அந்தப் பேருந்தில் இரண்டுப் பேருந்து கொள்ளும் அளவு கூட்டம். எல்லாம் அலுவலகம், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் கூட்டம். அடுத்த நிறுத்தத்தில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் ஏறிக்கொண்டார்கள். அந்தப் பெண் முண்டியடித்துக் கொண்டு என்னருகே வந்து நின்றாள். அவளைப் பார்த்தால் அலுவலகம் செல்பவள் மாதிரி தோன்றவில்லை. என் முன்னால் நின்ற இளைஞனின் மேல் அவள் உரசினாள். அவளின் எண்ணம் எனக்கு விளங்கிவிட்டது, இளைஞன் கிறங்கும் நேரம் அவன் பர்ஸ் அடிக்கப்பட்டு கை மாறி அடுத்த இறக்கத்தில் இறங்கிச் சென்றுவிடுவார்கள்.
நான் இளைஞனை உஷார்ப் படுத்தினேன். அடுத்த இறக்கத்தில் நான் இறங்கி தெருவின் எதிர் புறம் உள்ள நிறுத்தத்தில் வேறு பேருந்து பிடிப்பதற்கு தெருவைக் கடந்தேன். அப்பொழுது என்னை நோக்கி வேகமாக வந்த ஆட்டோ என்னைக் கடந்து பின் சக்கரத்தை என் காலின் மேல் ஏற்றிச் சென்றது. நான் காலைப் பிடித்துக் கொண்டு நிமிருவதற்குள் ஆட்டோ எதிரே உள்ள சந்தில் திரும்புவதைக் கவனித்தேன்.
அந்தப் பேருந்துப் பெண் என்னை பார்த்து நாக்கை துருத்திக் காட்டிவிட்டு சென்றாள்.
ரசித்த கவிதை.
நதியின் பிழை அன்று நறும்புனல்
இன்மை அற்றே
பதியின் பிழை அன்று பயந்து
நமைப் புரந்தான்
மதியின் பிழை அன்று மகன்பிழை
அன்று மைந்த !
விதியின் பிழை இதற்கு என்னை
வெகுண்டது என்றான்.
................கம்பன்
நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி
வேறு யாரம்மா ?
.........கண்ணதாசன்
ஆஹா என்ன கருத்து ஒற்றுமை
நகைச்சுவை
அந்த இளைஞனும், யுவதியும் எதிர் எதிர் திசையில் வேகமாக காரை ஒட்டிக் கொண்டு வந்தார்கள். இருவரும் உணரும் முன்பே இரு வண்டிகளும் மோதிக் கொண்டு, தெருவின் எதிர் புறம் உள்ள புல்வெளியில் தூக்கி எறியப் பட்டனர். நல்ல வேலை இருவருக்கும் அடிபடவில்லை. கார் இரண்டும் அடித்து நொறுங்கிப் போயிருந்தது.
இளைஞன் அவளிடம் “நல்ல காலம் பார்த்தாயா எல்லாம் கடவுள் செயல், நாமிருவரும் தப்பியுள்ளோம். தனியாகவும் உள்ளோம். நாமிருவரும் இணைவோம்” என்றான்.
ஆமாம் என்று சொல்லிக் கொண்டே அவள் தன் காரின் அருகே சென்று உடைந்த காரிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்தாள். பார்த்தாயா என் கார் சுக்குநூறாக உடைந்தாலும் இந்த வைன் பாட்டில் உடையவில்லை. இதுவும் கடவுள் செயல்தான்.
நாமிருவரும் இதைக் குடித்துவிட்டு ஜாலியாக இருப்போம் என்றாள். பின்பு பாட்டிலை திறந்து அவனிடம் கொடுத்தாள்.
அவன் அதில் பாதியை குடித்து விட்டு அவளிடம் கொடுத்தான். இல்லை எனக்கு கொஞ்சம் போதும் இன்னும் குடி” என்றாள்.
அவன் மேலும் குடித்துவிட்டு அவளிடம் பாட்டிலை கொடுத்தான்.
பிறகு அவன் அவளிடம் “சீக்கிரம் குடி, பின் ஜாலியாக இருக்கலாம் அதோ பார் அங்கு ஒரு மறைவிடம் இருக்கிறது, என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்றான்.
“இல்லை போலிசுக்கு போனில் சொல்லியிருக்கிறேன் எப்பொழுது வருவார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.
9 comments:
கலக்கல் சரியான பதத்தில் இருக்கிறது
காக்டெயில் சூப்பர் கும்மாச்சி சார்...
காக்டெய்ல் சூப்பர். நீங்களும் கவுஜயா!!!!???..
கலக்குங்க. அம்மனிக வம்புக்கு போகதீங்கன்ணே.
கும்மாசியண்ணே எவீட்டுபக்கம், கொல்லநாளா ஆளக்காணோம்?. விலாசம் மறந்துபோச்சா?.
http://pattikattaan.blogspot.com/2010/08/blog-post.html
nallave kalakareenga, aiya....thodarattum!
ஜோக் உங்க அனுபவமா தல:-)))
:))
ஆப்புன்னா இதுதான் ஹா..ஹா..
நல்ல பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஆப்பு சூப்பர் ....
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.