிட்டு செகண்ட் ரௌண்டுக்கு எங்களுடன் வருவதாக சொல்லிச் சென்றான்.
அப்பொழுது அவன் கடையில் ஒரு பெண் குரல் கேட்டது.

“இன்னா ஜோசப் எனக்கு இந்தா இதை இப்பவே தைத்துக்கொடு, நாளைக்கு ஒரு கல்யானத்துக்கு போகணும்” என்றாள் அவள்.

“இன்னா அஞ்சலை இந்நேரத்துக்கு வந்துகிற, கடைய நான் மூடபோறேன், நாளைக்கு வா” என்றான் ஜோசப்.

“அய்ய நாளைக்கு காலிலே வேனுங்கிறேன், நீ இன்ன ஐய அரை அவர்ல தச்சிகொடேன்” என்றாள் அஞ்சலை.

“அளவு கொனாந்துகிறையா” ஜோசப்.

“இன்னா ஜோசப் என் அளவு தெரியாதா சும்மா தை” என்றாள்.

“அய்ய அளவு இல்லாம எப்படி தைக்கிரதாம்”

“சரி இந்தா”

எங்களுக்கு ரத்த நாளங்கள் எல்லாம் ஓவர் டைம் வாங்கிக் கொண்டிருந்தது.
பிறகு அங்குக் கேட்ட சத்தங்கள் எங்கள் போதையை மேலும் ஏற்றிக்கொண்டிருந்தன.
சற்று நேரத்தில் “அஞ்சலை அஞ்சலை” என்று கத்திகொண்டே ஒருவன் வந்தான்.
அவன் கடைக்குள் போனவுடன் ஒரே சத்தம், ஜோசப்பை வசைமாரி திட்டிகொண்டிருந்தான், நாங்கள் கேட்டிராத சென்னை செந்தமிழில் வார்த்தைகள் தெறித்து ஓடின. வந்தவன் அஞ்சலையின் அப்பன்.

ஜோசப் இரண்டாவது ரௌண்டுக்கு வாராமல் கடையை அடைத்துக் கொண்டு போய் விட்டான்.

இந்த கலாட்டாவெல்லாம் ஓய்ந்து, இரண்டு வாரம் கழித்து நாயர் கடைக்கு சென்றோம்.
ஜோசப் கடையில் இருக்கிறானா என்று எட்டிப் பார்த்த எங்களுக்கு ஆச்சர்யம்.
அஞ்சலை தையல் மிஷனில் அமர்ந்து தைத்துக் கொண்டிருந்தாள்.
ஜோசப் காஜா அடித்துக் கொண்டிருந்தான்
இப்பொழுதெல்லாம் "அஞ்சலை தான் அளவெடுக்கிறாள்" போலும்.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 1 July 2010

மாரியும், மேரியும், பாதாள சாக்கடையும்


பெரிய பெரிய ராட்சத சிமிண்டு குழாய்கள் லாரிகளில் வந்து தெருவை அடைத்து இறக்கும் பொழுதே எங்களுக்கு விளையாட்டு தடைபடப்போவது உறுதியாயிற்று.

நாங்கள் இருந்தத் தெருவில் பாதாள சாக்கடை தோண்டுவதற்கு பணிகள் தொடங்கின.சுமார் ஒரு பத்து பதினைந்து தொழிலாளிகள் மும்முரமாக வேலையில் ஈடுபட்டனர். திங்கள் தொடங்கி வெள்ளி வரை வேலை மும்முரமாக போய்க்கொண்டிருந்தது. அன்று சனிக்கிழமை வழக்கம் போல் வேலைதொடங்குவதற்கு ஆட்கள் வரதொடங்கியிருன்தனர். எங்கள் வீட்டின் முன் இப்பொழுது பெரிய பள்ளம தோண்டத் தொடங்கியிருந்தனர். இப்பொழுது இரண்டுபேர் என் வீட்டின் முன் வேலை செய்துகொண்டிருன்தனர். ஒருவன் கடப்பாரையால் தோண்ட மற்றொருவன் மண்வெட்டியால் மண்ணை பள்ளத்தின் வெளியே வாரிக் கொட்டிக்கொண்டிருந்தான். இருவரும் பேசிக்கொண்டே வேலை செய்துக் கொண்டிருந்தனர். இவர்களுடன் இவர்களது மனைவிமார்களும் தங்கள் கைக்குழந்தைகளை மரத்தடியில் தூளிகட்டி விட்டுவிட்டு சற்று தள்ளி மணல் சலித்துக்கொண்டிருந்தனர்.

