Tuesday, 6 July 2010

தையல்காரர் ஜோசப்பும் அளவெடுத்த அஞ்சலையும்...........


"இன்னா கன்னிகா அளவு ஜாக்கெட்டு கொடு, நான் எப்படி தைக்கிரதான்" என்று அந்தப் பெண்ணிடம் ஜோசப் சொல்லிக் கொண்டிருந்தான்.

“அட இன்ன தையக்காரரே இன்னொரு ஜாக்கெட்டு வசிக்கினா நான் ஏன் ஒங்கிட்ட வரேன், போ விளையாடாத”.

"அய்ய உன்கிட்ட இன்ன விளையாட்டு, இல்லன்னா வூட்டுக்கு போய், போட்டுகிறத அவுத்துக் கொண்டா" என்று அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருந்தான்.

"அய்ய இத்த அவுத்து போட்டுகின்னு நான் எப்படி தெருவுல வருதான் என்றாள் அவள்".

“அட போம்மா சும்மா பேஜார் பண்ணாத, எம்மாம் துணி கீது பாரு அல்லாத்தையும் நான் ராவிக்குள்ள முடிக்கணும்” என்றான் ஜோசப்.

தட்டி மறைவில் உட்கார்ந்து தம் அடித்துகொண்டிருந்த எங்களுக்கு அவர்களது பேச்சு தெளிவாக காதில் விழுந்தது.
கல்லூரி முடிந்து கோடை விடுமுறையில் வெட்டிபொழுது போக்கிகொண்டிருந்த காலம் அது.

நாயர் கடையில் தம் அடிக்க போவோம், அவர் தான் எங்களுக்கு கடனில் தம் தருவார், ஒரு கடையை பிரித்து நாயர் பொட்டிக் கடையும், ஜோசப் பின் பாதியில் தட்டி மறைவில் டைலர் கடையும் வைத்திருந்தார்கள். அவ்வாறு நாங்கள் நாயர் கடையின் தட்டி மறைவில் இருந்த பொழுது தான் மேற்கூறிய பேச்சுக்கள் எங்கள் காதில் விழுந்தன.
கூட இருந்த மொட்டை குமார் "சப் இன்னா கதை வுடறான் பாரு, நான் ஆல்டேரஷன் செய்யக் கொடுத்த பேண்டை ரெண்டு மாசமாகியும் இன்னும் கொடுக்கவில்லை" என்று அலுத்துக் கொண்டான். கூட இருந்த எங்களுக்கு அவன் அலுப்பு காதில் விழவில்லை, உள்ளே நடந்த பேச்சு வார்த்தையின் "பிட்" ஓட்டத்தில் மூழ்கியிருந்தோம்.

பிறகு அந்தக் கடையில் உரையாடல் நின்று மௌனத்திற்குப் பிறகு அவள் “நாளைக்கு தச்சிக்கொடுத்திடு” என்று கூறி சென்றாள்.

"தாழோழி மச்சக்காரண்டா" என்று அலுத்துக்கொண்டோம். நாயர் கடையில் தம் அடிக்கும் பொழுது ஜோசப்பின் லீலைகளை கேட்டுக் கொண்டிருப்போம். அன்று இரவு நாங்கள் இரவு எட்டுமணிக்கு நாயர் கடையில் தம் அடிக்க சந்தித்துக் கொண்டோம். அப்பொழுதுதான் அங்கு வந்த மற்றொரு நண்பன் ஜிஞ்சர் அடிக்கலாமா என்று ஆரம்பித்தான். நாயரிடம் அனுமதி வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. நாயர் மற்றவர்களுக்கு கலந்துகொள்ள சோடா, க்ளாஸ் எல்லாம் கொடுப்பார், படிக்கும் பையன்களுக்கு சிகரட்டுக்கு மேல் அனுமதிக்க மாட்டார். வேறு வழியில்லாமல் நாங்கள் ஜோசப்பின் உதவியை நாட வேண்டியிருந்தது.

