கிளம்பிட்டாங்கையா, கிளம்பிட்டாங்கையா.
சீர்காழியை அடுத்த பூம்புகாரில் வன்னியர் மகளிர் மாநாடு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மனைவியார் சரஸ்வதி அம்மாள் தலைமையில் நடந்தது. ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, வன்னிய சங்க தலைவர் குரு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, பசுமை தாயகம் தலைவரும், ராமதாஸின் மருமகளுமான சவுமியா அன்புமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மற்றும் பலர்னா யாருங்க, மருத்துவர் ஐயாவோட, மாமன், மச்சான், கொழுந்தியா, குஞ்சு, குளுவான்கள் எல்லோருமா.
அது சரி அப்போ குடும்ப பொதுக்குழு கூட்டம்னு சொல்லுங்க.
கூட்டத்தில் காடுவெட்டி குரு பேசுகையில்,
தமிழகத்திலேயே மிகப்பெரிய ஜாதி வன்னிய ஜாதி. ஆனால் இன்று ஒடுக்கபட்டு அரசியல் கட்சியிடம் கையேந்தும் நிலை உள்ளது. 2 கோடி வன்னியர்கள் ராமதாஸ் தலைமையில் அணி திரள வேண்டும்.
இரண்டு கோடிபேர் தமிழ் நாட்டுல இருக்காங்களா, அப்படின்னா 33% சொல்லுங்க.
1952ல் இருந்து நம் வன்னிய மக்களுக்கு கல்வி, சமூகம், வேலைவாய்ப்பு என இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
அப்படிங்களா, அப்போ மருத்துவர் ஐயா, சின்ன ஐயா எல்லோரும் அண்டார்டிகாவுல படிச்சாங்களா?
ஏனுங்க சிறுபான்மையினருக்குத்தான் இட ஒதுக்கீடுங்கிறாங்க, நீங்க தமிழ்நாட்டுல முப்பத்தி மூணு விழுக்காடும், பாண்டில அறுபத்தைந்து விழுக்காடும் இருக்கிங்களே, எப்படி சிறுபான்மை எங்க மர மண்டைக்கு ஒன்னும் புரியல.
அனைவரும் சாதி சங்கம் வைக்கும்போது வன்னியர் சங்கம் வைத்தால் தப்பா?
தப்பே இல்லைங்க? ஏனுங்க நாட்டுல ஜாதியே ஒழியனும்முன்னு எல்லோரும் கூவிக்கிட்டு இருக்காங்க? ஏதோ சொல்றாங்களே இறையாண்மை அப்படி இப்படின்னு இப்படியெல்லாம் பேசுனா, அதுக்கு குந்தகம் வராதா?
அப்படியே கட்சி பெயரையும் வன்னியர் முன்னேற்ற கழகம்முன்னு மாத்திடுங்க. பா.ம.க. ன்னா மக்கள் தப்பா எடுத்துக்குறாங்க. “பாசமிகு மகன் கட்சி”ன்னு சொல்லுறாங்க.
எனவே எந்த வன்னியனும் தி.மு.க., அ.தி.மு.க. என எந்த கட்சியிலும் இருக்கக் கூடாது.
அங்கே இருந்து எல்லாம் வந்தாங்கன்னா தேர்தல் சீட்டு கேப்பானுங்க, அப்புறம் உங்க இடத்துக்கு ஆப்பா ஆயிடும், பாத்து பேசுங்க சாமியோவ்.
வன்னியர் ஓட்டுகள் பா.ம.க.வுக்கு என்று முடிவு எடுத்தால் அடுத்த முதல்வர் அன்புமணி தான் என்றார் குரு.
அது சரி, இது மாதிரி தான் இன்னும் ஒரு ஐந்து ஆறு பேர் கனவு கண்டு கிட்டு இருக்கானுங்க. ரெண்டு மூணு நடிகர்கள் வேறே படம் சரியா ஒடலை முதலமைச்சர் ஆகணும்முனு சொல்லிக் கொண்டிருக்காங்க. ஏற்கனவே தமிழ் நாட்டுல இரண்டு நிரந்தர முதல்வர் இருக்காங்க.
பார்த்து பேசுங்கப்பா. மைக் கெடைச்சா எது வேணா பேசலாம்னா, அப்புறம் சொந்த செலவில் சூனியம் வச்சிக்க வேண்டியதுதான்.
8 comments:
வெட்கம் கெட்டவர்கள் !
காடு வெட்டி குரு போன்ற நபர்கள் இப்படியெல்லாம் பேசுவதுதான் நம் ஜனநாயகத்தின் சிறப்பு.இதில் மகா கேவலம் என்னவென்றால் ஜாதி வெறியை கொண்டாடும் இந்த கூட்டங்கள் எல்லாம் தவறாமல்
பெரியார் படத்தையும், அம்பேத்கர் படத்தையும் தங்கள் போஸ்டர்களில் போட்டு கொள்வதும்தான்.
இவர்களின் சாயம் வன்னிய பெருமக்களிடையே வெளுத்து போய்விட்டதால் ஆத்திரப்படுகிறார்.
வெறும் காமெடிபீஸ்!!
ஆனாலும் அன்பு மணி பாவம் பாஸ்..
இந்த வயதிலும் அப்பா சொல்லு மீறாம, மண்டையாட்டும் குடுப்பினை யாருக்கு கிடைக்கும்...
ஹி..ஹி
மாணிக்கம் ஸார் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.
இளைஞர்கள் மனதில் ஜாதி வெறி இல்லை, ஆனால் குரு போன்றவர்களால் உசுப்பப் படுவதுதான் உண்மை.
வாங்க பட்டாபட்டி, வருகைக்கு நன்றி.
//
ஏனுங்க சிறுபான்மையினருக்குத்தான் இட ஒதுக்கீடுங்கிறாங்க, நீங்க தமிழ்நாட்டுல முப்பத்தி மூணு விழுக்காடும், பாண்டில அறுபத்தைந்து விழுக்காடும் இருக்கிங்களே, எப்படி சிறுபான்மை எங்க மர மண்டைக்கு ஒன்னும் புரியல.//
ஆமாம்பா.. ஆமாம்... இத கவனிக்காம விட்டுடோமே...
// அப்படிங்களா, அப்போ மருத்துவர் ஐயா, சின்ன ஐயா எல்லோரும் அண்டார்டிகாவுல படிச்சாங்களா? //
வீட்லேயே டியூசன் எடுத்து படிச்சாங்களாம்..
அன்பு மணி mpஆவதற்கே அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் இவர்கள். அன்பு மணியை வைத்து நீங்கள் காமெடி செய்ய வில்லையே குரு சார்....
இதெல்லாம் தள்ளாட்ட பேச்சு இனத்துக்கு நாம சீரியஸ் ஆவகூடாது. குரு ஒரு காமடி பீசு விடு பாஸ் நம்ம தலீவரு இதுக்கும் ஏதாவது லெட்டர் போடப் போறாரு.....
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.