அவர்களதுப் பேச்சு இப்பொழுது வாக்குவாதமாக மாறிக்கொண்டிருந்தது. ஒருவன் முதல் நாள் குப்பத்தில் நடந்த கூழ் ஊத்தும் விழாவை விவரித்துக் கொண்டிருந்தான். அவர்கள் தோண்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி “தம்பி இன்ன பேசுறான் பாரு இவன் பெரிய காளி ......லருந்து வந்தா மாதிரிப் பேசறான் பாரு, பதிலுக்கு மற்றொருவன் பெரிய இவரு மேரி ..............லேருந்து வந்தாரு போடாங்க” என்றான். மற்றொருவன் கோவத்தில் கடப்பாரையை ஓங்கி தரையில் குத்தினான். அது மண்ணில் புதைந்து சரிந்து மற்றொருவன் காலில் விழுந்தது. அவன் காலைப் பிடித்துக் கொண்டு மண்ணில் விழுந்தான். அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து மற்றவன் மேல் எறிந்தான். அது அவன் கெண்டைக் காலில் பட்டு ரத்தம் வரத்தொடங்கியது. இதற்குள் அங்கு மற்ற வேலை ஆட்களும் வரவே விஷயம் பெரிசாக ஆரம்பித்து, கூச்சல் அதிகமாகி, அடிதடி ஆரம்பமாகிவிட்டது. அடிபட்ட இருவரும் கட்டிப் பிடித்து சண்டைப் போட்டுக் கொண்டிருந்தனர். கைக்குழந்தையுடன் வந்த மனைவிமார்களை பிடித்து மணலில் தள்ளி விட்டு சண்டையைத் தொடர்ந்தனர். பிறகு கங்காணி (சூப்பர்வைசர்) வந்து அவர்கள் சண்டையை நிறுத்தி சனிக்கிழமை கொடுக்க வேண்டிய கூலியையும் கொடுக்காமல் அவர்களை அனுப்பிவிட்டான்.

விஷயம் இத்துடன் முடியவில்லை. அன்று மாலை அவர்கள் இருந்த குப்பம் தீப்பிடித்து ஏறிய ஆரம்பித்தது. அவர்களது குப்பம் ஏரிக்கரையின் பக்கத்தில் எங்களது தெருவிலிருந்து ஒரு இரண்டு மைல் தள்ளியிருந்தது. நானும் நண்பர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கப் போராடிக் கொண்டிருந்தன. முதலுதவி ஊர்தி வந்து கருகிய உடல்களை வண்டியில் எற்றிக்கொண்டிருந்தன.

இரு ஜாதி சங்க கரை வேட்டிகள் சொகுசு வண்டியில் வந்து இறங்கி அந்தக் குப்ப மக்களிடம் விசாரணை என்ற பெயரில் வெறியை விதைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது எரிந்துக் கொண்டிருக்கும் குடிசையிலிருந்து பாதி கருகிய நிலையில் கைக்குழந்தையுடன் ஒருத்தியை தீயணைப்பு படையினர் வெளியே கொண்டு வந்தனர். கைக்குழந்தை கதறிக் கொண்டிருந்தது. பாதிக் கருகியவள் சண்டையிட்ட இருவரில் ஒருத்தனின் மனைவி. அவளை சிகிச்சைக்காக வண்டியில் ஏற்றினர். தீயணைப்பு படையினரிடமிருந்து கதறும் குழந்தையை சண்டையிட்ட இருவரில் இன்னொருத்தனின் மனைவி வாங்கிக்கொண்டாள்.

அடுத்து நாங்கள் கண்டக் காட்சி எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. குழந்தையை வாங்கிக் கொண்டு அவள் ஓரமாக அமர்ந்து குழந்தையின் அழுகையை நிறுத்த தன் மேலாடையை விலக்கி குழந்தையை மார்போடு அனைத்துக் கொண்டாள். குழந்தையின் கதறல் அடங்கியது.

கரை வேட்டிகள் தங்கள் வெறியாட்டத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தனர். “அந்த ஜாதிக்காரந்தான்பா கொளுத்திக்கிறான்”.

Follow kummachi on Twitter

Post Comment