பிறகு நாயர் கடையில் ஜிஞ்சருக்கு வேண்டிய மற்ற கொசுருகளை வாங்கிக் கொண்டு செட்டில் ஆகிவிட்டோம். ஜோசப் தன் பங்கிற்கு எங்களிடமிருந்து ஒரு கிளாஸ் வாங்கிக் கொண்டு கடைக்குள் போய் விட்டான்.
நாங்கள் வழக்கம் போல் தட்டி மறைவில் கடை கட்ட ஆரம்பித்தோம். ஜோசப் கடை அடைத்துவிட்டு செகண்ட் ரௌண்டுக்கு எங்களுடன் வருவதாக சொல்லிச் சென்றான்.
அப்பொழுது அவன் கடையில் ஒரு பெண் குரல் கேட்டது.

“இன்னா ஜோசப் எனக்கு இந்தா இதை இப்பவே தைத்துக்கொடு, நாளைக்கு ஒரு கல்யானத்துக்கு போகணும்” என்றாள் அவள்.

“இன்னா அஞ்சலை இந்நேரத்துக்கு வந்துகிற, கடைய நான் மூடபோறேன், நாளைக்கு வா” என்றான் ஜோசப்.

“அய்ய நாளைக்கு காலிலே வேனுங்கிறேன், நீ இன்ன ஐய அரை அவர்ல தச்சிகொடேன்” என்றாள் அஞ்சலை.

“அளவு கொனாந்துகிறையா” ஜோசப்.

“இன்னா ஜோசப் என் அளவு தெரியாதா சும்மா தை” என்றாள்.

“அய்ய அளவு இல்லாம எப்படி தைக்கிரதாம்”

“சரி இந்தா”

எங்களுக்கு ரத்த நாளங்கள் எல்லாம் ஓவர் டைம் வாங்கிக் கொண்டிருந்தது.
பிறகு அங்குக் கேட்ட சத்தங்கள் எங்கள் போதையை மேலும் ஏற்றிக்கொண்டிருந்தன.
சற்று நேரத்தில் “அஞ்சலை அஞ்சலை” என்று கத்திகொண்டே ஒருவன் வந்தான்.
அவன் கடைக்குள் போனவுடன் ஒரே சத்தம், ஜோசப்பை வசைமாரி திட்டிகொண்டிருந்தான், நாங்கள் கேட்டிராத சென்னை செந்தமிழில் வார்த்தைகள் தெறித்து ஓடின. வந்தவன் அஞ்சலையின் அப்பன்.

ஜோசப் இரண்டாவது ரௌண்டுக்கு வாராமல் கடையை அடைத்துக் கொண்டு போய் விட்டான்.

இந்த கலாட்டாவெல்லாம் ஓய்ந்து, இரண்டு வாரம் கழித்து நாயர் கடைக்கு சென்றோம்.
ஜோசப் கடையில் இருக்கிறானா என்று எட்டிப் பார்த்த எங்களுக்கு ஆச்சர்யம்.
அஞ்சலை தையல் மிஷனில் அமர்ந்து தைத்துக் கொண்டிருந்தாள்.
ஜோசப் காஜா அடித்துக் கொண்டிருந்தான்
இப்பொழுதெல்லாம் "அஞ்சலை தான் அளவெடுக்கிறாள்" போலும்.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

'பரிவை' சே.குமார் said...

nalla irukkungoooooo unga kathai.

Santhappanசாந்தப்பன் said...

ஹி ஹி.. ஜூப்பரு...

தப்பு செய்யுங்க... அப்பனுக்கு தெரியாம செய்யுங்க!!

பித்தன் said...

அஞ்சலைக்கு சரியா அளவெடுக்கத் தெரியாததுனாலதான் ஜோசப்பு காஜா எடுக்கிறானோ.....

Jey said...

ஹஹஹஹா. கல்லூரிபருவத்தின் கலகலப்புகள்.:)

ப்ரியமுடன் வசந்த் said...

சூப்பர்ப்..ரைட்டிங்

Chitra said...

கலக்கல் கதை!

நிகழ்காலத்தில்... said...

நல்ல எழுத்து நடை, கண்முன்னே நடந்ததை நிறுத்துகிறது. முடிவு யதார்த்தமானதாக இருந்தது..

வாழ்த்துகள்..

Tamil Boy Baby Names said...

அருமையான பதிவு.. நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.