இன்று காலையில் ஒரு பதிவுப் போட்டேன் “தையல்காரர் ஜோசப்பும் அளவெடுத்த அஞ்சலையும்” என்று. இது இப்பொழுது தமிழிஷில் வெளியாகியிருக்கிறது.
சிக்கல் பின்னூட்டங்களை வெளியிடுவதில். டாஷ் போர்டில் முதலில் “3 comments to be moderated” என்று வந்தது. அதை க்ளிக்கிய பொழுது நேராக “No moderated comments found” என்று வருகிறது. இதில் பித்தன், ப்ரியமுடன் வசந்த், ஜெ முதலானோர் பின்னூட்டங்கள் அடக்கம்.
சரி இங்கிருந்து சரிப்பட்டு வராது என்று ஜி மெயிலிருந்து வெளியிட்டுப் பார்த்தேன். கொடநாட்டில் போய் குப்புறப் படுத்தா மாதிரி பின்னூட்டம் வரமாட்டேங்குது. அதாலதான் இந்தப் புலம்பல்.
இந்தக் கணினி சனியனை கொத்தி கொத்தி பதிவு போடத்தான் தெரியும், என் கணினி அறிவு அவ்வளவுதான். அதற்கு மேல் குழப்பம் என்றால் “பப்பறேபே” என்று உட்கார்ந்துவிடுவேன்.
ஏற்கனவே நான் முதலில் ஆரம்பித்த வலைப்பூ ஏதோ ஒரு நாதாரி உதவியில் வைரஸ்ல சிக்கி சின்னா பின்னமாகி, எலி கொதறிப் போட்ட வலை போல் ஆகி கூகிள ஆண்டவரிடம் முறையிட்டும் ஒரு மயிரும் புடுங்கவில்லை.
ஒரு புலம்பலுக்கு பிறகு அண்ணன் “நைஜீரியா ராகவனின்” அறிவுரையின் பேரில் புதிய வலைப்பூ தொடங்கி மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். போன வலை பூவில் ஒரு முப்பது இடுகைகளும், முப்பதாயிரம் ஹிட்சுகளும், இருபத்தைந்து பாலோயர்களும் அபிட் ஆகிவிட்டது.
சமீபத்தில் நான் செட்டிங்கில் ஒன்றும் மாற்றம் செய்யவில்லை. இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், இந்தப் பிரச்சினை எனக்கு மட்டும் தானா இல்லை என் போல் பாவப்பட்ட ஜென்மங்கள் வேறு யாரவது உண்டா?. அப்படி என்றால் இதற்கு என்ன செய்ய வேண்டும்?.
கூகிள ஆண்டவரிடம் முறையிட்டால் சரியாகுமா? அவருக்கு ஏதாவது நேந்துக்கனுமா? இல்லை அவர் கோவிலில் நடக்கும் “கும்பாபிஷேகம்” காரணமா?
இதற்கு யாரவது வழி சொன்னால் அவர்களுக்கு என் ராஜ்யத்தில் ஒரு பாதியும், கொருக்குப் பேட்டை டாஸ்மாக்கில் என் பெயர் சொல்லி இரண்டு கட்டிங்கும் அடிக்கலாம்.
மறக்காமல் கடைக்காரரிடம் “கொருக்குபெட்டை கும்மாச்சி” என்று சொல்லவும். அவர் தர மறுத்தால் அவரிடம் வவுச்சர் பெற்று கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
கொருக்கு பேட்டை கும்மாச்சி
6/9 கொலைகாரன் சந்து,
டுபாக்கூர் நகர்,
கொருக்குப் பேட்டை
பின்கோடு: 111111
அய்யா பெரியோர்களே தாய்மார்களே, இன்னும் இண்டு இடுக்கில் இருக்கும் எல்லா பெரிய மனுஷங்களும் கொஞ்சம் பார்த்து எதாவது செய்யுங்க.
இப்படிக்கு
கும்மாச்சி
7 comments:
The problem just got fixed. :-)
நன்றி சித்ரா, பாதி ராஜ்ஜியம் பொழைச்சுது போங்க.
எல்லாம் அமெரிக்க உளவுத்துறையும், பிளாக்கரும் செய்த சதிவேலை. நான் இன்னைக்கு முழுக்கப்பட்ட அவஸ்தை கொஞசநஞ்சமல்ல. எனக்கும் இதே கதிதான்
கும்மாச்சி ....உங்க புலம்பல்தான் என் புலம்பலும்.அழுதிட்டு இருந்தேன்.
இப்போ சிரிப்பாயிருக்கு.
சரி சரி...இப்போ சரியாயிடிச்சுன்னு
நினைக்கிறேன் !
அண்ணே சனியன்தான் சரியாயிடிச்சே இதுக்கு ஏதாவது பார்டி..... கொருக்குபேட்டைக்கு குறுக்கு வழியில வந்துடுறேன்.....
ஒரே பிரச்சினைப்பா
now its ok
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.